இளஸ்... மனஸ் ... (44)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
00:00

அன்பு சகோதரி ஜெனிபருக்கு,
என் உள்ளத்தின் குமுறல்களை உங்களிடம் கொட்டினால் தான் என் மனம் ஆறுதல் அடையும். எத்தனை நாட்களுக்கு தான் ஏன்... ஏன்... என்ற கேள்வியுடனும், கண்ணீருடனும் நான் வாழ்நாளை செலவழிப்பது.
மத்திய தர குடும்பத்தை சேர்ந்த நான், அரசியல் பலம் மிக்க குடும்பத்தில் மருமகளானேன். எல்லாருக்கும் உதவி செய்து, இருப்பதில் சந்தோஷமாக வாழ்ந்த நான், பெருஞ்செல்வந்தர் குடும்பத்தில் மருமகளாகியும் என் மனதில் சந்தோஷம் இல்லை.
என் மாமனார் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கோடி கோடியாக பணத்தை குவித்துள்ளார். என்ன பயன்? என் கணவர் ஒரே மகன். எங்களது வாரிசுக்கு மன வளர்ச்சி சற்று கம்மி. அதாவது, 'ஸ்பெஷல் சைல்ட்!' அவனை பார்க்கும் போதெல்லாம் என் மனம், துடிதுடித்து போகிறது. காரணம், இவ்வளவு பரந்த சொத்துக்களின் வாரிசு என் மகன் மட்டுமே.
அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தால், அதுவும், 'ஸ்பெஷல் சைல்ட்' ஆகத்தான் பிறக்கும் என்கின்றனர் டாக்டர்கள்.
என்னால் கதறி அழுவதை தவிர, வேறுவழி தெரியவில்லை. ஏன், எனக்கு மட்டும் இந்த நிலமை... ஒருவேளை, என் மாமனார் செய்த பாவங்களின் விளைவு தான் இதற்கு காரணமா? என் கணவர் பணத்திலேயே வளர்ந்தவர். பணக்கார வாரிசுகளின் அத்தனை கெட்ட பழக்கங்களின் மொத்தம் உருவம் அவர். என் மனபாரத்தை உங்களிடம் இறங்கி வைத்து விட்டேன்... பதில் சொல்லுங்க சகோதரி.

உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது சகோதரி. தங்களது வாரிசுகளுக்காக, ஊரை அடித்து உலையில் போட்டு சிலர் சம்பாதிப்பர். ஆனால், அந்த வாரிசுகள் இப்படி பிறப்பதற்கு இவர்களே காரணமாகி விடுகின்றனர்.
பிள்ளைகளுக்கு கோடி கோடியா சொத்தை சேர்த்து வைக்கிறோமா இல்லையோ... புண்ணியத்தை சேர்த்து வையுங்கள். அந்த புண்ணியமே அவர்களை வாழ வைக்கும்.
அநியாய வட்டி வாங்குபவர்களில் சிலருக்கு வாரிசு இல்லை... அவர்கள் டாக்டரிடம் கோடி கோடியாக பணத்தை செலவழித்து விட்டு, உட்கார்ந்திருக்கின்றனர்.
ஒருமுறை, என்னிடம் ஒரு சகோதரி கேட்டாள்...
'மேடம்! எங்க வீட்டில் எத்தனை குடை வாங்கினாலும் தொலைந்து விடுகிறது... எவ்வளவு பத்திரமாக பாதுகாத்தாலும் முடியவில்லை. இது என்ன சாபம் என்றே தெரியவில்லை...' என்றாள்.
நான், 'யாருடைய குடையையாவது வாங்கிட்டு ஏமாத்தினீங்களா!' என்றேன்.
சட்டென்று அவள் சொன்னாள், 'ஆமாம் மேடம்... என் திருமணத்தன்று பயங்கர மழை. மண்டபத்துக்கு வருவதற்காக எங்கள் ஊரில் இருந்த எல்லார் வீட்டிலும் குடைகளை வாங்கி, உறவினர்களை மண்டபத்துக்கு அழைத்து வந்தோம். ஆனால், அந்த குடைகளை நாங்கள் திரும்ப கொடுக்கவே இல்லை...' என்றார்.
'குடை தொலைவதற்கு இவர்களது சாபம் தான் காரணம். உன் தவறை உணரு... ஊருக்கு சென்றால் முடிந்தவரை அந்த குடைகளை வாங்கி திருப்பி கொடு...' என்றேன்.
ஒரு சின்ன குடைக்கே இப்படின்னா... கோடி கோடியான பணத்துக்கு என்ன பலன் கிடைக்கும்?
இப்பவும் ஒன்றும் குறைந்து போகவில்லை. உங்களால் முடிந்த உதவிகளை, 'ஸ்பெஷல் சில்ரன்' ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு செய்யுங்கள். தான, தர்மங்கள் செய்யுங்கள்.
அத்துடன் மனதார ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் நற்காரியங் களை பார்த்து மனம் இறங்கி அடுத்த வாரிசை நல்ல குழந்தையாக கொடுக்கலாம். இந்த குழந்தையின் மன நிலமையும் கொஞ்சம் கொஞ்சமாக சுகமாகலாம்.
நீங்கள் நடந்த காரியங்களையே நினைத்து, வேதனை பட்டு உடல் நிலையை கெடுத்து கொள்ளாமல், கண்ணீரை துடையுங்கள்; உங்களை நாடி வருகிறவர்களுக்கு சந்தோஷமாக உதவி செய்யுங்கள். எல்லாமே நல்லதாக நடக்கும்; நம்பிக்கையே வாழ்க்கை!
அன்புடன்,
ஜெனிபர் பிரேம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X