ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (44)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
00:00

ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி!
என்ன Degrees of comparison படிப்பதற்கு ஜாலியா இருக்கா? குட்...
போன வாரம் கொடுத்த, listஐ மனப்பாடம் பண்ணியாச்சா... இன்னும் ஒரு, list இருக்கு. அதையும் மனப்பாடம் பண்ணிடுங்கப்பா... இந்த listல் வரும் Adjective சொற்களுடன் More, Most என்ற வார்த்தைகள் சேரும்.

Positive - Comparative - Superlative
Beautiful - More beautiful - Most beautiful
Difficult - More Difficult - Most Difficult
Careful - More Careful - Most Careful
Truthful - More Truthful - Most Truthful
Sincere - More Sincere - Most Sincere

இன்னொரு listம் தருகிறேன். இதில் மூன்று நிலைகளிலும் வார்த்தைகள் மாறி மாறி வருவதை பார்ப்போம்!

Positive - Comparative - Superlative
Good - Better - Best
Well - Better - Best
Late - Later - Last / Latest
Bad - Worse - Worst
Much - More - Most
Little - Less - Least

இவற்றை எல்லாம் நன்கு படித்து, மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அடுத்து நாம படிக்கப் போறது, Infinitive. இதை தமிழில், 'வினையெச்சம்' என்று கூறுவோம். அதாவது, ஒரு செயல் முடிவு பெறாமல் இருப்பதை வினையெச்சம் என்பர்.
உதாரணம்:
அவள் மதுரைக்கு போக...
அவன் நடனம் கற்றுக்கொள்ள...
அவள் சமையல் செய்ய...
இதில் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? இப்படி செயல் முடிவமையாமல் பாதியிலேயே இருப்பதை குறிப்பிடுவது தான், Infinitive என்பது. இது ரொம்பவும் சுலபமானது.
Go என்றால், 'போ' என்று பொருள்.
'போக' என்று மாற்றுவதற்கு, to go என்று எழுத வேண்டும்.
அதாவது, Main verbக்கு முன் to என்பதை சேர்த்தால் Infinitive வார்த்தைகளை உருவாக்கலாம். புரியும்படி சொல்றேன்.
1. Cook - சமை - to cook - சமைக்க
2. Write - எழுது - to write - எழுத
3. Dance - ஆடு - to dance - ஆட
4. Sit - உட்கார் - to sit - உட்கார
5. Study - படி - to study - படிக்க
6. Work - செய் - to work - செய்ய
7. Sleep - தூங்கு - to sleep - தூங்க
8. Say - சொல் - to say - சொல்ல
இதை நன்கு படித்து மனதில் வைத்துக் கொண்டால், Infinitive வாக்கியங்கள் அமைப்பது சுலபம்.
Infinitive வாக்கியங்களை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது, முதலில் Main verb உள்ள வாக்கியத்தை எழுதி விட்டு பின், Infinitiveஐ இணைக்க வேண்டும்.
இதை உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Next week சந்திப்போமா... அதுவரை...
பை... பை... வர்ஷிதா!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X