நேஷனல் ஜியோகிராபி புகைப்பட விருது பெற்ற வருண் ஆதித்யா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
00:00

இந்த ஆண்டுக்கான, நேஷனல் ஜியோகிராபி இதழின், சிறந்த புகைப்படமாக, கோவையை சேர்ந்த புகைப்படக்கலைஞர் வருண் ஆதித்தியாவின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதோ... அவரே உங்களிடம் பேசுகிறார்...
நான் வருண் ஆதித்தியா; கோவை மருதமலை அடிவாரம் தான் என் வீடு. அப்பா முரளிதரன், அம்மா பாரதி இருவருமே பேங்க் ஊழியர்கள்; எனக்கு கிடைத்த அற்புதமான பெற்றோர். ஒரே மகன் என்பதற்காக, அவர்களது கனவுகளை எல்லாம் என் மீது திணிக்காமல், என் விருப்பப்படி வாழ வழிவிட்டனர்.
இருவருமே இயற்கை ஆர்வலர்கள் என்பதால், ஆண்டுக்கு ஒரு முறை, விடுமுறையில் இயற்கை சார்ந்த, காடு, மலை போன்ற சுற்றுலா தலங்களுக்கு என்னை அழைத்து செல்வர். இதன் காரணமாக சிறுவயது முதல் இயற்கையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இளநிலை பட்டம் முடித்து, முதுகலை பட்டம் பெற, லண்டன் சென்ற போது தான், புகைப்பட கலை மீது ஆர்வம் ஏற்பட்டது.
அங்கு இருந்தவர்களோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாக, புகைப்படத்தின் நுட்பங்களை, முக்கியமாக, 'காம்போசிஷனை' தெரிந்து கொண்டேன். என் படத்திற்கு வெகுமதியாக, பனாமா நாடுகளுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே எடுத்த படங்களுக்கு இங்கே வரவேற்பு கிடைத்தது.
கோவை திரும்பிய நான், என் பிசினசை பார்த்து கொண்டிருந்தாலும், எனக்குள் இருக்கும் இயற்கை ஆர்வம், அவ்வப்போது என்னை உசுப்பிவிட, கேமராவோடு காடுகளுக்கு கிளம்பிவிடுவேன்.
ஒருமுறை, பறக்கும் தவளையை படமெடுக்க, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஒரு காட்டில், காத்திருந்த போது என் பின்னால் உள்ள மரத்தில் ஒரு பச்சை பாம்பும் என்னை போலவே குட்டித்தவளைகளை பிடித்து உண்பதற்கு காத்திருந்தது.
இதை நான் கவனித்தேன். இந்த பாம்பு விஷமற்றது என்பதை புரிந்து கொண்டதால், பதட்டப்படாமல் அதன் இயல்பு மாறாமல் நிறைய படங்கள் எடுத்தேன். அந்த படங்களில் ஒன்று தான், இன்று எனக்கு சர்வதேச விருதை பெற்றுதந்துள்ளது. விருதுடன் இரண்டு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் கிடைக்கவுள்ளது.
'நேஷனல் ஜியோகிராபி குழுவினர் தங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து வந்த, ௨௦ ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் இருந்து தான், இந்த படத்தை தேர்வு செய்துள்ளனர். இதற்காக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட தேர்வுகளில் வென்று, இப்படம் பரிசை பெற்றுள்ளது.
யானையையும், புலியையும் எடுப்பது மட்டுமே, 'வைல்டு லைப் போட்டோகிராபி' கிடையாது. இந்த புகைப்படக்கலையை நான் யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் பார்த்து, படித்து தான் என்னை வளர்த்துகொண்டேன், காடும், மிருகங்களும் எனக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துள்ளன.
நான் கற்றுக்கொண்டதை, காட்டு வாழ்க்கையின் மூலம் பெற்று கொண்டதை பலருக்கும் கற்றுத்தரலாம் என எண்ணி யுள்ளேன். இதன் மூலம், புகைப்படக் கலையோடு இயற்கையை நேசிக்கவும் கற்றுக் கொள்வர் என்பது என் எண்ணம்.
இவருக்கான இ - மெயில் முகவரி: varunaditya91@gmail.com
கங்கிராட்ஸ் வருண்!
- எல்.முருகராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X