நான் தான் 'ஸ்டிராங்கு!'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
00:00

குட்டீஸ்... உங்களுக்கு பிடிச்ச முட்டை... அதான், 'மம்மீஸ் ஆம்லெட், பாயில்ட் எக்'ன்னு விதவிதமா செய்து தர்றாங்களே அத பத்தி தெரிஞ்சிக்கலாமா...
கோழி முட்டையின் ஓடு, வெள்ளை வெளேர்னு இருந்தால், அது சீமைக்கோழி முட்டை என்றும், பழுப்பு நிறத்தில் இருந்தால் நாட்டுக் கோழி முட்டை என்றும் சொல்வர். பழுப்பு நிறத்தில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையில் சத்து அதிக மென்றும் நினைக்கின்றனர். ஆனால், இரண்டிலும், ஒரே மாதிரியான சத்து தான் இருக்கிறது குட்டீஸ்...
நம்மில் பலர், நாட்டுக் கோழி முட்டை வேண்டும் என்று கடைகளில் கேட்டு வாங்குவர். இதை சாதகமாக்கி, சில கில்லாடிகள் சீமைக் கோழி முட்டையை, டீத்தூள் டிகாக் ஷனில் மூழ்க வைத்து கொடுத்து விடுவர். இதை நாட்டுக் கோழி முட்டை என நினைத்து, கூடுதல் விலையும் கொடுத்து வாங்கி செல்வர் நம் மக்கள்.
சிலர், நாட்டுக் கோழி முட்டையா, சீமைக்கோழி முட்டையா என்று கடைகளில் வாங்கும்போது கவலைப்படுவதில்லை. வீட்டிற்கு சென்று, முட்டையை வேக வைத்துச் சாப்பிடும் போது, மஞ்சள் கரு, 'திக்'கான மஞ்சளாக இல்லையென்றால், அது சத்தான முட்டை கிடையாது என்று நினைக்கின்றனர்.
முட்டையின் மஞ்சள் கரு, அதிக மஞ்சளாக இருப்பதற்கு, 'சாந்தோபில்' எனும் நிறமிகள் தான் காரணம். இந்த நிறமி, பச்சைப்புல்லில் அதிகம் உள்ளது.
நாட்டுக் கோழிகள் மேய்ச்சலுக்கு வெளியே சென்று மேயும்போது, பச்சைப் புற்களை தீனியுடன் சாப்பிடுகின்றன. 'சாந்தோபில்' நிறமிகள் முட்டையின் மஞ்சள் கருவுக்கு செல்வதால், அதிக மஞ்சளாக தோன்றும்.
ஆனால், தற்போது பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகளை கூண்டுகளில் வைத்து வளர்ப்பதால், வெளியில் சென்று பச்சைப் புல்லை தீவனத்துடன் சாப்பிடும் வாய்ப்பு இக் கோழிகளுக்கு கிடையாது.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தீவனங்களை, உணவாகப் பெறுவதால், மஞ்சள் கரு வெளிறிய நிறத்தில் இருக்கும். இதனால் சத்து ஒன்றும் குறையாது குட்டீஸ்.
மஞ்சள் கரு, 'திக்'கான மஞ்சளாக இருப்பதற்காக கோழிப்பண்ணைகளில் இடும் முட்டைகளை, 'யோகா-கோல்டு' என்ற பொருளைத் தீவனத்துடன் சேர்க்கும் முறையும் தற்போது அறிமுகமாகிவிட்டது.
இப்ப சொல்லுங்க குட்டீஸ்... மஞ்சள் கரு திக்கான மஞ்சளாக இருந்தால் என்ன... வெளிறிய நிறத்தில் இருந்தால் என்ன... நமக்கு வேண்டியது சத்துள்ள முட்டைகள் தானே!
வேக வைத்த முட்டையை விட பச்சையாக முட்டையைக் குடித்தால் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. 'ஆன்ட்டி டிரிப்ஸின்' என்னும் உடலுக்கு ஒவ்வாத புரதம், பச்சை முட்டையில் இருக்கிறது.
முட்டையை வேக வைப்பதால் இந்தப் புரதம் அழிந்துவிடும். எனவே எப்பவும் வேகவைத்த முட்டைகளையே சாப்பிடுங்க.
கோடை காலங்களில் முட்டை சாப்பிட்டால் உடலுக்கு சூடு என பலர் நினைப்பதால், கோடையில் முட்டையின் விலையில் சிறிது சரிவு ஏற்படும். இதுவும் வீணான சந்தேகம்தான்.
முட்டை என்பது மிக மிக சத்தாண உணவு. எனவே, தினமும் இரண்டு முட்டை கூட சாப்பிடுங்க; 'ஸ்டிராங்'கா வாழுங்க!
- வி.ராஜேந்திரன்,
கால்நடை துறை மருத்துவர்.(ஓய்வு)

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X