அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

மெய்யாலுமே மட்டையா!
மட்டை என்பது, சென்னை பாஷையில் பல அர்த்தங்களில் வருகிறது. தூங்கறான், புட்டுக்கிட்டான் என்று அர்த்தம்.
நல்லா தூங்கி கொண்டிருப்பவரை எழுப்பி, 'என்ன தூக்கமா?' என கேட்பர். இன்னும் சில பேர் தூங்குவதை போல, 'சீன்' போடுவர். அயர்ந்து தூங்குபவரை எப்படி கண்டறியலாம்... அருகில் சென்று கவனியுங்கள்.
மூடியிருக்கும் இமைகளுக்குள், அவருடைய கண் உருண்டைகள் அங்குமிங்கும் பெண்டுலம் மாதிரி தொடர்ந்து அசைந்து கொண்டு இருந்தால், அவர் ஆழ்ந்து தூங்குகிறார் என்று அர்த்தம்.
இதை கொண்டு, அவர் தூங்குகிறாரா... இல்லை தூங்குவது போல் பாசாங்கு செய்கிறாரா என்று கண்டுபிடித்து விடலாம்.

சைக்கிளுக்காக நிலா!
தற்போது பெருகிவரும் வாகன நெரிசலால், சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு சரியான பாதுகாப்பில்லை. இதை கருத்தில் கொண்டு, போலந்து நாட்டில் உள்ள, ஓல்ஸ்டைன் நகர நிர்வாகம், இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு, பாதுகாப்பு அளிக்கும் விதமாக, ஜொலிக்கும் மிதிவண்டி பாதையை உருவாக்கியுள்ளனர்.
இந்த பாதை, 'லூமினோபோர்' என்ற, ஒரு வகை துகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த துகள், சூரிய ஒளியின் மூலம் ஆற்றல் பெற்று, அதன் மூலம், 10 மணி நேரம் வரை வெளிச்சத்தை தரும். இதனால், இரவு நேரத்தில், நெடுஞ்சாலைகளில் வரும் கனரக வாகன ஓட்டிகள், மிதிவண்டி பாதையை பிரித்தறிய முடியும்.
இதன் மூலம், இரவு நேரங்களில் மிதிவண்டிகளை ஓட்டிச் செல்பவர்கள், பாதுகாப்பாக சாலையில் பயணிக்க முடியும். மேலும், 'லூமினோபோர்' துகள் பல வண்ணங்களில் கிடைத்தாலும், நீல நிறம் நிலவொளியில் ஜொலிக்கும் என்பதால், அந்நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

செவ்வாயில் தேர்தல் ஏன்?
அமெரிக்கத் தேர்தல், ஏன் செவ்வாய்க்கிழமை நடக்கிறது என்ற கேள்வி பலருக்கு எழுவது சகஜம். இது குறித்து விசாரித்தபோது, சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.
புரட்சிக்கான போராட்டத்தின் போது, அமெரிக்கா விவசாய நாடாகவே இருந்தது. விடுதலை யானதும் அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, 'நவம்பர் முதல் வாரத்தில், முதல் புதன் கிழமைக்கு முந்தைய செவ்வாய் கிழமை தேர்தல் நடத்த வேண்டும்' என்று சொல்கிறது அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம்.
வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை, வேலை நாள் என்பதால், அடுத்து ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வைக்க முடியாது. ஏனென்றால், ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்கள் தவறாமல் தேவாலயத்துக்கு செல்வர்; அன்று எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.
அதேபோல, புதனன்று நடக்கும் சந்தைக்கு, விளை பொருட்களை எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகளை திங்கள் கிழமையிலிருந்து செய்ய ஆரம்பிப்பர். பின், புதன்கிழமை சந்தையில் தங்கள் பொருட்களை விற்றுவிட்டு வருவர். மீதமிருப்பது செவ்வாய் கிழமை ஒன்றுதான். அந்த நாளை தேர்வு செய்து அதே நாளில் தேர்தல் நடத்துகின்றனர்.
ஒவ்வொரு அமெரிக்க தேர்தலும், செவ்வாய்கிழமை தான் நடைபெறும்.

உங்களுடன் எவை பறக்கலாம்?
இந்தியாவிலிருந்து விமானத்தில் வெளிநாடு போகும் போது, எவற்றை கொண்டு போகலாம்; எவற்றை கொண்டு போக கூடாது... அதே போல், வெளிநாட்டிலிருந்து, இந்தியாவுக்கு விமானத்தில் வரும் போது, எதை கொண்டு வரலாம்; எதையெல்லாம் கொண்டு வர கூடாது... இதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.
போதை பொருள், CITES, WLO எனப்படும் சர்வதேச நிறுவனங்களால் தடை செய்யப்பட்ட தாவர, விலங்கு வகைகள், 'ஸ்கோமெட்' சிறப்பு வேதி பொருட்கள், உயிரினங்கள், ரசாயனங்கள் உபகரணங்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் தொல்பொருட்கள் ஆகியவை அனைத்தும், இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல தடை உள்ளது.
உரிமம் வாங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், அனுமதித்த விலங்கு மற்றும் தாவர வகைகள் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல அனுமதியுண்டு. இந்திய பணம், 25 ஆயிரம் ரூபாய் வரை எடுத்து செல்லலாம்.
அதற்கு மேல், 'ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா' அனுமதித்துள்ள, அந்நிய செலவாணி பரிமாற்ற நிறுவனங்களிலிருந்து முறையாக பெறப்பட்ட அமெரிக்க டாலர்கள், ஐயாயிரத்துக்கு இணையான வெளிநாட்டு கரன்ஸிகளையும் எடுத்து செல்லலாம்.
சொந்த உபயோகத்திற்கான பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பு வரை இந்திய குடிமக்களுக்கு அனுமதி உண்டு. சொந்த உபயோகம் என்பதில் தங்க நகைகள் அடங்காது. ஆனால், ஒரு ஆண்டு வெளிநாட்டில் தங்கிய இந்திய ஆண் குடிமகன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், இந்திய பெண் குடிமகள் என்றால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் எடுத்து வரலாம்.
போதைப் பொருள், முறையான அனுமதியற்ற, மறைத்து வைத்து கடத்த முற்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிப்பொருட்கள், போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள் போன்ற விஷயத்தில் கைது நடவடிக்கை வரும்.
மேலும், சுங்கத்தீர்வையை தவிர்ப்பதற்காக, இந்திய ரூபாய்க்கு, 20 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைரம், சார்புக் கற்கள் மற்றும் எலெக்ட்ரானிக் உபகரணங்களை மறைத்து வைத்து கடத்த முற்பட்டாலும், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இது தவிர, குற்றத்தின் இயல்பு, அதன் தீவிரம், பயணியின் பங்கு ஆகியவற்றை பொறுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களை,www.cbec.gov.in என்ற இணைய தளத்திலும், Indian customs Traveller Guide என்கிற மொபைல் APP மூலமும், தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X