வேர்ட டிப்ஸ்.. | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
வேர்ட டிப்ஸ்..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
00:00

திரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.

திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும். இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

எண்களுடன் பட்டியல் அமைக்க: நாம் டாகுமெண்ட்களை வேர்ட் புரோகிராமில் அமைக்கும் போது, எண்களுடன் கூடிய பட்டியல் வரிசைகளை உருவாக்குகிறோம். எடுத்துக் காட்டாக, கட்டுரை ஒன்றை அமைக்கையில், ஒவ்வொரு புதிய தகவலும் ஓர் எண்ணுடன் அமைக்கிறோம். வேர்ட் புரோகிராமில், இந்த செயல்பாடு மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில் வசதி தரப்பட்டுள்ளது. எண்களுடன் பட்டியல் வரிசை அமைக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
உங்களுடைய பட்டியலை டைப் செய்திடவும். ஒவ்வொரு தகவல் அமைப்பின் முடிவிலும் என்டர் அழுத்தவும். ஒரு குறிப்பிட்ட தகவல், ஒரு வரிக்கும் மேலாக இருந்தால், ஒவ்வொரு வரி முடிவிலும், என்டர் அழுத்த வேண்டாம். அதில் உள்ள டெக்ஸ்ட் தானாக மடக்கப்பட்டு அடுத்த வரிக்கு வருமாறு அமைக்கவும்.
இனி, அனைத்து குறிப்புகள் அல்லது தகவல்களைத் தேர்ந்தெடுக்கவும். ரிப்பனில், ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
பாராகிராப் குரூப்பில், numbered list என்ற டூலில் கிளிக் செய்திடவும். இனி தானாக, எண்களுடன் கூடிய பட்டியலாக, உங்கள் தகவல்கள் அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.

வேர்ட் டாகுமெண்ட்டின் அமைப்பினை அறிந்து கொள்ள: வேர்ட் புரோகிராமில், நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் குறித்த அனைத்து புள்ளி விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்ல டூல் ஒன்று உள்ளது. டாகுமெண்ட் ஒன்றில், எத்தனை பக்கங்கள், சொற்கள், எழுத்துகள் சொற்கள், பத்திகள் உள்ளன என்று அந்த டூல் பட்டியலை நமக்குத் தருகிறது. இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.
முதலில், சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறக்கவும். பின்னர் “Review” டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள “Proofing” பிரிவில், “Word Count” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது “Word Count” பாக்ஸ் காட்டப்படும். இதில் பக்கங்கள், சொற்கள், ஸ்பேஸ் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், ஸ்பேஸ் உடன் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், பாராக்கள் மற்றும் வரிகள் ஆகியவை எத்தனை என்று பட்டியல் போட்டுக் காட்டப்படும்.
டாகுமெண்ட்டின் பக்கங்கள் மற்றும் சொற்கள் குறித்த தகவல்களை வேர்ட் விண்டோவின் கீழாக உள்ள ஸ்டேட்டஸ் பாரிலும் காணலாம். இதற்கு, உங்கள் டாகுமெண்ட் “Print Layout” அல்லது “Draft” வியூவில் இருக்க வேண்டும். வியூ டேப் பயன்படுத்தி இதனைப் பெறலாம். பெற்ற பின்னர், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்தால், மேலும் என்ன தகவல்களை ஸ்டேட்டஸ் பாரில் காட்டும்படி அமைக்கலாம் என்பது தெரியவரும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X