கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
00:00

கேள்வி: சென்ற இதழில், விண்டோஸ் 10 இயக்கத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், அடோப் ப்ளாஷ் பிளேயரின் இயக்கத்தினை நிறுத்துவது குறித்த தகவல் படித்தேன். என் கம்ப்யூட்டரில் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்துகிறேன். இதில் அடோப் ப்ளாஷ் பிளேயர் இயக்கத்தை நிறுத்துவதற்கான வழி எங்குள்ளது? விளக்கமாகப் பதில் தரவும். நன்றி.
என். தியாகராஜன், கும்பகோணம்.
பதில்:
உங்கள் பிரவுசரில் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டே அமைக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக, ப்ளாஷ் பிளேயரை மட்டுமே சார்ந்து அமைக்கப்படும் இணைய தளங்கள் மட்டுமே, அதை இயக்குமாறு பாப் அப் செய்தி தரும். எட்ஜ் பிரவுசரில், ப்ளாஷ் இயக்கப்பட்டிருந்தால், அதனை நிறுத்தி வைக்க வழி தரப்பட்டுள்ளது. எட்ஜ் பிரவுசரை இயக்கவும். பின் அதன் வலது மேல் மூலையில், மூன்று புள்ளிகள் இணைந்து தரப்பட்டுள்ள ஐகானைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில், இறுதியாக உள்ள Settings என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து View Advanced Settings என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, Use Adobe Flash Player என்ற ஸ்விட்சில் கிளிக் செய்து Off செய்திட, ப்ளாஷ் இயங்குவது நிறுத்தப்படும். மீண்டும் தேவைப்பட்டால், இதே வழியில் சென்று, ஸ்விட்ச் கிளிக் செய்து இயக்கலாம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, ப்ளாஷ் பிளேயர் இயக்குவது அனைத்து பிரவுசர்களிலும் நிறுத்தப்படுகிறது. மேலும், தற்போது இணைய தளங்களில் தரப்படும், விடியோ படங்களுக்கு இணையாக ப்ளாஷ் ப்ளேயரால் இயங்க இயலவில்லை. மைக்ரோசாப்ட், தான் விண்டோஸ் 10 இயக்கமுறைமையில் அடுத்து கொண்டு வரப்படும் Windows Creators Update என்ற மேம்படுத்தலில், அடோப் ப்ளாஷ் பிளேயரின் இயக்கத்தினைத் தானாகவே நிறுத்திக் கொள்ளும் வகையில் கொண்டு வர உள்ளது. அதுவரை நாமாக, மேலே தரப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றி நிறுத்தலாம்.

கேள்வி: பேஸ்புக் தளத்தில், என் அக்கவுண்ட் பக்கத்தில், மெசேஜ் எழுதி அனுப்புகையில் எப்படி சிறிய அளவில் அசைவு உள்ள படங்களை எப்படி இணைப்பது? இதனை எங்கிருந்து பெறுவது?
ஆர்.கே. கலாராணி, திருப்பூர்.
பதில்:
நீங்கள் கேட்பது GIF என அழைக்கப்படும் சிறிய அனிமேஷன் படங்கள். முதலில் GIF என்பது என்னவெனத் தெரிந்து கொள்ளலாம். இது Graphics Interchange Format என்பதன் சுருக்கமாகும். இந்த பைல் வடிவம் உருவங்களின் அசைவை சப்போர்ட் செய்கிறது. பேஸ்புக் இணைய தளத்திலும், பேஸ்புக் மெசஞ்சர் தளத்திலும் நாம் அனுப்பும் மெசேஜ் உடன் இதனை இணைத்து அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது. மெசேஜ் எழுதியவுடன், கீழாகத் தேடுங்கள். வரிசையாகச் சிறிய அளவில் ஐகான்கள் தென்படும். அநேகமாக, இடது பக்கம் இருந்து மூன்றாவதாக இதற்கான ஐகான் இருக்கும். அதில் கர்சரைக் கொண்டு சென்றவுடனேயே, Choose a GIF or Sticker என காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், வரிசையாகப் பல்வேறு அசையும் உருவங்கள் காட்டப்படும். நீங்கள் விரும்பும் ஜிப் பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், உங்கள் மெசேஜ் கட்டத்தில் அது இணைக்கப்படும். அங்கு தரப்பட்டவை உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யாத பட்சத்தில், நீங்கள் தேடும் வகையினைச் சுருக்கமாக அங்கு கிடைக்கும் தேடல் கட்டத்தில் சொற்களாக டைப் செய்தால், உடன் இணையத்தில் இவை கிடைக்கும். அங்கிருந்தும் தேடி எடுத்து இணைக்கலாம்.

கேள்வி: நான் ஐபோன் பயன்படுத்துகிறேன். இதில் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியுமா? ஆண்ட்ராய்ட் போனில் கிடைக்கும் அதே வசதிகள் இதிலும் கிடைக்குமா? டிப்ஸ் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். கண்மணி, கோவை.
பதில்
: வாட்ஸ் அப் செயலி, ஐபோனில் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் போனில் இயங்கும் வாட்ஸ் அப் செயலியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, அண்மையில் இது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பதிப்பு எண் 2.17.1. இதனை https://www.whatsapp.com/download/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெறலாம். இங்கு ஆண்ட்ராய்ட், ஐபோன் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் கம்ப்யூட்டர் ஆகியவற்றிற்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஐபோனுக்கானதை ஆப்பிள் ஸ்டோரிலும் பெறலாம்.
புதியதாக மேம்படுத்தப்பட்டுள்ள ஐபோன் வாட்ஸ் அப் செயலியில் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. தகவல்கள் அனுப்பவும், பைல்களைப் பகிர்ந்து கொள்ளவுமே வாட்ஸ் அப் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போது 30 போட்டோக்களை அல்லது விடியோக்களை ஒரே அனுப்புதலில் அனுப்பலாம். முன்பு பத்து போட்டோக்கள் மட்டுமே அனுப்ப முடியும்.
ஆண்ட்ராய்ட் போனில் தரப்பட்ட இன்னொரு வசதி தற்போது ஐபோனுக்கான பதிப்பில் தரப்பட்டுள்ளது. இணைய இணைப்பு கிடைக்காத போது, அனுப்ப வேண்டியவற்றை, வரிசையில் அமைத்து வைக்கலாம். எப்போது இணைய இணைப்பு கிடைக்கிறதோ, அப்போது அவை அனுப்பப்படும்.
மேலும் தரப்பட்டுள்ள புதிய வசதி ஸ்டோரேஜ் தொடர்புடையது. முன்பு, எத்தனை டெக்ஸ்ட், ஜிப் பைல், வாய்ஸ் மெசேஜ், தொடர்புகள் எத்தனை என்று காட்டப்படும். எவ்வளவு இடம் பிடித்துள்ளது என்றும் தெரிய வரும். இப்போதைய திரையில், பயனாளர்கள் இந்த தகவல் பிரிவுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்துக் காணலாம். எடிட் செய்திடலாம். குறிப்பிட்ட தகவல் பரிமாற்றத்தினை நீக்கலாம். இந்த புதிய வசதிகளை Settings, Data and Storage Usage, Storage Usage, என்று சென்று, தொடர்பு ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, Clear Chat கிளிக் செய்து தகவல்களை நீக்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் வெகு நாட்களாக குரோம் பிரவுசர் இயக்கி வருகிறேன். திறந்தவுடன் எந்த இணைய தளத்திற்கும் அது செல்லாது. காலியாகத்தான் காட்டப்படும். ஆனால், சில வாரங்களாக, அது வெளிநாட்டு வங்கியின் தளம் மற்றும் வேறு ஒரு வர்த்தக தளத்திற்குச் செல்கிறது. சில நேரங்களில் பாலியல் தளங்களுக்குச் செல்கிறது. சென்ற பின்னரே, அதனை மூடி வேறு நான் விரும்பும் தளத்திற்குச் செல்ல முடிகிறது. ஏன் இவ்வாறு செல்கிறது என்று கூறவும். இதிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்க இயலாதா?
ஆ. ரகுநாதன், திருச்சி.
பதில்
: உங்கள் பிரவுசர் மால்வேர் அல்லது வைரஸ் ஒன்றினால் கைப்பற்றப்பட்டுவிட்டது எனத் தெரிய வருகிறது. உடனடியாக, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் செயலியை முழுமையாக இயக்கவும். கம்ப்யூட்டரில் உள்ள முக்கிய டேட்டா பைல்களை காப்பி செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை முழுமையாக வைரஸ் சோதனைக்கு ஆட்படுத்தவும். பிரவுசரை நீக்கி, வைரஸ் சோதனைக்குப் பின், புதியதாக பிரவுசரை அமைக்கவும். எந்த சோதனைக்கும் வைரஸ் அல்லது மால்வேர் நீக்கப்படவில்லை என்றால், டேட்டா பைல்களை காப்பி செய்த பின்னர், டிஸ்க் பார்மட் செய்து, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிற சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். இது இறுதியான நிலை தான். உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமால் கைப்பற்றப்பட்டிருந்தால், கம்ப்யூட்டர் இயக்கத்தில் கீழே குறித்துள்ள மாற்றங்களை நீங்கள் உணரலாம். அப்படி இருந்தால், மேலே சொன்ன நடவடிக்கைகளை எடுக்கவும்.
நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர், நீங்கள் விரும்பாமலேயே, நீங்கள் அமைக்காத முகவரி உள்ள தளம் ஒன்றுக்குச் செல்கிறது.
மாறா நிலையில் நீங்கள் அமைத்த தேடல் சாதனம் மாற்றப்பட்டுள்ளது. புதிய சர்ச் இஞ்சினில், நீங்கள் எதனைத் தேடினாலும், அது புதியதாக, உருவாக்கப்பட்ட இஞ்சின் உள்ள இணைய தளத்திற்குச் செல்கிறது.
ஆண்ட்டி வைரஸ், ஆண்டி ஸ்பைவேர் அல்லது ஆண்ட்டி மால்வேர் தளங்களுக்கு நீங்கள் செல்கையில், நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்.
வெப் பிரவுசரைப் பயன்படுத்துகையில், பல்வேறு பாப் அப் விண்டோக்கள் கிடைக்கின்றன. அவற்றை உங்களால், மூட இயலவில்லை.
புதியதாக, நீங்கள் அமைக்காத பேவரிட் தள முகவரிகள் அல்லது புக்மார்க் அமைக்கப்படுகின்றன. வெப் பிரவுசர் மிகவும் மெதுவாக இயங்குகிறது.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், வைரஸ் உள்ளது என்றாகிறது. உங்கள் ஆண்ட்டி வைரஸ் செயலியை அவ்வப்போது அப்டேட் செய்திடாவிட்டால், புதியதாக வரும் வைரஸ்களால் இந்த மாற்றங்கள் ஏற்படலாம்.

கேள்வி: என் ஆண்ட்ராய்ட் போனில், எப்போதாவது சில வேளைகளில், பிற போன்களிலிருந்து புளுடூத் மூலம் பைல்களை, குறிப்பாக பாடல் பைல்களை மாற்றம் செய்கிறோம். என் நண்பர்கள், புளுடூத் எப்போதும் இயக்கி வைப்பது தவறு. தேவைப்படும்போது மட்டும் இயக்கினால் போதும். இதனால் பேட்டரி திறன் மிச்சம். வேறு பைல்களினால் வரும் ஆபத்துகளும் வராது என்று கூறுகின்றனர். இது உண்மையா?
எஸ். செந்தில் நாதன், மதுரை.
பதில்:
ஆம், முற்றிலும் உண்மையே. தேவைப்படாத போது, புளுடூத் செயலி இயங்கிக் கொண்டிருப்பது பேட்டரியின் மின் சக்தியை வீணாகப் பயன்படுத்தும். புளுடூத் நீங்கள் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், இயக்கிவிட்டால், அது பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கும். மேலும், வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். போன்ற ரேடியோ அலைப் பயன்பாட்டு வசதிகள் அனைத்தும், பேட்டரியின் சக்தியை அதிகம் எடுத்துக் கொள்ளும். எனவே, புளுடூத் பயன்படுத்தவில்லை எனில், புளுடூத் வசதியை எப்போதும் அணைத்தே வைக்கலாம். மேலும், பிற போன்களிலிருந்து புளுடூத் மூலம், உங்கள் போனுக்கு பிறர் பைல்களை அனுப்ப முடியும். இதற்கான அனுமதி கேட்டு பெறும் நிலையில் இருந்தால், இந்த ஆபத்து ஏற்படாது. ஆனால், தொடு உணர் நிலை திரைகளில், நாம் நம்மை அறியாமலேயே அனுமதி அளித்துவிடுவோம். எனவே, புளுடூத் நிறுத்தப்பட்டால், இந்த ஆபத்தும் தவிர்க்கப்படுமே.

கேள்வி: வேர்ட் புரோகிராமில், ஆவணங்களைத் தயாரிக்கையில், சொற்களில் பிழைகள் இருந்தால், அதன் கீழே சிகப்பு கோடு காட்டப்படுகிறது. அதில் ரைட் கிளிக் செய்திடுகையில், அச்சொல் சரியான எழுத்துக்களுடன் காட்டப்படுகிறது. இதைப் போல, அந்த சொல்லுக்கான எதிர் பொருள் தரும் எதிர்ச் சொல் பெற என்ன செய்திட வேண்டும்?
என். ஜீனத் சம்சுதீன், காரைக்கால்.
பதில்
: நல்ல கேள்வி. ஆவணங்களை உருவாக்குகையில், வேர்ட் புரோகிராமில், அகராதி ஒன்று பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அது, நீங்கள் அமைக்கும் சொற்களைச் சரி பார்த்து, அதில் எழுத்துப் பிழை இருந்தால், உடனே நீங்கள் கூறியுள்ளபடி, சிகப்பு வண்ணத்தில் கோட்டினை அமைக்கும். நீங்கள் கேட்கும் எதிர்ச்சொல், Thesaurus என்பதில் கிடைக்கும். வேர்டில் 'தெசாரஸ்' இயங்கினாலும், குறைவான எண்ணிக்கையிலேயே சொற்கள் அதில் இருக்கும். இருப்பினும் சில செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், எதிர்ச் சொற்களையும் பெறலாம்.
எந்த சொல்லுக்கு எதிர்ப்பதம் வேண்டுமோ, அதில் கர்சரை நிறுத்தவும். அடுத்து, Shift+F7 கீகளை அழுத்தவும். வேர்ட், Research Pane என்ற ஒரு பிரிவினை டாகுமெண்ட் வலது பக்கம் காட்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த சொல்லுக்கு எதிர்ச்சொல் இருந்தால், அந்த சொல் காட்டப்பட்டு அருகிலேயே (Antonym) எனக் காட்டப்படும். சில வேளைகளில், ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்ப்பதங்கள் காட்டப்படும். ஒத்த பொருள் தரும் சொற்களும் காட்டப்படும். ஒத்த பொருள் கொண்ட சொல் கிடைக்க, குறிப்பிட்ட சொல் மீது ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Synonym என்பதில் கிளிக் செய்தால், ஒத்த பொருள் கொண்ட சொற்கள் பட்டியலிடப்படும். இந்த சொற்களில் ஒன்றை டாகுமெண்ட்டில் இடைச் செருக, அந்த சொல் மீது ரைட் கிளிக் செய்தால், அதில் உள்ள Insert அல்லது Copy ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X