ஏனோதானோவென்று ஜெபம் செய்தால் போதுமா ? - வைரம் ராஜகோபால்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

ஒருவர் ஜெபம், தியானம் என்று நெடு நேரம் செய்கிறார். இதில், முக்கியமானது மந்திரத்தின் எண்ணிக்கை மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பதை பொருத்தே நேரம் கூடும் அல்லது குறையும். ஜெபம் செய்யும் போது, அந்த ஜெப மந்திரத்துக்கு அதிபதியான தேவதை எதுவோ, அதையும் மனதில் நிறுத்தி, ஜெபம் செய்ய வேண்டும். சாதாரணமாக காயத்ரி ஜெபம் செய்கின்றனர். அதையே திருப்பித் திருப்பி ஜெபம் செய்து விட்டு, "நான் ஆயிரத்தெட்டு காயத்ரி ஜெபம் செய்கிறேன்; ஒரு லட்சம் காயத்ரி ஜெபம் செய்கிறேன்...' என்றால் மட்டும் போதாது.
ஜெபம் செய்ததற்கு பலன் உண்டு. ஆனாலும், இந்த காயத்ரி தேவியின் உருவம், நிலை, ஆடை, ஆபரணம், ஆயுதங்கள் இவைகளைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாதிரி உருவத்தை மனதில் பதிய வைத்து, ஜெபம் செய்வது நல்லது. அடுத்து, விஷ்ணு சகஸ்ர நாமம். அதை, தினமும் பாராயணம் செய்வது நல்லது. இதை வயதானவர்தான் செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை; சிறுவர்களும், ஸ்தீரிகளும், கூட சொல்லலாம். இதற்கு விசேஷமான பலன் உண்டு. விஷ்ணுவை குறித்த ஸ்தோத்ரம் சொல்லும் போது, அந்த விஷ்ணுவின் உருவத்தை
தியானிப்பதும், மனதில் நிறுத்தி வைப்பதும் நல்லது. பகவானுக்கு உருவம் கிடையாது என்று சொல்வது வேறு விஷயம். அதாவது, அவனை எந்த உருவத்திலும் வழிபடலாம் என்பதற்காகச் சொன்னது. எந்த உருவத்தில் வழி பட்டாலும் நல்லது தான். விஷ்ணுவுக்கும் ஆடை, அலங்காரம், ஆயுதம் என்றெல்லாம் வர்ணனை செய்துள்ளனர். மனதை அவனிடம் நிறுத்தி, பக்தி செய்வது தான் சரியான முறை. "என்னிடம் மனதை நிலை நிறுத்தி, என் பக்தனாய், என் பொருட்டு பூஜை செய்பவனாய், என்னை வணங்குவாயாக...' என்று அர்ஜுனனுக்கு சொல்கிறார் கிருஷ்ணர். ஆயிரம் பெயர்களால் எவனொருவன் எப்போதும் புரு÷ஷாத்தமனை ஸ்துதி செய்கிறானோ, எவன், அழிவில்லாத அந்த புருஷனையே பக்தியோடு அர்ச்சனை செய்கிறானோ, எவன், அவனையே தியானித்தும், துதித்தும் வணங்கி பூஜித்து நிற்கிறானோ, அவன் சகல துக்கங்களையும் கடந்து, எம்மை அடைகிறான் என்பது தெய்வ வாக்கு. இந்த விஷ்ணுவின் பாதாதி கேச வர்ணனை என்ற நூலைப் படித்தால், பல விஷயங்கள் தெரிய வரும். பாதாதி கேசம் என்றால், பாதம் முதல் தலையிலுள்ள முடி வரை உள்ளவைகளை பற்றி விபரமாக கூறப்பட்டுள்ளது. நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. இவைகளையும் தெரிந்து கொண்டு, அந்த உருவத்தை மனதில் நிறுத்தி ஜெபம் செய்வது அதிக பலனைக் கொடுக்கும். சும்மா ஜெபம் என்று உட்கார்ந்து விட்டு, எண்ணுவதோ, மணிமாலையை உருட்டிக் கொண்டே, "வாசலில் முருங்கைக்காய் விற்றுக்கொண்டு போகிறான், கூப்பிடு...' என்று மனைவியிடம் சொல்வதோ ஜெபமாகாது. ***

ஆன்மிக வினா-விடை!
துளசியை பறிக்க ஏற்ற நாட்கள் எவை?
துளசியின் இலை மட்டுமின்றி, விதை, தண்டு, வேர் முதலான எல்லாமே பூஜைக்கு உரியவைதான். ஞாயிறு, செவ்வாய், வெள்ளியில் துளசியை பறிக்கக் கூடாது. சதுர்த்தசி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி திதிகளில் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும். ***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharuman - Kolkata,இந்தியா
20-ஜன-201121:14:48 IST Report Abuse
Dharuman ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.உதாரணமாக பிரம்மா படைப்புக்கான கடவுள்; விஷ்ணு காத்தல்; சிவன் அழித்தல். எனவே ஒவ்வொருவருக்கும் தனி ஆயுதங்கள்;தனி அலங்காரங்கள்; தனி அர்ச்சனைகள்.எனவே த்யானிக்கும் பொழுது அவரவர் குணாதிசயங்களுக்கு தகுந்தவாறு மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X