மகிழ்ச்சி பொங்கட்டும் ! - ஜன., 20 - தைப்பூசம்! - தி.செல்லப்பா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

நடராஜப் பெருமான் தனித்து நடனம் ஆடிய தினம், மார்கழி மாதம் திருவாதிரை; அவர், சக்தி தேவியோடு இணைந்து நடனம் ஆடிய நன்னாள் தைப்பூசம். மனதில் மகிழ்ச்சியிருந்தால் ஆட்டம் வரும். நம் தந்தையான சிவனும், தாய் பார்வதியும் எந்நேரமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்; அதன் விளைவாக நடனமாடுகின்றனர். அந்த மகிழ்ச்சி வந்தது எப்படி? உற்றுக் கவனித்தால் நன்றாகப் புரியும்... சிவபெருமானின் ஆடையைப் பாருங்கள்... அவர், புலித்தோல் அணிந்திருப்பதாக புராணம் சொல்கிறது. அன்றைய மனிதன் காடுகளில் திரிந்தான். பயத்தால் புலிகளை வேட்டையாடினான். அவற்றின் தோலை இறைவனுக்கு உடுத்திப் பார்த்தான்; தானும் அணிந்து கொண்டான். தன் படுக்கை விரிப்பாக்கிக் கொண்டான். நாகரிகம் வளர்ந்ததும், மிருகங்களை வேட்டையாடுவது பாவம் என்பதைப் புரிந்து கொண்டான் மனிதன். துணிகளைப் பயன்படுத்த துவங்கிய பின், புலித்தோல் வடிவ ஆடைகளை சிவனுக்கு உடுத்தி, அழகு பார்த்தான். அதுவும் இடுப்புக்கு மட்டுமே. உடலை மறைக்க ஏதுமில்லை. ஆக, எளிய ஆடையை அவர் உடுத்தினார். கழுத்தில் மலர்மாலை எதையும் அவர் அணியவில்லை; பாம்பை அணிந்து கொண்டார். மனிதனோ, மாடோ, பிற விலங்குகளோ மண்ணில் புரண்டால், தூசு உடலில் ஒட்டும்; ஆனால், தரையில் ஊர்ந்து செல்லும் பாம்பின் உடலில் தூசு ஒட்டாது. இந்த தரை தான். உலகம்;அதிலுள்ள தூசு தான் பற்று. "மனிதா... நீ இந்த உலகத்தில் வாழலாம். ஆனால், இதன் மீது பற்று வைக்காதே... என் கழுத்தில் அணிந்துள்ள பாம்பைப் பார்த்து இதைக் கற்றுக்கொள்...' என்கிறார் சிவபெருமான். உலக வாழ்வை நிரந்தரமென நினைத்து, செல்வத்தை தேடி அலையும் போது தான் மனம் மாசு படுகிறது. நினைத்த பொருளை அடைய தவறுகள் செய்யத் தூண்டுகிறது. இந்த ஆசையை விடுத்து, மனதை உண்மையை நோக்கித் திருப்ப வேண்டும். "நீ எங்கிருந்து வந்தாய் என உனக்குத் தெரியாது; எங்கே செல்ல இருக்கிறாய் என்பதும் புரியாது. நிலைமை இப்படியிருக்க, ஏன் இந்த வீண் அலைச்சல். பாம்பு, தனக்கு தேவையான ஒரே ஒரு தவளையைக் கவ்வுவது போல், நியாயமான தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்...' என்பதே பாம்பு தத்துவம். தலையில் அவர் ஊமத்தம் பூவைச் சூடியிருக்கிறார். அதனால், அவருக்கு, "உன்மத்த சேகரன்' என்ற பெயரும் உண்டு. இந்தப் பூவையோ, இதன் காயையோ தவறுதலாக சாப்பிட்டு விட்டால், பைத்தியம் (உன்மத்தம்) பிடித்து விடுமாம். இப்படி, நம்மால் ஒதுக்கப்பட்ட பூவை, சிவபெருமான் விருப்பத்தோடு ஏற்றுக் கொள்கிறார். ரோஜா, மல்லிகை போன்ற மலர்களை எல்லாம் பக்தர்கள் அனுபவிக்க தந்து விட்டு, சாதாரண மலரைச் சூடியவர் அவர். எளிமையாக வாழ்பவனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது, ஆட்டம் தானாக வரும். கணவன் மகிழ்ச்சியுடன் இருந்தால், மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பாள். ஆக, இருவரும் இணைந்து நடனமாடுகின்றனர். தைப்பூச நன்னாளில் எளிமையாக வாழ உறுதியெடுப்போம். அந்த எளிமை தரும் சுகத்தில், மனம் தானாகவே ஆடட்டும். ***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X