இது உங்கள் இடம் !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

* பெண்கள் நினைத்தால்...
குடிப்பழக்கம் உள்ளவன் என்பது தெரிந்தே, ஒருவனை காதலித்து, திருமணம் செய்து கொண்டாள் என் தோழி. "அவனை திருத்திக் காட்டுகிறேன்...' என்று எங்களிடம் சபதம் செய்த போது, சிரிப்புதான் வந்தது.முதலிரவன்றே, "உன் அழகில் மயங்கி தான் உன்னை காதலித்து, திருமணம் செய்து கொண்டேன். அதற்காக, நண்பர்களோடு சேர்ந்து, "தண்ணி' அடிக்கறதுக்கு தடை போடாதே... வாரத்தில் மூன்று நாட்கள் என்னை ப்ரியா விட்டுடு...' என்று கூறியிருக்கிறார் தோழியின் கணவன். இவளும், "பூம் பூம்' மாடு போல தலையை ஆட்டி, "வாரத்தில் மூணு நாட்கள் என்ன... தினமுமே, "தண்ணி' அடிங்க... குடித்தது போக மிச்சம், மீதி இருந்தால், வீட்டு செலவுக்கு பணம் தாங்க...' என்று பெருந்தன்மையாக கூறிவிடவே, எந்த உறுத்தலும் இல்லாமல், தினமும், நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வர ஆரம்பித்தான். ஒருநாள், திடீரென்று, அலுவலகம் விட்டவுடன், சரியான நேரத்துக்கு வீடு வந்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, காபி, டிபன் சாப்பிட்டு, வீட்டிலேயே முடங்கி இருக்கிறான். அதற்கடுத்த நாட்களிலும் இதுவே வழக்கமாகி விட, தோழி காரணம் கேட்டிருக்கிறாள். எந்த பதிலும் சொல்லாமல், மவுன சாமியாராக மாறிப் போனான். "ஒரு மனைவியே, நண்பர்களுடன் சேர்ந்து, தாராளமா குடித்து, கூத்தடித்து விட்டு வரச் சொல்கிறாள் என்றால், அதில் ஏதோ விஷயம் இருக்கு. அவளுக்கு வேறு யாருடனாவது தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருந்து கொள்...' என்று, உசுப்பேற்றி விட்டுள்ளனர் நண்பர்கள். தன் காதல் மனைவி, தன்னை விட்டு பிரிந்து போய் விடுவாளோ என்று பயந்த கணவன், குடிப்பதை விட்டு, ஒழுங்காக வீட்டிற்கு வந்து, மனைவியை தன் பார்வையிலேயே வைத்துள்ளான். அதிலிருந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி, இப்போது ஒழுங்காக தோழியுடன் குடும்பம் நடத்தி வருகிறான்.இப்படி ஒரு நெருப்பு பொறியை, கணவனின் மனதில், நண்பர்கள் மூலமாக விதைத்ததே என் தோழிதான் என்பது பின்னர் தெரிந்தது. தோழி ஏற்படுத்திய பொறி, கணவனது நண்பர்களும் குடிப்பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பதாக கேள்வி. பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை என்று, தோழியை பாராட்டி விட்டு வந்தேன்.
— ஆர்.ஜானகி, சென்னை.

* "மேட்சிங் பிளவுஸ்' எடுக்கப் போறீங்களா?
அண்மையில், நானும், என் மனைவியும், ஐந்து புதுப் புடவைகளுடன், "மேட்சிங் பிளவுஸ்' துணி எடுப்பதற்கு சென்றிருந்தோம். அந்த கடை ஊழியர் ஒருவர், ஆரம்பம் முதலே, எங்களை உற்று கவனித்தபடி இருந்தார். நாங்கள் எந்த செக்ஷனுக்குப் போனாலும், அவர் எங்கள் கூடவே வந்ததில், சங்கடமும், எரிச்சலுமாகி, வெறுத்துப் போய், துணி எடுக்காமலே வீட்டிற்கு வந்து விட்டோம். இவ்விஷயத்தை என் மனைவி, பக்கத்து வீட்டு பெண்ணிடம் கூறியபோது, அவர் சொன்ன அனுபவ, "டிப்ஸ்' இது... "மேட்சிங் பிளவுஸ் எடுக்க, புதுப் புடவைகளை ஜவுளிக் கடைக்கு கொண்டு போகும் போது, ஓரம் தைத்துத் தான் கொண்டு போக வேண்டும். சிலர், விலைச் சீட்டை எடுத்துவிட்டு, புடவையை களவாடுவதால், கடைக்காரர் இப்படித்தான் கண்காணிப்பார்...' என்றார். எனவே, வாசகர்களே... புதுப் புடவைகளுக்கு, "மேட்சிங் பிளவுஸ்' எடுக்க ஜவுளிக் கடைக்கு செல்லும் போது, இனி, எங்களைப் போல் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாமல், புடவைகளை ஓரம் தைத்து எடுத்துச் செல்லுங்கள்!
— யா.தாமஸ், வெட்டூர்ணிமடம்.

* அரசு பள்ளிகள் கவனிக்குமா!
நான் ஒரு கல்லூரி மாணவி. சமீபத்தில், என் பள்ளித் தோழியை சந்தித்தேன். மிகவும் மெலிந்து நோயாளி போல் இருந்தாள். காரணம் கேட்ட போது, அதிர்ச்சியாக இருந்தது. சிறுநீரக பிரச்னையால் ஆபரேஷன் செய்துள்ளாள். முறையாக சிறுநீர் கழிக்காததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதற்கு அவள் கூறிய காரணம், சிந்திக்க வைத்தது.
என்னவென்றால், நாங்கள் படித்தது அரசுப் பள்ளியில். அங்கு இருந்த கழிவறை மிகவும் மோசமான, சொல்ல முடியாத நிலையிலிருக்கும். அதனால், பெரும்பாலான மாணவியர் கழிவறை பக்கம் செல்லவே மாட்டார்கள். கழிவறை தோற்றமும், நாற்றமும் குடலை புரட்டும். இதனால், என் தோழி சிறுநீர் கழிக்க வருவதில்லை. இதைப்போன்று நிறைய மாணவியர். இப்படிப்பட்ட காரணங்களால், அவள் சிறுநீரகப் பிரச்னைக்கு ஆளாகி, ஆபரேஷன் வரை சென்றுள்ளது. பல அரசுப் பள்ளிகள் இந்த நிலையில்தான் இருக்கிறது. மாதவிடாய் காலங்களில் மாணவியரின் நிலையை விவரிக்க முடியாது. இதை மாற்ற, நல்ல கழிப்பிட வசதிகளை, அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தி, அதைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏற்கனவே, அரசுப் பள்ளிகளில், ஸ்வீப்பர்களுக்கு என்று மாதா மாதம் ஒரு தொகை வசூலிக்கின்றனர். அதைக் கொண்டு கழிவறையை பராமரிப்பதோடு, பெண்களுக்கு நாப்கின் வாங்கி வைத்து, உபயோகிப் பவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் முறையை கொண்டு வந்தால், பள்ளி மாணவியரின் வருகை அதிகரிக்கும். இக்கடிதத்தை படிக்கும் அனைத்து ஆசிரியை களும், அதற்கான முயற்சியை எடுப்பரா? — சங்கரி, கோவை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shakthi - zurich,சுவிட்சர்லாந்து
19-ஜன-201100:02:41 IST Report Abuse
shakthi What sankari told is very much true. we had the same problem 15 years back. Schools should take action in this.
Rate this:
Share this comment
Cancel
குரு - பெங்களூர்,இந்தியா
18-ஜன-201100:43:49 IST Report Abuse
குரு மேலே ஒரு அம்மணி சொல்வது போல் பெண்கள் பொறி வைத்தால் வகையாக மாட்டிக் கொள்ளப் போவது அந்தப் பெண்கள்தான். கொஞ்ச நாள் கழித்து இந்த அம்மணி தன் தோழியின் வாழ்க்கையை பார்த்தல் தெரியும், அந்த கணவன் எப்படி மகா சந்தேகப் பேர்வழியாக மாறிவிட்டன என்று.
Rate this:
Share this comment
Cancel
கண்ணன் . ஆ - சிதம்பரம்,இந்தியா
16-ஜன-201120:20:06 IST Report Abuse
கண்ணன் . ஆ இது போன்ற வீண் சந்தேகங்களை மற்றவர் மனதில் விதைக்க வேண்டாம். சராசரி ஆண்கள் சந்தேக பிராணிகளாக தான் இருப்பார்கள் இது போன்ற செயல்கள் அவர்கள் மனதில் தேவையற்ற வீண் சந்தேகங்களை அதிகமாக்கும். குதுகலமான குடும்பத்தில் கும்மியடித்துவிடாதிர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X