அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2017
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

வங்கியிலிருந்து 180 நாடுகளுக்கு!
இன்று, உலகளவில் பல பத்திரிகைகள் இருந்தாலும், ராய்ட்டர் செய்தி நிறுவனமே முதன்மையானது. கி.பி.,1850ல் ஜெர்மனியை சேர்ந்த, பால் ஜுலியஸ் ராய்ட்டர், தன் கல்லூரி படிப்பை முடித்ததும், வங்கியில், இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். அப்போது, அந்த வங்கிக்கு, பாரிசின், 'ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' விவரங்கள் தேவைப்பட்டன. அதற்காக, 'அக்ஸ்லா சாப்பெல்லா' என்ற செய்தி தொகுப்பு நிறுவனத்தை உருவாக்கினார்.
இந்த வளர்ச்சியில், புறாக்களுக்கு பெரும் பங்கு உண்டு. செய்திகளை விரைவாக கொண்டு வந்து சேர்த்ததில், புறாக்கள் சிறந்து விளங்கின. ஜெர்மனியில் இருந்து பாரிஸின் பிரஸ்ஸல் நகருக்கு செல்லும் ரயிலில் புறாக்களை அனுப்பி வைப்பார் ராய்ட்டர்.
அந்த ரயில் இரவு முழுவதும் பயணித்து, விடியற்காலையில் பிரஸ்ஸல் நகருக்கு சென்று அடைந்து விடும். அங்கு இருக்கும் ராய்ட்டரின் நண்பர், அங்குள்ள பங்கு மார்க்கெட் விவரம், விலை நிலவரம் போன்ற தகவல்களை புறாக்களின் காலில் கட்டி பறக்க விடுவார்.
இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், புறப்பட்ட, ஏழு மணி நேரத்தில், இந்த புறாக்கள் ராய்ட்டரிடம் வந்து சேர்ந்துவிடும். மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில், பறந்து வந்து, அந்த செய்தியை சேர்த்தன அந்த புறாக்கள். இதே தொலைவை, ஒன்பது மணி நேரத்தில் தான் ரயில் கடக்கிறது. இப்படி சுடச்சுட கிடைத்த பங்கு மார்க்கெட் நிலவரத்தை, நல்ல விலைக்கு உடனே வியாபாரிகளுக்கு விற்றுவிடுவார் ராய்ட்டர்.
கடந்த, 1851ல் லண்டனில் இருந்து பாரிசுக்கு, கடலுக்கடியில் கேபிள் அமைத்து, அதன் மூலம் தகவல் தொடர்பு ஏற்பட்டது. அப்போது, லண்டனுக்கு வந்த ராய்ட்டர், தன் தொழிலை மேலும் விரிவடைய செய்தார். நாளடைவில் செய்திகள் மட்டுமின்றி, பொதுவான செய்திகளையும் தொகுத்தளிக்க துவங்கினார். இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஒருமுறை, மாவீரன் நெப்போலியன் போர் பற்றி, பாராளுமன்றத்தில் பேச இருக்கும் செய்தியை, முன் கூட்டியே வெளியிட்டார் ராய்ட்டர். இது மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகழின் உச்சிக்கு சென்றார் ராய்ட்டர். செய்திகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வாங்கி வெளியிடுவதை விட, போர் பற்றிய செய்திகளை, நேரடியாக நிருபர்களை போர்முனைக்கே அனுப்பி, அவர்கள் பார்த்தவற்றை செய்தியாக எழுதி தரும்படி சொன்னார்.
இதற்கு முன் வரை, சம்பவ இடத்துக்கு நிருபர்கள் சென்று, நேரடியாக செய்தி சேகரிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது இல்லை. இது, அந்த காலத்தில் மிகப் பெரிய புரட்சி. இப்படி பல புரட்சிகளை செய்த ராய்ட்டர் நிறுவனம், இன்று, 180 நாடுகளில், தன் கிளையை பரப்பி செய்திகளை சேகரித்து வருகிறது.

பூமியும் அடுக்கு குடியிருப்பு போல தான்!
பூமியின் மேற்பரப்பில் நாம் வசிக்கிறோம். நிலப்பரப்பு திடத்தன்மை யுடன் வசிப்பதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது. ஆனால், பூமிக்கு அடியில் இதுபோல நிலப்பரப்பு இருப்பதில்லை. பூமியின் மையப்பகுதி, உருகிய நெருப்பு குழம்பாக தகித்து கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.
பூமி, 6,371 கி.மீ., ஆரம் கொண்ட உருண்டையாகும். பூமியின் பருப்பொருள் தன்மைக்கேற்ப அது, மூன்று அடுக்குகளை உடையது. 'கிரஸ்ட்' எனும் மேல் அடுக்கான புவி ஓட்டில் தான், நாம் வசிக்கிறோம். சுமார், 75 கி.மீ., ஆழத்திற்கு தோண்டினால், பாறைகள், மணல் தென்படும் அடுக்கே, 'கிரஸ்ட்'
அடுத்ததாக உள்ள அடுக்கு, 'மாண்டில்' எனப்படுகிறது. இது, 3 ஆயிரம் கி.மீ., ஆழத்திற்கு பரவி உள்ளது. மூன்றாவது அடுக்கு, 'கோர்' எனப்படும் உள் மையமாகும். 3 ஆயிரம் முதல் 6, 300 கி.மீ., ஆழம் வரை பரவி இருக்கிறது. இதில், 3 ஆயிரம் முதல், 4 ஆயிரம் கி.மீ., ஆழம் முழுவதும் திரவப் பரப்பாக உள்ளது. இவை பெரும்பாலும், இரும்பும், நிக்கலும் கலந்த கொதிக்கும் திரவ கலவையாகும். இதுவே, எரிமலை சீற்றத்தில் பீய்ச்சியடிக்கப்படும், 'லாவா' ஆகும்.

உங்க ஏரியாக்கும் வருவோம்!
மீன்களின் ராஜ்ஜியம் தண்ணீரில் தான். தரையில் தூக்கி போட்டால் அவை இறந்துவிடும். ஆனால், தண்ணீரை தாண்டி வந்து வேட்டையாடும் மீன் பற்றி அறிவீர்களா...
மீன்கள் பெரும்பாலும் உணவை விழுங்கி செரிக்கின்றன. சுறா போன்ற பெரிய மீன்கள் வேட்டையாடி உண்ணும். இது தவிர, வேறு சில வழிகளில் உணவு உண்ணும் மீன்களும் உள்ளன.
* 'ஆங்கிலர் பிஷ்' எனப்படும் மீன், விளக்கு போன்று ஒளிரும் உறுப்பால், தன் உணவுகளான, சிறு மீன்களை கவர்ந்திழுத்து பிடித்து தின்று விடும்
* கிளி மீன்களும், வண்ணத்துப் பூச்சி மீன்களும் தண்ணீர் தாவரம் போன்ற பிராணிகளான, பாலிப்புகளை ஆடு, மாடு போல மேய்ந்து உண்கின்றன
* 'மேல்பிரே' எனப்படும் மீன் இனம், அட்டை பூச்சிபோல, தான் ஒட்டிவாழும் மீன்களை காயம் ஏற்படுத்தி, அதன் வழியே தனக்கு தேவையான சத்துக்களை உறிஞ்சி வாழ்கின்றன.
* 'ஆர்ச்செர் மீன்'கள் தண்ணீருக்கு வெளியில் வேட்டையாடும் திறன் கொண்டவை. தண்ணீருக்கு அருகே தாவரங்களில் இருக்கும் பூச்சிகளை உணவாக உண்ணக்கூடியது இந்த மீன்கள். நீருக்குள் மூழ்கி இருந்தே, தாவரங்களில் இருக்கும் பூச்சிகளின் நடமாட்டத்தை நன்கு பார்த்தறியும் திறன் படைத்தது.
பச்சோந்தி எப்படி நாக்கை நீட்டி இரையை பிடிக்குமோ, அதுபோலவே, பசை போன்ற தன் எச்சிலை, பூச்சிகளின் மீது துப்பி, பிடித்து தின்றுவிட்டு, கணப்பொழுதில் நீருக்குள் பாய்ந்துவிடும் இந்த ஆர்ச்செர் மீன்கள்.
என்னாவொரு வில்லத்தனம்!

உண்டியும், உடையும்!
உண்டி என்றால் உணவு என்று பொருள். அந்த பள்ளியை ஆய்வு செய்வதற்காக வந்திருந்த பள்ளி கல்வி அதிகாரி, மாணவர்களின் திறனை அறிய விரும்பினார்.
ஆறாம் வகுப்பில் தமிழ் ஆசிரியர், சில வார்த்தைகளை வாக்கியத்தில் அமைக்க சொல்லி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்வி அதிகாரி, 'நான் கூறும் வார்த்தையை சொற்றொடராய் முழுமைப்படுத்துங்கள்' என சொல்லி, 'உண்டியும் உடையும்' என கரும்பலகையில் எழுதினார்.
ஒரு மாணவன் எழுந்து, 'உண்டியும் உடையும் உயிர் வாழ அவசியம்' என்றான்.
மற்றொரு மாணவன் எழுந்து, 'உண்டியும், உடையும் பண்டிகை நாட்களில் மட்டும் சிறப்பாக கிடைக்கும்' என்றான்.
மகிழ்ந்த அதிகாரி, அடுத்து மக்குப்பையன் என ஆசிரியர் கணித்து வைத்திருந்த மாணவனை எழுப்பி கேட்க, அம்மாணவன், 'உண்டியும் உடையும்; ஏனென்றால், அது மண்ணால் ஆனது' என்றான்.
இது இப்படி இருக்கு!
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X