ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால (47)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2017
00:00

குட்மார்னிங் எவ்ரிபடி...
என்ன மாணவர்களே... 'ஜெரன்ட்' நன்றாக கற்று கொண்டீர்கள் என்பதை உங்களது கடிதம் மற்றும் போன் மூலம் தெரிந்து கொண்டேன்.
எங்களுக்கு Active voice சொல்லிக் கொடுங்க மிஸ்... 'ஸ்கூல்'ல படிக்கிறது புரியல... என்று கேட்டிருந்தீர்கள். சரி... இன்றைக்கு சொல்லி தர்றேன்.
Active voice என்பதை செய்வினை என்றும், Passive voice என்பதை செயப்பாட்டு வினை என்றும் சொல்வோம்.
ஓ... இதுதானா மிஸ் என்கிறீர்கள் தானே...
He sings a song - அவன் பாட்டு பாடுகிறான். இது செய்வினை.
A song is sung by him - இது செயப்பாட்டு வினை.
பொதுவாக, நாம் பேசும் போது இந்த Passive Voice ஐ அதிகம் பயன்படுத்துவது இல்லை.
'அப்புறம் ஏன், 'வர்ஷி மிஸ்' இதை எங்களுக்கு சொல்லித் தர்றீங்க...' என்று தானே கேட்குறீங்க.
ரேடியோ, 'டிவி' செய்திகள், பத்திரிகைகள், அலுவலகம் தொடர்பான கடிதங்களில் மட்டுமே, Passive voice - - வாக்கியங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
ஸோ... அலுவலகம் தொடர்பான கடிதங்கள் எழுத, Passive voice மிகவும் அவசியம்.
இந்த வாக்கியங்கள் அமைப்பதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எழுவாய் இடம் மாற்றப்படுவதே. உதாரணம்.
Ravi wrote the book - இதில் புத்தகத்தை எழுதியது யார்?
ரவி தானே. எனவே, இங்கு ரவிதான் எழுவாய்.
இந்த வாக்கியத்தை Passive voice - ல் எப்படி சொல்வோம் தெரியுமா?
The book was written by ravi
இங்கே, எழுதப்பட்ட புத்தகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இவ்வாக்கியங்களை அமைக்க கண்டிப்பாக, Past participle தான் பயன்படுத்த வேண்டும்.
அதாவது, Do, doing என்பது Done என்று மாறிவிடும். இத்துடன் துணை வினைச்சொல், is, was, be, has, been போன்றவை பயன்படுத்த வேண்டும். பல்வேறு காலங்கள் கொண்ட வாக்கியங்களை கொடுக்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.
PRESENT TENSE
1. I invite him (A) நான் அவனை அழைக்கிறேன்.
2. He is invited by me (P) அவன் என்னால் அழைக்கப்படுகிறான்.

PAST TENSE
1. My mom cooked biriyani (A) என் தாயார் பிரியாணி சமைத்தார்.
2. Biriyani was cooked by my mom (P) பிரியாணி என் தாயாரால் சமைக்கப்பட்டது.

FUTURE TENSE
1. They will play cricket (A) அவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள்.
2. Cricket will be played by them (P) கிரிக்கெட் அவர்களால் விளையாடப்படும்.

PRESENT PERFECT
I have appointed him (A) நான் அவனை நியமித்து இருக்கிறேன்.
He has been appointed by me (P) அவன் என்னால் நியமிக்கப்பட்டிருக்கிறான்.
Active வாக்கியத்தில், I என்பது Passive வாக்கியத்தில் He ஆக மாறும். எனவே, He உடன் Has been சேர்த்துள்ளேன்.
என்ன மாணவாஸ் ரொம்ப குழப்புதா? ரொம்ப ஈஸி... பொறுமையாக படித்து ஒவ்வொரு வாக்கியங்களாக எழுதிப் பாருங்க... My student are Very brilliant என்பது எனக்குத் தெரியுமே!
மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாமா!
Until then, Bye... Bye...
Varshitha.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X