திண்ணை - நடுத்தெரு நாராயணன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

ஆனந்த விகடனில், "கல்கி' எழுதிய, "தியாக பூமி' கதை, திரைப்படமாக வெளிவந்தது. அதைப் பற்றி பல பத்திரிகைகளில், சுடச்சுட விமர்சனங்கள் வெளி வந்தன. இந்த விமர்சனங்கள் குறித்து, கல்கி ஒரு கட்டுரையில்...
சுதேசமித்திரன் விமர்சகர், தன் மகா கண்டனத்தை எப்படி ஆரம்பிக்கிறார்? தியாக பூமி கதையை, "லட்சக்கணக்கானவர்கள் படித்ததாக, ஏதோ புள்ளி விவரங்கள் கூட, ஒரு பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருந்தது...' என, பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்திருக்கிறார். படத்தை விமர்சனம் செய்யப் போனவருக்கு, கதையை எவ்வளவு பேர் படித்தனர் என்பதைப் பற்றி என்ன கவலை என்று கேட்கலாம். படம் நன்றாயிருக்கிறது, இல்லை என்று எழுதிவிட்டுப் போக வேண்டியது தானே. உண்மையில், இவ்வளவு சின்ன நோக்கத் துடன் அவர், "டாக்கி' பார்க்க வரவில்லை. விசாலமான, பரோபகாரமான நோக்கத்துடன் வந்தார் அவர். தியாக பூமியை, நல்ல கதை என்று எண்ணிப் படித்த, "லட்சக்கணக்கான' வாசகர்களுக்கு, அவர்களுடைய அசட்டுத் தனத்தை எடுத்துக் காட்ட வேண்டுமென்று தான் வந்தார். அனுமான் பத்திரிகை விமர்சகர், இந்த படத்தைப் பற்றி முதல் விமர்சனம், கல்கியின் கையாலேயே எழுதப்படும் என்று எதிர்பார்த்தார். அதில், ஏமாந்ததைப் பற்றிய பரம துக்கத்துடன், விமர்சனத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த துக்கத்துக்குப் பரிகாரமாக, விகடனில் வந்த, "தியாக பூமி டாக்கி' என்ற கட்டுரையை எடுத்துக் கொண்டு அலசுகிறார். அக்கட்டுரையில், "கதை அவ்வளவு ஒசத்தி இல்லை...' என்று நானே சொல்லி விட்டேன். அதனால், அவருடைய வேலை சுலபமாகி விட்டது. ஆகவே, கவனம் படத்தின் மேல் இல்லை; நான் என்ன சொன்னேன், என்ன எழுதினேன் என்பதைப் பற்றி தான். "சித்ர வாணி' என்ற ஒரு புதிய சினிமா பத்திரிகை நடந்து வருகிறது. அந்த பத்திரிகையில், தியாக பூமிக்கு ஒரு விமர்சனம் வெளி வந்திருக்கிறது. "சாமா சினிமா பார்க்கிறார்...' என்ற முறையில் அதை எழுதியிருக்கின்றனர். இந்த, "தியாக பூமி டாக்கி'க்காக, ஆனந்த விகடனிடமிருந்து, "சாமா'வை கைமாற்று வாங்கிக் கொண்டதாகவும் தலைப்பில் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், வேறெந்த படத்துக்கும் இல்லாமல், இந்த படத்திற்கு மட்டும், சாமாவைக் கைமாற்று வாங்கிக் கொள்வானேன்? இந்த இரவல் விஷயத்தை, இவ்வளவு ஜம்பமாக சொல்லிக் கொள்வானேன்? "ஆனந்த விகடன்' முறையைக் கொண்டே, ஆனந்த விகடனைத் தாக்குவதாக எண்ணம். ஒரே போடாகப் போட்டு, தலையெடுக்க முடியாதபடி அடித்து விடுவதாய் ஞாபகம். சாமா கைமாற்றுடன் ஆரம்பமாகும் இந்த கட்டுரை, "கல்கி சொந்தமாக எழுதிய ஒரு கதையும் இப்படியா போகணும்?' என்ற அங்கலாய்ப்புடன் முடிகிறது. மயான காண்டம் மூன்று நாள் சேர்ந்தாற்போல் பார்த்த அளவு சோகத்தை கொட்டை எழுத்தில் உள்ள இந்த வாக்கியத்தில் விமர்சகர் வெளியிடுகிறார்.
"தினமணி'க்காரர் மூன்று பத்தி கதையைப் பற்றியும், ஒன்றரைப் பத்தி படத்தைப் பற்றியும் வெளுத்து வாங்கிவிட்டு, கடைசியில், "வேறு என்ன தான் இருக்கிறது? ஒன்றும் இல்லை...' என்ற மங்கள வார்த்தையுடன் முடித்திருக்கிறார்.
ஒன்றும் இல்லை... நாஸ்தி... சர்வ சூன்யம்! "அனுமான்' விமர்சகர் இன்னும் ஒரு அடி தாண்டிப் போய், படப்பிடிப்பில் நான் தலையிட்டபடியால்தான் படம் உருப்படாமல் போய் விட்டது என்று சத்தியம் செய்கிறார். நான் நிபந்தனை போட்டிராவிட்டால், டைரக்டர் ஒரு வேளை இன்னும் நன்றாய் எடுத்திருப்பார். டைரக்டர் சுப்ரமணியம் அப்படித் தமக்குப் பிடிக்காத கதையைப் படம் எடுப்பவருமல்ல; தம்முடைய வேலையில் பிறர் தலையிட விடுகிறவருமல்ல என்பதை முன்னமே தெரிவித்திருக்கிறேன். ஆனாலும், சில விமர்சகர்கள் பழியைப் பகிர்ந்து வழங்க வேண்டிய பொறுப்பைத் தங்கள் தலையின் மேல் ஏற்றுக் கொண்டு, டைரக்டர் சுப்ரமணியத்தை, "விடுதலை' செய்திருக்கின்றனர். ***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கணேஷ் - சென்னை,இந்தியா
20-ஜன-201122:50:18 IST Report Abuse
கணேஷ் குவாட்டர் அடிச்சிட்டு ஒளருன மாதரியே இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X