இதப்படிங்க முதல்ல....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

* அப்பா நடித்ததில் 50 சதவீத நடிப்பு !
"முதல் மரியாதை' படத்தில், சிவாஜி கணேசன் நடித்தது போன்ற கெட்-அப்பில், சங்கரன் கோவில் படத்துக்காக நடித்துள்ளார் பிரபு. அப்பா நடித்தது மாதிரியான கெட்-அப் என்றதும் வழக்கத்தை விட, அதிக ஈடுபாட்டுடன் இப்படத்தில் நடித்த பிரபு, "அப்பா நடித்ததில் 50 சதவீத நடிப்பை நான் வெளிப்படுத்தி இருந்தாலும், அதுவே எனக்கு பெரிய வெற்றி தான்...' என்கிறார். — சினிமா பொன்னையா.

* அமலா பாலுக்கு இயக்குனர் விளக்கம்!
இயக்குனர் விஜய் இயக்க, விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா, அமலா பால் இருவரும் நாயகிகள். ஆனால், அனுஷ்கா என்றதும், தன்னை டம்மியாக்கி விடுவர் என்று படத்திலிருந்தே விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்தார் அமலா பால். இதைத் தொடர்ந்து, "அனுஷ்காவுக்கு வெறும் கிளாமர் ரோல்தான்; உங்களுக்குத்தான் பர்பாமென்ஸ் ரோல்...' எளறு இயக்குனர் விஜய் விளக்கிய பிறகே, விலகும் முயற்சியை வாபஸ் பெற்றிருக்கிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்! — எலீசா.

* இந்தியை தவிர்க்கும் த்ரிஷா!
கட்டாமிட்டா இந்திப் படம் தோல்வியடைந்ததோடு, விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீ-மேக்கிலிருந்தும் வெளியேறியதால், த்ரிஷாவுக்கு மனதளவில் இருந்த இந்தி சினிமா மோகம் குறைந்து விட்டது. மீண்டும் தமிழ், தெலுங்கில் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள த்ரிஷா, தன் ஆஸ்தான ஹீரோக்களை சந்தித்தும் பட வேட்டை நடத்தி வருகிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை. — எலீசா.

* கவர்ச்சி ஆணழகன் சீயான் விக்ரம்!
உலகிலேயே செக்சியான பெண், பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைப் என்று இங்கிலாந்து பத்திரிகை நடத்திய ஆய்வில் வெளியானது போல், பிரபல ஆங்கில இதழ் ஒன்று, உலகிலேயே கவர்ச்சியான ஆண்கள் பட்டியல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில், நம்ம ஊர் நடிகர் சீயான் விக்ரமின் பெயரும் இடம்பெற்றுள்ளது. "உடல் கவர்ச்சிக்கு பிரத்யேகமாக நான் எதையும் செய்து விடவில்லை. வெறும் உடற்பயிற்சி மட்டுமே செய்து வருகிறேன்...' என்கிறார் விக்ரம். — சி.பொ.,

* கதகளி பயின்ற டாப்ஸி!
"வந்தான் வென்றான்' படத்தில் கேரளத்து கதகளி நடனம் இடம் பெறுகிறது. ஆனால், ஜீவாவுக்கு ஜோடியாக அப்படத்தில் நடிக்கும் டாப்ஸிக்கு, கதகளி தெரியாது என்பதால், கேரளா சென்று, ஒரு மாதம் அந்த நடனத்தை முறைப்படி பயிற்சி பெற்றே சென்னை திரும்பியுள்ளார். இதில், டாப்ஸியுடன் இணைந்து கதகளி ஆட கேரளாவிலிருந்து 25 நடன பெண்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆடாததும் ஆடி ஐயனாருக்கு காப்பும் அறுத்தாச்சு! — எலீசா.

* நமீதா எதிர்காலத் திட்டம்!
வில்லி அவதாரம் எடுத்த போதும், எதிர்பார்த்தபடி நமீதாவுக்கு புதுப்படங்கள் கமிட் ஆகவில்லை. அதனால், சினிமா உலகம் சீக்கிரமே தனக்கு டாடா சொல்லி விடும் என்பதை யூகித்த நமீதா, சூரத்தில் தன் தந்தை நடத்தி வரும் ஜவுளி வியாபாரத்தில் முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தும் எதிர்கால நலத் திட்டத்தில் இறங்கியிருக்கிறார். ஆடி ஓடி நிலைக்கு வந்தது! — எலீசா.

* முருகதாஸ் படத்திலிருந்து விலகிய விமல்!
ஹாலிவுட் பட நிறுவனத்துடன் இணைந்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தில், "களவாணி' விமல், ஜெய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க இருந்தனர். ஆனால், இப்படத்தில் ஜெய்யை விட தன் கேரக்டர் டம்மியாக இருப்பதை அறிந்த விமல், தனக்கு பேசிய சம்பளம் மிகக் குறைவு என்ற காரணத்தை சொல்லி, படத்திலிருந்தே விலகி விட்டார். இதைத் தொடர்ந்து, விமல் நடிக்க இருந்த ரோலில், ஷ்ரவானந்த் என்ற புதியவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். — சி.பொ.,

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rahul - மகேseychelles,செசேல்ஸ்
18-ஜன-201100:31:20 IST Report Abuse
rahul i like read story books in tamil
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X