உலகில் மிகவும் குள்ளமான பெண் !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

முழுமையான பெண்ணாக இருக்கும் ஒருவரின் எடை, பிறந்த குழந்தையை விட கொஞ்சம் அதிகமாக இருக்குமா? "என் எடை அப்படித்தான்...' என அதிசயமாக சொல்கிறார் ஒரு பெண். உலகின் மிகவும் குள்ளமான பெண் என சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அந்த பெண்ணின் பெயர் ஹாட்சிஸ் ஹோகாமன். இவர், துருக்கி நாட்டில் கதிரிலி என்ற நகரில் வசிக்கிறார். இவர் உயரம் வெறும் 28 அங்குலம் தான்.ஏதோ ஒரு குறைபாடு காரணமாக இந்த பெண்ணின் உயரம் மட்டும் அதிகரிக்கவே இல்லை. இவர் அம்மா உட்பட, இவர் வீட்டில் எல்லாருமே வழக்கமான உயரம் கொண்டவர்கள் தான். ஹாட்சிஸ் மட்டுமே வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கிறார். இது குறித்து ஹாட்சிஸ் கூறியதாவது: நான் பள்ளியில் படிக்கும் போதே உயரம் குறைவாகத்தான் இருந்தேன். என் தோழிகள் எல்லாருமே என் உயரத்தை கிண்டல் செய்வர். அப்போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால், இப்போது என் உயரம் காரணமாக நான் புகழ் பெற்று விட்டேன். இந்த பெருமையால், நான் மிகவும் உயர்ந்தவளாக கருதுகிறேன். நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என கடவுள் முடிவு செய்து விட்டார். என்னை நேசிப்பவரை நான் ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன் என நம்புகிறேன் என்றார். ஹாட்சிசின் வயது இப்போது 21. உலகின் மிகவும் குள்ளமான மனிதர், நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திர தாபா. அவர் உயரம் 25.8 அங்குலம். தாபாவை விட இந்த பெண் உயரம் சிறிது அதிகம். ஹாட்சிஸ் குறித்து அவர் தாய் ஹாதுன் கூறியதாவது... நான் கர்ப்பமாக இருந்த போது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பிரசவமும் இயற்கையாகத்தான் இருந்தது. எல்லா குழந்தைகளையும் போலத்தான் பிறந்த போது, என் குழந்தையின் எடையும் இருந்தது. ஒரு வயது ஆன போதுதான் அவள் உயரமாகவில்லை என்பது தெரிந்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். அவளை பரிசோதித்த டாக்டர்கள், "ஏன் அவள் உயரம் அதிகரிக்கவில்லை என தெரியவில்லை...' என்றனர். அவளுக்கு நான்கு வயது ஆன போது அவள் வளர்ச்சி நின்றது என்றார். இவர் கணவர் பெயர் இப்ராகிம். இந்த தம்பதிக்கு இன்னொரு மகன் உண்டு. அவர் மற்றவர்களைப் போலவே வழக்கமான உயரத்துடன் இருக்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்களால், தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இப்போது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற உள்ளது. அதன் பின் விளம்பரங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து உதவிகள் வரும் என இவர் எதிர்பார்க்கிறார். ***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜ்குமார் M - காக்கிநாடா,இந்தியா
22-ஜன-201100:43:06 IST Report Abuse
ராஜ்குமார் M நலமாக வாழ வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Tamil - சுல்தான்பேட்டை.கோயம்புத்தூர்.,இந்தியா
20-ஜன-201109:29:52 IST Report Abuse
Tamil இறைவன் படைப்பில் எத்துனை வினோதங்கள், அந்த பெண்ணை நலமோடு வாழ வாழ்த்துகிறேன்...!!!
Rate this:
Share this comment
Cancel
rajkumar - sivagangai,இந்தியா
17-ஜன-201117:52:46 IST Report Abuse
rajkumar antha girl nambikai ku enathu valthukal .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X