சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ? - எஸ்.உமாபதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

சின்னஞ்சிறிய பறவையான சிட்டுக்குருவி, உருண்ட தலையும், குட்டையான வாலையும், சிறிய அலகையும் கொண்டது. ஆண் குருவியின் கழுத்துப் பகுதி கறுப்பாகவும், தலையின் மேல் பகுதி இளம் கறுப்பாகவும், தாடைப் பகுதி வெள்ளையாகவும் இருக்கும். பெண் குருவியின் கழுத்து பழுப்பாக காணப்படும். அலகு, மஞ்சள் கலந்த காவி நிறத்தில் காணப்படும். தானியங்களை உண்ணும். தானியங்கள் கிடைக்காத காலங்களில், பழங் களை உண்டு வாழும். இரை தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், குப்பைகளில் உள்ள புழுக்களையும், வண்டுகளையும் உண்ண தயங்காது. இந்தியா முழுவதும் காணப்படும் சிட்டுக்குருவியினம், கிராமப்புறங்களில் அதிகம் வசிக்கும். தானியங்கள் தாராளமாக அங்கு கிடைப்பதே இதற்கு காரணம். பெரும்பாலான பறவையினங்கள் மனிதர்களிடம் இருந்து விலகியே வாழும் தன்மை கொண்டவை. ஆனால், சிட்டுக்குருவிகள் மனிதர்களுடன் இணைந்த வாழ்க்கை முறையை கொண்டவை. மரங்கள், பாறை இடுக்குகளில் கூடுகளை கட்டாமல், மனிதர்கள் வாழும் வீடுகளில் தான் அவை கூடு கட்டி வாழ்கின்றன. இதனாலேயே, இவை களுக்கு, "ஹவுஸ் ஸ்பாரோ' என்று பெயரிடப் பட்டுள்ளது. மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காத காரணத்தால், இவை பெரிதும் விரும்பப் படுகின்றன. வீடுகளில் குருவிகள் கூடு கட்டினால் அது செல்வத்தையும், சந்ததி விருத்தியையும் அளிக்கும் என்றும், எனவே, குருவி கூட்டை கலைக்கக் கூடாது என்றும் ஒரு நம்பிக்கை இன்றைக்கும் கிராமப்புறங்களில் நிலவுகிறது. இப்பறவைகள், கூடுகளை முழுக்க முழுக்க, மெத்தென்று இருக்கும் வைக்கோலை கொண்டே கட்டுகின்றன. சிட்டுக் குருவிகளுக்கு பூனையும், பாம்பும் தான் பெரிய எதிரிகள். இவற்றின் இறைச்சியை உண்டால் இளமை திரும்பும், வீரியம் கிடைக்கும் என்று சிலர் கருதுவதால், மனிதர்களும் பல நேரங்களில் சிட்டுக் குருவிகளுக்கு எதிரியாகி விடுகின்றனர். ஒரு காலத்தில், "கீச் கீச்' என்ற சத்தத்துடன் இங்கும் அங்குமாக ஏராளமான சிட்டுக் குருவிகள் அலைந்து கொண்டிருந்தன. விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் இரை தேடுவதை காண முடிந்தது. சமீப காலமாக சிட்டுக் குருவிகளை காண்பது அரிதாக உள்ளது. நகரங்களில் அவற்றின் நடமாட்டமே முற்றிலுமாக ஒழிந்து போய் விட்டது. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளே சிட்டுக்குருவிகள் இனம் அழிவதற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், சிட்டுக் குருவிகள் அழிய மொபைல்போன் டவர்கள் ஒரு சதவீதம் என்ற அளவில் தான் காரணமாக இருக் கின்றன என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவற்றின் இனப் பெருக்கம் குறைவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய காலக் கட்டத்தில் கிராமங் களில் கூட குடிசை மற்றும் ஓட்டு வீடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அனைத்து வீடுகளும் கான்கிரீட் தளங்களாக மாறி விட்டன. சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ற வகையில் இன்றைய கான்கிரீட் வீடுகள் இல்லாததால், அவை இருப்பிடம் இல்லாமல் அலைபாய்கின்றன. மனிதர்களோடு, மனிதர்களாக வாழும் இயல்பு கொண்ட சிட்டுக்குருவிகள், கூடு கட்ட முடியாமல் தவிப்பதால், இனப்பெருக்கம் செய்ய முடியாமல் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeeva - Coimbatore,இந்தியா
22-ஜன-201114:35:31 IST Report Abuse
Jeeva இந்த கட்டுரையை படைத்த உமாபதி அவர்களுக்கு நன்றி. இதிலிருந்து இயற்கையின் அழிவு ஆரம்பமானது தெரிகிறது. இனிமேலாவது விழிப்புடன் இயற்கையை காப்போம். we are developing day by day and also forgetting the past. Think twice and act Wise. Thanks all
Rate this:
Share this comment
Cancel
ராம்குமார் - மதுரை,இந்தியா
21-ஜன-201111:33:39 IST Report Abuse
ராம்குமார் இன்னொரு விஷயம், சிட்டுக்குருவியால நடக்க முடியாது, அது தாவி தாவி தான் போகும். என்னோட சின்ன வயசுல, எங்க வீட்ல இருக்குற அரசி மூட்டைய நாலஞ்சி சிட்டு குருவிங்க சுத்தி சுத்தி வந்து கொத்திகிட்டே இருக்குறத பாத்த நினைவு இன்னமும் பசுமையா இருக்கு. இப்பல்லாம் அதுங்கள பாக்கவே முடியல்ல, எங்க இருக்கோ என்ன பண்ணிட்டிருக்கோ? :( ..
Rate this:
Share this comment
Cancel
Raj - Aranthangi,இந்தியா
17-ஜன-201115:49:55 IST Report Abuse
Raj I am here to inform that using of fertilizer and pesticide and strong chemicals in agriculture is the main reason of this. please think of this earlier before we lose other birds also
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X