கவிதைச்சோலை - கன்னி மனது !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

* மடிப்பு மாறாத
மங்களப் பட்டுடுத்தி,
மணம் மாறாத
மல்லிகை சூடி,
மனம் நிறைய
கனவுகளுடனே,
முழு நிலவாய்
புன்னகைத்து நின்றேன்!

* போய் சொல்கிறோமென
போனவனையெல்லாம்
பேய் காற்று கொண்டு
போனதோ...
போன இடம் தெரியாமல்
போய் தொலைந்தார்களே!

* ஒப்பனைக்குப் பின்,
ஒப்பனையில்லா
ஓர் மனது,
ஒப்பாரி வைத்து அழுகிறதே!

* ஒருவனுக்கும் பணம் தெரிந்தளவு
மனம் தெரியவில்லையே!

* இன்னும் எத்தனை பேர்
பெண் பார்க்க வருவர்...
அலங்கரித்தே நான்
அலுத்துப் போக!

* கள்ளமில்லா பருவத்திலே,
கள்ளிப் பால் கொடுத்துக்
கொன்றிருக்கலாம்...
நாசியிலே நெல் போட்டு
நாசூக்காய் முடித்திருக்கலாம்...
இப்படி
நித்தம் கொல்வதற்கு!

* ஒப்பனைக்குப் பின்,
ஒப்பனையில்லா
ஓர் மனது
ஒப்பாரி வைத்து அழுகிறதே!

— நிபுணா, மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NNAJAY - madurai,இந்தியா
19-ஜன-201116:37:46 IST Report Abuse
NNAJAY Nejai thotum anbava kavithai
Rate this:
Share this comment
Cancel
வ.கண்ணதாசன் - சென்னை,இந்தியா
18-ஜன-201115:17:08 IST Report Abuse
வ.கண்ணதாசன் ஓகே சூப்பர் அக்கா
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
16-ஜன-201117:09:12 IST Report Abuse
Rameeparithi Kavithaiyalla...! kalathin kannadi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X