பாக்ஸ் மேட்டர் !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2011
00:00

* 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போன உடைகள்!
பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக் காவைச் சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர், 1980ம் ஆண்டு, பிரிட்டனில், "பேட் டூர்' என்ற பெயரில் ஓரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது, அவர் பயன்படுத்திய கையுறை, தொப்பி போன்றவை சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. இரண்டு கோடி ரூபாய்க்கு அவற்றை ஒரு ரசிகர் ஏலத்தில் வாங்கினார். இவை தவிர மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கோட், வாசனை திரவியம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன.
இதே ஏலத்தில் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மூளை எக்ஸ்ரே பிலிம் ஏலத்திற்கு வந்தது. அந்த பிலிம் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. - ஜோல்னா பையன்.

* நடிப்பு பயிற்சி பெறும் லியாண்டர் பயஸ்!
பிரபல இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், திரைப்பட நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்து, திரைப்படத்தில் நடிக்க பயிற்சி பெற்று வருகிறார். அசோக் கோஹ்லி இயக்கும், "ராஜதானி எக்ஸ்பிரஸ்' என்ற இந்தி திரைப்படத்தில், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் நடிக்கிறார். டென்னிஸ் எப்படி சிறப்பாக ஆடுகிறாரோ, அது போல, நடிப்பிலும் சிறந்த திறமையும், பயிற்சியும் பெற வேண்டும் என்று அவர் கருதுகிறார். பிரபல இந்தி நடிகர் அனுபம்கேர் நடத்தும் திரைப்பட நடிப்பு பயிற்சி நிலையத்தில் சேர்ந்திருக்கிறார். ராஜதானி படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்கப் போகும் நடிகை யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. எந்த நடிகையோடு நடித்தாலும், தான் நன்றாக நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் இந்த டென்னிஸ் சாம் பியன். - ஜோல்னா பையன்.

* உஷார்: உங்கள் போனும் ரிகார்டு செய்யப்படலாம்!
இந்தியாவில் இப்போது மொபைல் போன், லேண்ட் லைன் போன்கள் என 60 கோடிக்கு மேல் போன் இணைப்புகள் உள்ளன. இவற்றில், கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான போன்கள் ரிகார்டு செய்யப் படுகின்றன என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தனியார் நிறுவனத்தினர் போன் சேவையில் நுழைந்த உடன், போன்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து விட்டது. அதே நேரத்தில், நவீன தொழில் நுட்பம் காரணமாக, போன்களை ஒட்டுக் கேட்கும் முறையும் நவீனமாகி விட்டது. அரசு உளவுத்துறை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் போன் ஒட்டுக் கேட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ஒட்டுக் கேட்பது என்றால், போன் பேசும் போதே ஒட்டுக் கேட்பது கிடையாது. எந்த, எந்த போன்களை எல்லாம் ஒட்டுக் கேட்க விரும்புகின்றனரோ, அந்த போன்களின் எண்களை குறிப்பிட்ட நிறுவனத்தில் கொடுத்து விட்டால் போதும். குறிப்பிட்ட போன்களுக்கு வரும் அழைப்புகள், எல்லாமே தானாகவே பதிவாகி விடும். அந்த பதிவு, பின்னர், "சிடி' யாக போடப்பட்டு யார் ஒட்டுக் கேட்க கூறினரோ, அவர்களுக்கு வழங்கப்பட்டு விடும். அவர்கள், எப்போது வேண்டுமானாலும் அந்த, "சிடி'யை போட்டு பேச்சை கேட்கலாம். இவ்வாறு, இந்தியாவில் பல லட்சம் போன்கள் தினமும் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஒட்டுக் கேட்கப்பட்ட காதல் ரசம் சொட்டச் சொட்ட காதலர்கள் பேசும் பேச்சு அடங்கிய, "சிடி'க்கள் சென்னை பர்மா பஜாரில் விற்பனையில் சக்கை போடு போடுவது கூடுதல் தகவல். எனவே, அடுத்த முறை போன் பேசும் போது உஷாராக பேசுங்கள். — ஜோல்னா பையன்.

* ஸ்டெதஸ்கோப்புக்கு பதிலாக வருகிறது ஐ போன்!
டாக்டர்கள் என்றாலே, எல்லாருக்கும் உடனே நினைவுக்கு வருவது அவர்கள் கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப் தான். இதயத் துடிப்பை பார்க்க டாக்டர்கள் இந்த கருவியை பயன்படுத்துகின்றனர். விரைவில், "ஸ்டெதஸ்கோப்' அருங்காட்சியகத்துக்கு சென்று விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஸ்டெதஸ்கோப்புக்கு பதில் இதயத் துடிப்பை தெரிந்து கொள்ள, "ஐ போன்' கருவியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். லண்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பீட்டர் பென்ட் லீ என்பவர் இந்த, "ஐ ஸ்டெதஸ்கோப்' கருவியை கண்டுபிடித்துள்ளார். ஐ போனில் உள்ள சென்சார் கருவி மூலம் இதயத் துடிப்பு கண்காணிக்கப்படும். ஐ போனை உபயோகிக்கும் டாக்டர்கள் பலர், உலகம் முழுவதும் இதற்கான சாப்ட்வேரை தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இலவசமாக கிடைக்கும் இந்த சாப்ட்வேர் மூலம் அந்த டாக்டர்கள், தங்கள் நோயாளிகளின் இதய துடிப்பை தங்கள் மொபைல் போன் மூலமே தெரிந்து கொள்ளலாம். - ஜோல்னா பையன்.

* ராணி முகர்ஜிக்கு எதிராக போர்க்கொடி!
"நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிகா' என்ற இந்திப் படம், ஒரு உண்மைக் கதையை தழுவியது. தைரியமாக செயல்படும், துணிச்சல்காரியான பத்திரிகையாளராக, முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் இந்தி நடிகை ராணி முகர்ஜி.தன் காரெக்டருக்கு தேவைப்படுகிறது என்பதற்காக, ஒரு சில காட்சிகளில் அவர் சிகரெட் பிடிக்கிறார். "படத்தில், பிரபல நடிகை சிகரெட் பிடிப்பது தவறு...' என்று, பல தன்னார்வ சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றன. "ராணி முகர்ஜி, சிகரெட் பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும்...' என்று, சுகாதார அமைச்சரகத்திற்கும், மத்திய சென்சார் போர்டிற்கும் எழுதியிருக்கின்றனர்.சமீபத்தில் ரிலீசான குஸார்ரிஷ் என்ற படத்தில், ஐஸ்வர்யா ராய் ஓரிரு காட்சிகளில் சிகரெட் பிடித்தார். அவை, படத்திலும் இடம் பெற்றிருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.- ஜோல்னா பையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X