பொதுவாக பேசும்போது பேச்சோடு எதிரில் இருப்பவரின் முகபாவம், உடல்மொழி இவற்றைக் கொண்டே நாம் முடிவுகளை எடுக்கிறோம். அப்படியில்லாமல் கண்களை மூடிக்கொண்டு பேசி பார்த்தால் எப்படியிருக்கும் என்று ஜேனட் ஆர்லேன் (Janet Orlene) என்பவர் சிந்தித்தார். கடந்த ஆண்டு பெங்களூரு கப்பன்பார்க்கில் 160 பேரோடு இந்த வகைச் சந்திப்புகள் ஆரம்பமாயின. தொடர் சந்திப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து. மரங்கள் சூழ்ந்த இடத்தில், கைக்குட்டை மாதிரி துணிகொண்டு, கண்களைக் கட்டி, நண்பர்களோடும், புதியவர்களோடும் உரையாடுவது என்பதுதான் இங்க் வீவர் (Ink Weaver) அமைப்பு ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வுகளின் அடிப்படை. இதன் மூலம் எதிரில் அமர்ந்து பேசுபவரின் தோற்றம் நம்மிடம் ஏற்படுத்தும் முன் முடிவுகள் இல்லாது, வேறு கோணத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடிவதாக ஜேனட் கூறுகிறார். இந்த நிகழ்வுகளின் மூலம் தங்களின் மனத்தடைகள் அகன்று புத்துணர்ச்சி அடைவதாக பங்கேற்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.