சீனாவில் உள்ள சாங்கியுங் (Chongqing) நகரில் அமைந்துள்ள பேரங்காடி ஒன்று நகரும் மின் ஏணிகளுக்குப் பதிலாக சறுக்கு மரம் அமைத்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 150 அடி உயரம் கொண்ட புதுமையான சறுக்கு மரம் ஒளி ஊடுருவும் கண்ணாடியால் ஆன குழாய் போல் உள்ளது. எனவே இதில் சறுக்குபவர்கள் பேரங்காடியைச் சுழல் வடிவில் பார்த்துக்கொண்டே இறங்க முடியும். நான்காவது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு 12 நொடிகளில் சறுக்கு மரத்தின் மூலம் சென்றடைய முடியும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை சறுக்கு மரத்தில் அனுமதிப்பதில்லை. இதில் சறுக்கும் முன் பாதுகாப்பிற்கான அங்கி ஒன்றை வாடிக்கையாளர்கள் அணிந்துகொள்ள வேண்டும். கீழே இறங்குமிடத்தில் மென்மையான விரிப்புகள் விரிக்கப்பட்டிருப்பதால் இதில் பயணிக்கும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சீனாவில் ஷாங்காய் நகரில் 2016 ம் ஆண்டு ஒரு பேரங்காடியில் இதே போன்ற சறுக்கு மரம் அமைக்கப்பட்டது.