அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

ஆண்-, பெண் இருவரிடையே, தங்களைப் பற்றிய எண்ணம் யாருக்கு அதிகம்? இதோ, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' சொல்கிறது:
(உ.ஆ., படித்து சொன்னது)
உடல் சிறிது பாதிக்கப்பட்டாலும் அதை பெரிதுபடுத்தி, ஆர்ப்பாட்டம் செய்வதில் ஆண்களை மிஞ்சுபவர் பெண்கள். இது உண்மையா?
உண்மை... 'என் கணவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போது, அவரை பார்க்க வேண்டுமே...' என்று, அங்கலாய்க்கும் பெண்களை, ஆண்கள் மிஞ்ச முடியாது.
பெண்களை விட ஆண்களுக்குத் தான் எப்போதும் தங்களைப் பற்றிய எண்ணம்...
தவறு; பெண்களுக்கு தங்களைப் பற்றிய பிரச்னைகளே பெரிதாகத் தெரியும்; வெளி விஷயங்களில் அவர்களுக்கு அதிகம் அக்கறை கிடையாது.
பெண்களைப் பற்றி ஆண்கள் பேசுவதை விட, ஆண்களைப் பற்றி பெண்கள் தான் அதிகம் பேசி விவாதிப்பர் என்பது உண்மையா?
உண்மை; தங்கள் நேரத்தில் பெருமளவு, ஆண்களை பற்றிய விவாதத்தில் பெண்கள் ஈடுபடுகின்றனர் என, பல்கலைக் கழக ஆராய்ச்சிகள் மூலம், தெரிய வந்துள்ளது. ஆண்களைப் பற்றிய விஷயங்கள் மற்றும் மற்ற பெண்களின் வம்புப் பேச்சுக்களைத் தவிர, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலும் ஆண்கள் பிசினஸ், பணம், மற்ற ஆண்கள், கடைசியில் தான் பெண்களைப் பற்றி பேசுகின்றனர்.
பெண்களை விட ஆண்கள் நேர்மையானவர்கள்; உண்மையா?
தத்துவ ஆராய்ச்சியின்படி, விஷயங்களை மறைத்துப் பேசுவதில், ஆண்களை விட பெண்கள் தேர்ந்தவர்கள்; ஆனால், பச்சையாக, அப்பட்டமான பொய்களைச் சொல்லும் சாமர்த்தியத்தில், ஆண்களே வல்லவர்.
ஆண்களை விட நேரத்தைக் கழிக்க சிரமப்படுவர் பெண்கள். அலுப்பு சீக்கிரமே தோன்றி விடும்; இது சரியா?
ஆண்களுக்குத் தான் வெகு எளிதில் போரடிக்கத் தொடங்கும்; தொடர்ந்து ஒரு வேலை செய்தால், அசதி அதிகம் ஏற்படும். ஒரே வேலையை, அலுக்காமல் பெண்கள் தொடர்ந்து செய்ய முடிவதன் காரணம், பகற்கனவு காண்பதும், வாய்ப் பேச்சும் தான்!
ஆண்களை விட அதிகம் மகிழும் சுபாவமும், தன்னம்பிக்கையும் பெண்களுக்கு உண்டு.
தவறு; மனத்தளர்ச்சியோ, மனச்சோர்வோ, எதுவானாலும் பெண்களுக்கு சீக்கிரமே ஏற்பட்டு விடும். வாழ்க்கையின் மேடு, பள்ளங்களைத் தாங்கும் சக்தி குறைவு.
மனைவியை, கணவன் புரிந்து கொள்வதை விட, கணவனை, மனைவி நன்கு புரிந்து கொள்வாள். இது சரியா?
தவறு; சில தத்துவ நிபுணர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தினர். திருமணமான பல ஜோடிகளை அழைத்தனர். முதலில், கணவன்மார்களை தனியே கூப்பிட்டு, அவரவர் மனைவியைப் பற்றிய அபிப்ராயங்களைச் சொல்லச் செய்தனர். முடிவில் தெரிந்தது... கணவனே, தன் மனைவியை நன்கு புரிந்து கொண்டிருக்கிறான் என்று! எந்தெந்த நேரத்தில் எப்படி மனம் மாறுவாள் என்பதை, கணவனால் நன்கு யூகிக்க முடிகிறது என்பதை கண்டறிந்தனர்.
துன்பங்களும், இடையூறுகளும் வரும்போது, அதிகம் மனம் உடைந்து போவர், பெண்கள். இது சரியா?
தவறு; சிறு தொல்லைகள் வரும்போது கலங்கினாலும், பெரிய இடையூறுகள் நெருங்கும் போது, சராசரி ஆண்களை விட பெண்களே உறுதியுடன் இருப்பர். இது, மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.
ஆபத்து வரும் சமயத்தில், பெண்களைக் காட்டிலும் ஆண்கள் உஷாரானவர்கள்; இது சரியா?
சரி; ஆபத்து எதிர்நோக்கி வருவதை குறிப்பால் உணர்ந்து கொள்வதிலும், அதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதிலும், பெண்களை மிஞ்சியவர்கள் ஆண்கள். இது, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.
பேச்சுத் திறனில் பெண்களே வல்லவர்கள்; உண்மையா?
பால பருவம் தாண்டியதுமே, ஆண்களின் பேசும் சக்தியை விட, அதிக சக்தியைப் பெற்று, விரைவில் சுலபமாகவும், வேகமாகவும் நீண்ட நேரமும் பேசும் தனித் தன்மையை பெற்று விடுகின்றனர், பெண்கள். ஆனாலும், மற்றவர்கள் பேசுவதை கிரகிக்கும் தன்மை, ஆண்களைவிட பெண்களுக்குச் சற்று குறைவுதான்.
-- உண்மை தானா பெண்களே?

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், தொல்லியில் துறை பேராசிரியராக பணிபுரிந்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த மரிஜா ஜிம்பட்ஸ் எனும், 68 வயது பெண்மணி; இவர், இதுவரை, 20 புத்தகங்களும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியுள்ளார். தொல்லியல் துறையின், ஐந்து அகழ்வாராய்ச்சிகளுக்கு தலைமை தாங்கி உள்ளார். இவருக்கு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும்.
சமீபத்தில், 'ஹர்பர் அண்ரோ' எனும் அமெரிக்க புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள, இவர் எழுதிய
'தி லேங்குவேஜ் ஆப் தி காடசஸ்!' என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. (வழக்கம் போல படிப்பதற்கு உதவியவர், ஒரு உதவி ஆசிரியர்.) இப்புத்தகத்தின் தலைப்பை, 'அம்மன்கள் உரைத்தது' எனக் கொள்ளலாம்!
புத்தகத்தில், ஐரோப்பிய நாட்டுப் பெண்கள் எப்போது, எப்படி ஆண்களுக்கு அடிமைப்பட்டு போனார்கள் என்பதை, எடுத்துக் கூறி உள்ளார். கி.மு., 7,000ம் ஆண்டு முதல், 3,500ம் ஆண்டு வரை ஐரோப்பியர், பெண் கடவுளரை தெய்வமாக வழிபட்ட தாகவும், பெண்களே குல, - குடும்பத் தலைவியராக, தலைமைப் பூசாரிகளாக இருந்ததாகவும், பல ஆண்களை மணக்கும் உரிமை பெற்று இருந்ததாகவும் தன் ஆராய்ச்சி மூலம், கண்டுபிடித்ததாக எழுதியுள்ளார். ஆண்களை வேலையாட்களாக, வேட்டைக்காரர்களாக, கட்டடத் தொழிலாளிகளாகவும் பயன்படுத்தியுள்ளனர் பெண்கள்.
கி.மு., 4,000 முதல், 3,500ம் ஆண்டுகளில், ஐரோப்பாவில் இருந்த இந்தக் கலாசாரம், ரஷ்யர்களின் படை எடுப்பால், அழிந்தது. பெண்களை அடிமைப்படுத்தி, மனைவி, மகள் என்று, தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆண்கள் என்று எழுதியுள்ளார்.
இவரது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், அமெரிக்காவில் உள்ள பெண் விடுதலை விரும்பிகளுக்கு, தெம்பளித்து உள்ளது.
எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்த பெண்களை, இன்று அடிமைகளாக்கி, சித்ரவதை செய்கிறது இந்த உலகம்!
அம்மணியரே... 'இந்தா சம உரிமை...' என, எந்த ஆணும் உரிமைகளை எடுத்துக் கொடுத்து விடப் போவதில்லை. இனி, நீங்களே உங்க உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X