அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

ஜெ.முரளிதரன், திருவான்மியூர்: மாமியார் -- மருமகள், - மருமகளுக்கு, மருமகள் உள்ள பாரம்பரியம் உள்ள குடும்பத்தின் கட்டு குலையாமல் இருக்கவும், பாட்டன், - மகன், - பேரன் மனம் சங்கடப் படாமல் இருக்கவும், பெண்களில் விட்டுக் கொடுத்து சமரசமாக இருக்க வேண்டியது யார்?
'ம'னாக்கள் அனைவருமே இசைந்து போக வேண்டும். அப்போது தான் குடும்ப, 'ஹார்மனி' காப்பாற்றப்படும். ஒவ்வொரு, 'மா'வும் தன் வீட்டுக்கு வந்த, 'ம'வை, மருமகளாக எண்ணாமல், மகளாக எண்ண வேண்டும். அப்போது தான், பாட்டன், மகன், பேரன் எல்லாருமே சந்தோஷமாக இருக்கலாம்!

என்.கற்பகம், சிதம்பரம்: எதிலும் திருப்தி அடையாதவர்கள் ஆண்களா, பெண்களா?
முதலாமவர் தான்; 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற குணம் உடையவர்கள் பெண்கள் தான்!

ஆர்.எஸ்.வேலாயுதம், கோவை: பெண்கள் வேலைக்குப் போவதால், நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?
90 சதவீதம் நன்மை தான். முதலில், பெண்ணுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது; அடுத்து, அடக்கு முறைகளுக்கு தலை பணிந்து நடக்கும் நிலை மாறுகிறது. குடும்பப் பொருளாதாரம் உயருகிறது! இன்னும் எத்தனையோ... அடுக்கிக் கொண்டே போகலாம்!

எஸ்.ரஞ்சனிபிரியா, சென்னை: அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட்டுக் குடும்பம் முறை கிடையாதாமே... முதியவர்கள் இதனால் சிரமப்பட மாட்டார்களா?
அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் ஏன் போகிறீர்கள்... இங்கே, நகரங்களில் என்ன வாழ்கிறதாம்! முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டு தானே போகின்றன!

கே.முபாரக், வத்தலக்குண்டு: கணவன் குடிகாரனாக இருந்தால், மனைவி தகராறு செய்கிறாள்; கணவன், மனைவி இருவருமே குடிகாரர்களாக இருந்து விட்டால் தகராறு ஏற்படாது அல்லவா?
அபாரமான கண்டுபிடிப்புத் தான் போங்கள்! கீழ்தட்டு மக்களில் இருபாலாருக்குமே குடிக்கும் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது. அங்கே, குடித்துவிட்டு, கணவனுக்கு சரிசமமாக மனைவியும், சேலையை தூக்கிக் கட்டி தகராறு செய்வதை கண்டதில்லையா? மொத்தத்தில் குடி, குடியைக் கெடுக்கும்.

என்.மலர்விழி, திருப்பரங்குன்றம்: கணவனால் மனத் துன்பத்துக்கு ஆளாகும் பெண்கள், அதை சகிப்பது, எதிர்ப்பது... எது சரி?
இரண்டுமே, 'எக்ஸ்ட்ரீம்' லெவலுக்கு போகக்கூடாது. மூங்கிலை வளைக்கலாம் என்பதற்காக, அளவுக் கதிகமாக வளைத்தால் என்னவாகும்? சகிப்பதும், எதிர்ப்பதும் சரியான சதவீதத்தில் இருந்தால், மனத்துன்பம் வெகுவாகக் குறையும்!

எஸ்.சுரேஷ்குமார், தேனி: நான்கு பெண்கள் ஒன்று கூடினால்... அவர்களால் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒற்றுமையாக இருக்க முடியாது என்கின்றனரே... உண்மையா?
பழங்கால, படிக்காத பெண்களுக்காக அந்த காலத்தில் சொல்லப்பட்ட சொலவடை இது! இன்றைய பெண்களில் அநேகர், குறைந்தபட்சம், 10வது வரையாவது படித்து விடுகின்றனர். என்னென்னவோ மேற்படிப்புகளும் படிக்கின்றனர்... ஒற்றுமையாக இருக்கின்றனர்... எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். எனவே, 'நூறு பெண்கள், ஐந்து நிமிடத்தில் தோழிகளாகி விடுகின்றனர்...' என, இனி மாற்றிக் கொள்ளலாம்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-மார்ச்-201707:27:28 IST Report Abuse
Natarajan Ramanathan நான்கு பெண்கள் ஒன்று கூடினால்... அவர்களால் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒற்றுமையாக இருக்க முடியாது என்கின்றனரே... உண்மையா? நூறு சதம் உண்மை. எனது அலுவலகத்தில்கூட நான்கு பெண்கள். அவர்களில் இரண்டுபேர் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர். மற்ற இருவரும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்த இருவரையும் ஏதாவறு குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நான்குபேருமே மற்ற ஆறு ஆண்களிடமும் பேசுவார்கள். பெண்களை திருத்தவே முடியாது என்பது சத்தியம்.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
05-மார்ச்-201706:39:18 IST Report Abuse
Manian திரு முரளீதரன்:என் வாழ்க்கையில் கையாண்ட முறை-திருமணம் செய்யும் முன், அம்மா நீயும், வரப்போற என் மனைவியும் எனது இரண்டு கண்கள். எனவே வரும் மருமகளிடம் எந்தவித தகராரும் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் மட்டுமே திருமணம். இல்லாவிட்டால் ஒண்டிக்கட்டை /பிரம்மாரி என்றேன். உங்களுக்கு எந்தவித அவமானமும் நேராதென்று சத்தியம் செய்து தருகிறேன். சரி என்று சத்தியம் செய்தார்கள்.அது போலவே வருங்கால மனைவியிடமும் சத்தியம் வாங்கினேன்.மணமான பின்பு, என் மனைவி இடம் "அம்மா இன்று உங்களுக்கு பிடித்த கீரை சாம்பார் செய்யலாமா " என்று உன் ஆசையை அவர்கள் ஆசை போல் சொல் என்றேன். அதன் பிறகு எல்லாம் அவள் இஷ்டம் போல்.என் வீட்டில் எந்த சண்டையும் வந்தில்லை.என் தாயாருக்கு "என் மருமக ஏம் பொண்ணு மாதிரி" என்ற பிடிப்பு கடைசிவரை இருந்தது. என் 2 மகன்களுக்கும் செல்லப் பாட்டியாகவே மறைந்தார். தனிமையில் என் மனைவியயை பாராட்டுவேன் அவர்கள் வீட்டிலும் ஒரு மகனாகவே இருந்தேன். 10 மாதம் ஆண் குழந்தைகளை தாய் சுமக்கும்போது, ஆண் குழந்தையின் ஒய் Y குரோமோசம் தாய் உடன் இணைந்து விடுகிறது. அதனால் உடலைவிட்டு பிறிந்த பின்பும் அந்த "என் பகுதி" என்பது மாறுவதில்லை. ஆண் குழந்தைகளின் இந்த ஒய் குரோமசமே அதிக அளவு, சில சமயம் ஒவ்வாமை காரணமாக,வாந்தி எடுப்பது போன்ற மசக்கைக்கு காரணம். 70% சத்துக்களை ஆண் கருக்கள் தாயிடமிருந்து உறிஞ்சி விடுவதாக ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.எனவே, ஆண் குழந்தைகள் ஒரு தாய்க்கு விலை இல்லா அங்கம். இதை எல்லாப் பெற்றோர்களும் தங்கள் பெண்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதே மருமகள் பின்னால் ஆண் வாரிசு பெரும் போது,தன் மாமியார் நடந்து கொண்டது போலவே தன் பிள்ளை தன் உடலில் இருந்து பிரிந்த பாகமாகவே கருதுவாள். ஆண் குழந்தை விலை அதிகமான தாயின் மூலம் படைக்கப்படும் உயிராகும். திருமணம் ஆகுமுன் இதைப் புரிந்து கொள்ளவேண்டும். சுமார் 20% பெண்களே இந்த புரிதல் இல்லாத அறிவு,தங்களுக்கு ஏற்படும் பயம் -ஆண் பிள்ளையை இழந்து விடுவோம் - என்ற தனக்குள் ஏற்படும் மன அழுத்தத்தை புரிந்து கொள்ளாமல்,புரிந்து கொள்ளும் வழி தெரியாமல், 80% குடும்ப மாமியார்-மருமகள் சண்டைக்கு காரணமாகி விடுகிறா்கள். நேற்ற மருமகள் இன்று தாய் என்பதையும் மறந்து விடுகிறார்கள் இதை தீர்க்க, மணமகன்,மணமகள்,இரண்டு தரப்பு பெற்றோர்களும் கவுன்சிலிங்கு செல்ல வேண்டும் ஆண்களுக்கு 27-28 வயதிலும், பெண்களுக்கு 22-23 வயத்திற்கும் மேலேதான் பொதுவாக,மன முதிர்ச்சி முன் மண்டை Frontal Lobe வளர்ச்சி முடிவில் ஏற்படுகிறது என்று மூளை ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. மேலும் சுமார் 27 வயதுக்கு மேலேதான் ஆண் விந்துவில், சிறந்த சுற்றுச்சூழல் வளர்ச்சியை உள்ளடக்கிய மரபணுக்கள் 80% மேல் குந்தைகளுக்கு கிடைக்கிறது என்றும் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. 1940க்கு முன் இல்லாத எல்லா மருத்துவ முன்னேற்றமும் உள்ள தற்காலத்தில், இன்னும் மனமுதிர்ச்சி-முன் மண்டை முழுவதும் ஆகாத நிலையில் வெரும் உடல் வளர்ச்சி சார்ந்த காலண்டர் வயதின் அடிப்படையில் திருமணம் செய்விப்பது சுயநலம். எப்படியாவது திருமணம் செய்து கொள்ளத்துடிக்கும் ஆண்கள், தங்கள் செக்ஸ் பால் உந்தலை, மணம் செய்யும் மணப்பக்குவம் என்று தங்களை ஏமாற்றிகக் கொள்ளும் அறியாமையை நீக்கி கொள்ளவேண்டும். செக்ஸ் இயற்கை வரம்.அதைப் புரிந்து கொள்வது, மனப்பக்குவம். திரு முரளீதரன் உங்கள் கேள்வி அம்பின் கூர்மையான முனை.பதில் பரந்து விரிந்தது- கற்றதும், பெற்றதும்.
Rate this:
05-மார்ச்-201723:06:31 IST Report Abuse
Sivalingamnice comment and dealt details about men and their emotional connect by research...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X