இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

குறும்பட இயக்குனராக ஜோதிகா!
மகளிர் மட்டும் படத்தில், குறும் படமெடுக்கும் இயக்குனர் வேடத்தில் நடித்துள்ளார், ஜோதிகா. ஒரு உண்மை சம்பவத்தை, அவர் படமாக்கும் போது, சந்திக்கும் பிரச்னைகள் தான், இப்படம். இதில், ஜோதிகாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், அவரை, 'டப்பிங்' பேச வைத்துள்ளார், இயக்குனர் பிரம்மா. இதற்கு முன், மாயாவி படத்தில் சொந்தக்குரலில், 'டப்பிங்' பேசியுள்ளார்.
சினிமா பொன்னையா

விஜய சேதுபதியின் வில்லன் ஆர்வம்!
ரம்மி, புறம்போக்கு மற்றும் இறைவி உட்பட, சில படங்களில், மல்டி கதாநாயகன் கதைகளில் நடித்துள்ள விஜயசேதுபதி, தற்போது, மாதவனுடன் நடிக்கும், விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து, மல்டி கதாநாயகன் கதைகளில் நடிக்க, ஆர்வமாக இருப்பதாக கூறி வருகிறார். அத்துடன், விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.
சி.பொ.,

இயக்குனர்களை காக்க வைத்த தனுஷ்!
வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் நடித்த தனுஷ், ராஜ்கிரண் நடிப்பில், பவர்பாண்டி என்ற படத்தை இயக்கும் வேலையில் இறங்கியிருப்பதால், அவர் நடித்து வந்த, கவுதம் மேனனின், என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வெற்றிமாறனின் வடசென்னை படங்கள் பாதியில் நிற்கின்றன. இதில், கவுதம்மேனன், தனுஷுக்காக காத்திருக்காமல், விக்ரம் நடிப்பில், துருவ நட்சத்திரம் படத்தை துவங்கி விட்டார். ஆனால், வெற்றிமாறனோ, 'தனுஷ் எத்தனை மாதங்களுக்கு பின் வந்தாலும், படப்பிடிப்பு நடத்துவேன்...' என்று காத்திருக்கிறார்.
சி.பொ.,

கவுதம்மேனன் படத்தில் தமன்னா!
தெலுங்கில் தமன்னா நடித்த படம், பெல்லி சூப்புலி. இப்படத்தை, தமிழில் தயாரிக்கிறார் இயக்குனர், கவுதம்மேனன். இதில், நாயகியாக நடிக்க, நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்ட சில நடிகைகளிடம், பேச்சுவார்த்தை நடத்தி வந்ததை அறிந்த தமன்னா, அவரை நேரில் சந்தித்து, குறைந்த சம்பளத்தில், நடித்து தருவதாக சொல்லி, ஒப்பந்தமாகி விட்டார். இதனால், மேற்படி நடிகைகள், தமன்னா மீது செம கடுப்பில் உள்ளனர். காண கிடைத்தது கார்த்திகை பிறை போல!
எலீசா

ஆக் ஷன் படத்தில் ராதிகா ஆப்தே!
ரஜினியுடன், கபாலி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகா ஆப்தேவுக்கு, அதன்பின் தமிழில் படங்கள் இல்லாததால், பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார். இந்நிலையில், தற்போது, சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியுள்ள ஆதித்யா, தன் அடுத்த ஆக் ஷன் படத்திற்கு, ராதிகா ஆப்தேயை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்திற்காக, இப்போதிருந்தே சண்டை பயிற்சி எடுத்து வருகிறார், ராதிகா ஆப்தே. ஆட்டத்துக்கு தகுந்த மேளம்; மேளத்துக்கு தகுந்த ஆட்டம்!
எலீசா

வில்லன் வேடத்தில் அர்ஜூன்!
நடிகர் அர்ஜுனுக்கு, கதாநாயகன் மார்க்கெட் இறங்கி விட்டதால், தன் மகள், ஐஸ்வர்யா அர்ஜுனை வைத்து, காதலின் பொன்வீதியில் என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். மேலும், சில படங்களில், குணசித்திர வேடங்களில் நடித்து வரும் அவர், விஷால் நடிக்கும், இரும்புத்திரை படத்தில், வில்லனாக நடிக்கயிருந்த ஆர்யா, விலகி விட்டதை அடுத்து, அப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!
அஞ்சான் நடிகைக்கு, நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதால், பல ஆண்டுகளாக, தன்னுடன் நெருங்கி பழகி வந்த நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டி வருகிறார். இதற்கு முக்கிய காரணம், அம்மணியின் வருங்கால கணவர் தான். 'இனிமேல், யாராக இருந்தாலும், இடைவெளி விட்டுத் தான் பழக வேண்டும்; முக்கியமாக, போனில் கடலை போடும் வேலையெல்லாம் கூடாது...' என்று, அதிரடி கட்டளை பிறப்பித்திருக்கிறார். இதனால், தற்போதைய தன் புதிய மொபைல் நம்பரை, ரகசியமாக வைத்திருக்கிறார் நடிகை.

தளபதி நடிகரின் மன்றத் தலைவராக இருந்தவர், அவரை பகைத்து, சண்டக்கோழி நடிகரிடம் தஞ்சமடைந்தார். அத்துடன், 'உங்களை, அந்த தளபதி நடிகருக்கு மேலே, உயர்த்தி காட்டுகிறேன்...' என்று உறுதி கொடுத்தார். ஆனால், அவர் சண்டக்கோழியிடம் சேர்ந்த நேரம், அவர் நடித்த எந்த படமும், வெற்றி பெறவில்லை. இதனால், கடுப்பான சண்டக்கோழி, 'தளபதி இடத்தை பிடிக்கலாம் என்று பார்த்தால், இருக்கிற இடமே காலியாகி விடும் போல் இருக்கே...' என்று, தளபதியை போட்டியாளராக நினைக்கும் மனநிலையில் இருந்தே மாறிவிட்டார்.

சினி துளிகள்
* தெலுங்கானா மாநிலத்தின், கைத்தறி தூதராக நியமிக்கப் பட்டுள்ளார், சமந்தா.
* மிஷ்கினின், துப்பறிவாளன் படத்தை அடுத்து, இரும்புத்திரை என்ற படத்தில் நடிக்கிறார், விஷால்.
* ஆர்யா நடிக்கும், சந்தனதேவன் படம், ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து உருவாகிறது.

அவ்ளோதான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X