மக்களை காப்பவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

'சுக்குக்கு மிஞ்சின வைத்தியமுமில்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சின தெய்வமுமில்லை' என்பது பழமொழி.
தீமைகளே மலிந்திருக்கும் யுகத்தை கலியுகம் என்பர். அத்தகைய கலியுகத்திலும், தீமைகளை நீக்கி, தன் அடியவரை காப்பவர், முருகப் பெருமான் என்பதாலேயே, 'கலியுகத்தும் காக்கும் கந்தக்கடவுள்' என்பார், பாம்பன் சுவாமிகள்.
ஒருசமயம், முருகனின் திருத்தலங்களுக்கு யாத்திரை புறப்பட்ட வண்ணச்சரபம் சுவாமிகள், இறுதியில் பழனிக்கு வந்தார். அங்கேயே மடத்தில் தங்கி, இறைவனை பூஜித்து வந்தார்.
மடத்திற்கு எதிரே இருந்த வீட்டில், மந்திர வித்தைகள், கைவரப் பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவர், தன் வீட்டு வாசலில் இருந்த பனை மரத்தில், குட்டி தேவதை ஒன்றை ஆவாகனம் செய்து, அதன் மூலம், மக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதும், பணம் கொடுக்க மறுத்தால், அவர்களுக்கு தீங்கு செய்வதுமாக வாழ்ந்து வந்தார்.
இதையறித்த வண்ணச்சரபம், அன்பர் ஒருவரை அனுப்பி, 'அந்த மாந்திரீகத் துறவியை அழைத்து வா...' என்றார். அவர் சென்று அழைத்த போது வர மறுத்து, 'ஏன் அழைத்தார்...' என்று கேட்டார், மாந்திரீகர்.
வந்தவரோ, 'துறவிக்கோலம் பூண்டும், குட்டி தேவதை மூலம் தீவினை செய்து, மக்களை அச்சுறுத்தி வாழ்கிறீர்களே... அது தவறு என்று உமக்கு அறிவுரை சொல்லி திருத்தவே, அவர் அழைக்கிறார்...' என்று சொன்னார்.
இதைக் கேட்டதும், மாந்திரீகருக்கு கோபம் வந்து, குட்டி தேவதையை ஏவி, வண்ணச்சரப சுவாமியை அழிக்க முயன்றார். குட்டித் தேவதையும், அவரை பின்புறமாக கட்டிப் பிடித்து, மிரட்டியது. அதை அதட்டியே விரட்டினார், வண்ணச்சரபம்.
ஆனாலும், தொடர்ந்து ஐந்து முறை, குட்டித் தேவதை, வண்ணச்சரபத்தை மிரட்டவே, ஆறாவது முறை, முருகப் பெருமானே, அக்குட்டித் தேவதையை வேலாயுதத்தால் குத்தி, தூக்கி எறிந்தார்.
குட்டி தேவதை, பிணமாக கீழே விழ, அடுத்த வினாடி, மாந்திரீகனின் வீட்டு வாசலில், குட்டி தேவதையை ஆவாகனம் செய்து வைத்திருந்த பனை மரம், பெருத்த ஓசையுடன் முறிந்து, விழுந்தது. இதனால், தன் மாந்திரீக சக்தியை இழந்த மாந்திரீகர், அங்கிருந்து ஓடி விட்டார்.
மாந்திரீகனின் கொடுமையால் தவித்திருந்த ஊர் மக்கள், வண்ணச்சரபம் சுவாமியை புகழ்ந்தனர். அவரோ, 'அனைத்தும் ஆறுமுகன் செயல்; என்னிடம் ஏதுமில்லை...' என்று பழனிமலையை நோக்கி, கைகளை குவித்தார்.
தாங்கள் கற்றுக் கொண்ட வித்தைகளின் மூலம், அடுத்தவர்களை வாழ வைக்க வேண்டுமே தவிர, அச்சப்படுத்தி, அழிக்க கூடாது. அவ்வாறு செய்தால், தெய்வம் அவர்களை வீழ்த்திவிடும் என்பதை விளக்கும் வரலாறு இது!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!
திருமணமான பெண்கள், மெட்டி அணிவது அவசியமா?
பெண்கள் அணிய வேண்டிய மங்கல பொருட்களுள் மெட்டியும் ஒன்று. திருமணமானதும், கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில், மெட்டி அணிய வேண்டும். காரணம், இந்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. நடக்கும் போது மெட்டி அழுத்தப்படுவதால், கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகிறது. மேலும், வெள்ளி உலோகமானது நரம்பு சக்தியை இழக்காமல் காக்கிறது. எனவே, வெள்ளி மெட்டியையே அணிய வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
10-மார்ச்-201715:13:52 IST Report Abuse
Idithangi வண்ணச்சரபம் சுவாமிகள் மடம் அல்லது கோவில் ஏதாவது உண்டா..? விஷயம் தெரிந்தவர்கள் பகிரலாம்.
Rate this:
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
05-மார்ச்-201717:10:30 IST Report Abuse
Ramesh Kumar குட்டி தேவதை அல்ல குட்டி சாத்தான்....தேவதைகள் நல்லதே செய்யும் ..சாத்தான் தான் கெடுதல் செய்யும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X