அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 27 வயதான பட்டதாரி இளைஞன். தனியார் நிறுவனம் ஒன்றில், நல்ல பதவியில் உள்ளேன். எதைப் பற்றியும் கவலை இல்லாமல் வாழ்ந்து வந்த நான், தற்போது மிகவும் கவலையோடு இருக்கிறேன் .
என் வீட்டிற்கு அருகில், என் நண்பன் வீடு உள்ளது. நானும், அவனும், 15 ஆண்டு கால நண்பர்கள். அவனுக்கு ஒரு அக்கா இருக்கிறாள். என்னை விட இரண்டு வயது பெரியவள். சிறு வயது முதலே, இருவரும் என்னுடன் நன்றாக பழகுவர்.
சமீபத்தில், நண்பனின் அக்காவுக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை மலேஷியாவில் பணிபுரிகிறார். என் வீட்டு திருமணம் போல, நண்பனுடன் சேர்ந்து, எல்லா வேலைகளையும் செய்தேன். திருமணத்திற்காக, மூன்று மாத விடுமுறையில் வந்தார், மாப்பிள்ளை. திருமணத்திற்கு முன்பே, ஒரு மாத விடுமுறை முடிந்து விட்டது. மீதம் உள்ள இரண்டு மாதங்கள், மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார்; பின், மலேஷியா சென்று விட்டார்.
திருமணத்திற்கு பின்பும், எப்போதும் போல, அவளிடம் பேசி வந்தேன். அவளும் என்னை, 'வாட, போடா...' என்று தான் கூப்பிடுவாள். சில நாட்கள் கழித்து, அவள் பேச்சில், சில மாற்றங்கள் கண்டேன்; பின், தொட்டு பேச ஆரம்பித்தாள். நானும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒருநாள், நண்பனை பார்க்க, அவன் வீட்டிற்கு சென்றேன். அப்போது, அவள் என்னிடம் எல்லை மீறினாள். முதலில் ஒதுங்கினேன்; பின் மயங்கினேன். அன்றைய தினம், நாங்கள் இணைந்தோம். பின், அதை நினைத்து வருத்தப்பட்டு, அவளிடம் இருந்து ஒதுங்கியதுடன், அவர்கள் வீட்டிற்கு செல்வதையும் தவிர்த்தேன்.
அதன்பின், அவளே ஒரு நாள் என்னை அழைத்த போது, 'என் நண்பனுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை...' என்று தெரிவித்து, விலகினேன். சில நாட்கள் கழித்து, அவள் என்னிடம், 'நீ என்னுடன் இருந்ததை, வீட்டில் எல்லாரிடமும் தெரியப்படுத்துவேன்...' என்று மிரட்டினாள். அதனால், அவளுடன் பேச ஆரம்பித்தேன். இதற்கிடையில், அவள் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், என்னிடம் தான் குழந்தை பெற்றுக் கொள்வேன் என்றும் கட்டாயப்படுத்தினாள். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து வெளியேறினேன்.
இப்போது, அவளது கணவர் அடுத்த மாதம் வருவதாகவும், அவரிடம் இதைப் பற்றி பேசி, என்னை திருமணம் செய்து கொள்வேன் என்றும் மிரட்டுகிறாள். இது வெளியே தெரிந்தால், என்ன நடக்கும் என்று பயமாக உள்ளது. அவளது பேச்சில், என்னை அடையும் வெறி உள்ளது. நான் அவளுக்கு பயந்து, என் மொபைல் நம்பரை கூட இரண்டு முறை மாற்றினேன்; ஆனால், அதையும் கண்டுபிடித்து, தொந்தரவு செய்கிறாள்.
எனக்கு நல்ல வழியை காட்டுங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு —
உன் நண்பனின் அக்காவுக்கு, அவளது கணவன் தாம்பத்ய சுவையை காட்டிவிட்டு மலேஷியா பறந்து விட்டான். அவளுடன் பழகும் போது, நீயும் அனிச்சையாக சில, பல சமிக்ஞைகள் கொடுத்திருப்பாய். சில வீடுகளில் கிளியும், பூனையும் நட்பாக பழகும்; பசி என்று வந்து விட்டால் கிளியை, பூனை அடித்து தின்ன தயங்காது. அப்படித்தான், உன் நண்பனின் அக்காவும்!
அவள் உன் மீது வைத்திருப்பது, உண்மையான காதல் அல்ல. முதலில், அவள், உன்னை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள்; பின், கணவன் மற்றும் உன்னுடனான தாம்பத்யத்தையும் ஒப்பிட்டு, நீ தான் சிறப்பானவன் என கண்டு கொண்டாள். அவளை விட, நீ இரண்டு வயது சிறியவன். ஆகவே, உன்னை மணந்து, தன் காலடியிலேயே வைத்துக் கொள்ளலாம் என, மனப்பால் குடிக்கிறாள்.
அவளின் கள்ள உறவு தெரிந்தால் அவளது கணவன் மற்றும் வீட்டினர் கடுமையாக கண்டிப்பர் என்ற பயம், அவளிடம் இல்லை. நீ பயந்தாங்கொள்ளி என தெரிந்து, உன்னை மிரட்டுகிறாள்.
தெரிந்தோ, தெரியாமலோ பழகிய நட்புக்கு துரோகம் செய்து விட்டாய். இனி, நண்பனின் வீட்டுக்கு செல்வதையோ, அவன் அக்காவை சந்திப்பதையோ முற்றிலும் நிறுத்து. வேறொரு ஊருக்கு பணிமாற்றம் பெற்று போ.
இருபத்தியேழு வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாலேயே, உன் மனம் எளிதாக கள்ள உறவில் விழுந்து விட்டது. பெற்றோரிடம் கூறி, பெண் பார்க்கச் சொல்லி, காலா காலத்தில் திருமணம் செய்து கொள்.
மலேஷியாவில் இருந்து கணவன் திரும்பியவுடன், உன்னை மறந்து, தன் கணவனுடன் குடும்பம் நடத்துவாள். தனக்கிருந்த கள்ள உறவை, கணவனிடம் ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டாள்.
கள்ள உறவு என்பது, படமெடுத்து ஆடும் ராஜநாகத்தின் நிழலில் இளைப்பாறுவதற்கு சமம். எந்த நொடியிலும் கொத்தப்பட்டு, மரணிக்கலாம். இதை ஒரு பாடமாக வைத்து, எதிர்காலத்தில் திருமணமான எந்த பெண்ணிடமும், தகாத உறவு வைத்துக் கொள்ளாதே!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
09-மார்ச்-201702:12:38 IST Report Abuse
LAX Ms.சகுந்தலா அவர்களின் அறிவுரையின் கடைசி வரிகள் திருத்தப்படவேண்டியவை..
Rate this:
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
07-மார்ச்-201712:03:06 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு இதற்கு தீர்வே அந்த பொண்ணு கைல தான் இருக்கு. அவ மட்டும் நான் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லைன்னு முடிவு செஞ்சிட்டா இது நல்ல படியா முடியாது. ஒரு வழி இருக்கு....கைல காலுல விழுகிறவனை ஆம்பளையாவே பொண்ணுங்க ஏத்துக்க மாட்டாங்க. அவளோட கைல காலுல விழுந்து தான் இந்த பையன் தப்பிக்க முயற்சி செய்யலாம். வேற வழியே இல்லை.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
05-மார்ச்-201715:15:27 IST Report Abuse
HSR ஊராம் பொண்டாட்டிய தொடுவது மஹா பாவம் ..புருஷனுக்கு துரோகம் செய்வதை பெண்கள் பிழைப்பாய் வைதித்திருந்தாலும் நீயல்லவோ பிரன் மனை நோக்காப்பேராண்மையை வெளிக்காட்டியிருக்க வேண்டும் ..
Rate this:
Being Justice - chennai ,இந்தியா
06-மார்ச்-201713:12:59 IST Report Abuse
Being Justice சகோ ஸ்ரீராம், சில பெண்கள் என்று நீங்கள் கூறி இருக்க வேண்டும். உடல் சுகம் அறிந்து விட்ட பெண், பிறகு பசிக்கும் போது, உரிய தீனி கிடைக்காததால், கண் முன் தெரியும் (முன்பே அறிந்த) தீனியை (தீதென்று அறிந்தும்) சுவைக்க துணிந்து விடுகிறாள். தவிக்க விட்ட கணவனும் இதற்கு பொறுப்பாவான். பொறுத்து இருக்கும் பல பெண்களுள், அடக்க இயலாத சிலர் பொறுத்துக்கொள்ள தவறி விடுகின்றனர். இந்த பெண் கணவன் வரும்வரை இவனை விடாமல் சுவைக்க நினைக்கிறாள். இவன் "போடி உன்னை எனக்கு பிடிக்கவில்லை" என்றும் "எனக்கு அப்புறம் வேற எவன தேடுவியோ" என்றும் பலித்து கூறி வெறுத்து ஒதுக்கினால், அதிகாரம் காட்டினாள், ஒதுங்கி விடுவாள். அல்லது நல்ல விதமாக இந்த தவறு அவசரத்தில் நிகழ்ந்து விட்டது, இது மூன்று குடும்பங்களுக்கும் பழி சொல்லை தேடி தரும். இந்த தவறு தொடர கூடாது என்றும் சொல்லி திருத்த பார்க்கலாம். மீண்டும் பணிவது இவனுக்கு நன்மையில் முடியாது. பதினைந்து வருடங்களாக பழகிய போது தவறு செய்யாதவர்கள் இப்போது செய்திருக்கிறார்கள் என்றால் இது சூழ்நிலை கருதி நடந்ததாக மன்னித்து விடலாம்....
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
06-மார்ச்-201719:20:29 IST Report Abuse
HSRசார் இவனையும் நம்பாதீர்கள் ..அனுபவிக்கும் முன் இவன் என்ன ஆல்வா கொடுத்தானோ ?இப்படி பயந்து சாகிறான் ..பாவம் இவன் நண்பனும் .அவள் கணவனும் ...நம்பிக்கை துரோகிகள் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X