வாழ்வுரிமை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

பாதுகாப்பில்லை
பெண்களுக்கு
கருவிலிருந்து
கல்லறை வரை..,

தாவணி போட்டபின் தான்
தாழிட்டனர் எங்களை...
நாங்களோ
நேற்று பிறந்த
எங்கள் மகளுக்காக
இன்றே தாழிடுகிறோம் கதவை...

கண் மறைத்த வயதில்
கட்டிலை தேடுகிறான்
காமக்கிழவன்...
கன்னியரை கைப்பிடிக்கும்
காளையோ
கன்னம் வைக்கிறான்
பிஞ்சுகள் மீது!

இவர்களுக்கு பதிலாக
பழி சுமக்கிறது
காலமும்
தொழிற்நுட்பமும்!

அன்னை என்றும்
அமுதே என்றும்
இறைவி என்றும் கூறுகிறான்...
தேவையில்லை எங்களுக்கு
உங்கள் நரம்பில்லா
'நா' தரும் பட்டம்...
தேவை எங்களுக்கு
ஆயுள் முழுதும்
பாதுகாக்கும் சட்டம் !

மங்கயராய் பிறக்க
மாதவம் செய்திட வேண்டுமாம்...
சொன்னவர்
இந்த காலத்தில்
பிறக்கவில்லை!

மகளிர் தினமாம்...
தயவுசெய்து கைகுலுக்கி
விடாதீர்கள்… ஆண்களே...
வானுயர பறந்தாலும்
உங்கள் முன்
நாங்கள் என்னவோ
பெட்டிபாம்பு தானே !

விட்டுவிடுங்கள் எங்களை..,
இனி, நாங்கள் யாரும்
பெண்ணாக பிறக்க மாட்டோம்...
பிறப்பு தரவும் மாட்டோம் !

உங்களுக்கு
அடிமையாய் தானே வாழ்கிறோம்...
குறைந்தபட்ச
வாழ்வுரிமையாவது தாருங்கள்...
பிழைத்துவிட்டு போகிறோம்!

வேணிமகள், சென்னை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
10-மார்ச்-201704:27:34 IST Report Abuse
Manian இயற்கை செய்யும் வம்பு அடிப்பதேற்க தராத கம்பு, காமம் இல்லையேல் உடலுக்கு வம்பு, ஆனா பெத்தவங்க செய்யற தப்பு, எல்லா ஊர்லேயும் இதுவே என்று சொல்லு சொப்பு. அவசரப் பட்டு கட்பிக்காதே தாலி, அதுவே ஒனக்கு கேலி, வேலி தெரியாம படர்ந்தா குத்தத்தானே பாக்கும்.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
05-மார்ச்-201717:36:14 IST Report Abuse
கதிரழகன், SSLC ரொம்ப கோவமா பேசுறீய. ஒங்க கண்ணுல நல்லவன் ஒருத்தன் கூட படலையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X