திடீர் பயணத்திற்கு நீங்கள் தயாரா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

தேவகோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடையில் ஒருவர், நண்பருடன் சாவகாசமாக அமர்ந்து, தமிழக அரசியல் பற்றி பேசியபடி, டீ அருந்திக் கொண்டிருப்பார்.
ராமேஸ்வரம் போகும் பேருந்து காலியாக வரும்; அதைப் பார்த்ததும், 'சரி சரி... என் தங்கை ஞாபகம் வந்துடுச்சு. மாசமா இருக்கு; போய் பாத்துட்டு வந்துடுறேன்...' என்று, பேருந்தை நோக்கி ஓடுவார்.
'என்னய்யா... திடீர்ன்னு ராமேஸ்வரம்ன்னு இப்படி புறப்படுறே... பொட்டி, படுக்கை...' என்று கேட்டால், 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... போய் பாத்துக்குறேன். தங்கச்சி வீடு தானே; அப்படியே கோவில் தரிசனமும் ஆச்சு. ராத்திரியே வந்துடுவேன்; என் வீட்ல போய் சொல்லிட்டு, உன் வீட்டுக்குப் போ...'என்பார்.
இது, சித்தரிக்கப்பட்ட கற்பனைக் காட்சியல்ல; என் இளவயது காலத்தில், நானே கண்கூடாக பார்த்தது.
அவர் செய்தது சரி என்று வாதிட மாட்டேன். திடீர் பயணங்களுக்கு, நாம் தயாராக இருக்க வேண்டும் என்று, வக்காலத்து வாங்கும் கட்சிக்காரன் நான்.
இந்த மனநிலை இல்லாததால், பல நல்ல விசேஷங்களிலும், துன்பகரமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல், உறவுகளை பலவீனப்படுத்தி கொண்டவர்கள் பலர்.
அது மட்டுமல்ல, 'நாளைக்கு கோயமுத்தூர்ல இன்டர்வியூவாம்... எவன் போவான்... இன்னைக்கு கார்டை அனுப்புறானுங்க தடிப்பசங்க...' என்று, மனதளவில் மறுத்து, பயண சோம்பலால் நல்வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர்.
'போனவனுக்கெல்லாம் இந்தா வேலைன்னு அள்ளிக் குடுத்தானுங்க; நான் சேர்ந்துட்டேன். நீ ஏன்டா கோவைக்கு வரல... எனக்கும் தான், திடீர்ன்னு கார்டு அனுப்பிச்சாங்க...' என, நண்பன் சொல்லும் போது தான், முன்னவர் தலையில் கை வைத்துக் கொள்வார்.
ஒருமுறை, நான் சுவிட்சர்லாந்து போன போது, என் பெட்டி வந்து சேரவில்லை. உடனே, எனக்கும், சக பயணிகளுக்கும் பை ஒன்றை கொடுத்தனர், பிரிட்டிஷ் ஏர்வேஸ்காரர்கள்.
மிக அழகான பை; சுருட்டப்பட்ட சிறு படுக்கை போல இருந்தது. பிரித்தால், பேஸ்ட், பிரஷ், சீப்பு, சோப்பு, கண்ணாடி, முகச்சவர ரேசர், ஒரு அழகான துண்டு, நகவெட்டி, 20 பவுண்டு பணம் ஆகியவற்றுடன், இன்னும் சில பொருட்கள் இருந்தன.
அதை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். எதற்கு தெரியுமா... திடீர் பயணம் என்றதும், கையும் ஓடாமல், காலும் ஓடாமல், தடுமாறி நின்று விடக்கூடாதே என்பதற்காக!
பயணம் என்றதும் ஒரு சட்டை, ஒரு பேன்டை இந்த பையில் திணித்து, எந்த நிமிடமும் புறப்பட்டு விடுவேன் என்பது தான் செய்தி.
திடீர் பயணங்களுக்கு, நாம் ஏன் முன் வருவது இல்லை தெரியுமா? பயண ஏற்பாடுகள் பற்றிய மலைப்பு தான், முதல் காரணம்.
அடுத்தது, காத்திருக்கும் கடமைகள். இதை விட, பயணம் முக்கியம் என்று சொல்ல மாட்டேன். முதலில் கடமைகளை முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவற்றை பிறரிடம் ஒப்படைக்க முடியுமா அல்லது அவற்றை தள்ளிப் போட முடியுமா இல்ல தவிர்க்கவே முடியாதா என, மதிப்பிட வேண்டும். 'ரூட்' கிளியர் என்றால், அடுத்தது பணம். எவ்வளவு சிறிய பட்ஜெட் குடும்பமாக இருந்தாலும், திடீர் செலவுகளுக்கென, ஒரு தொகையை ஒதுக்கி வைப்பது அவசியம். தலை போகிற அவசரம் என்றாலொழிய, மற்ற நேரங்களில், இப்பணத்தை மறந்து விட வேண்டும்.
அடுத்து, நான் சொன்ன பயண தேவைகள். எப்போதும் ஒரு, 'பிரிட்டிஷ் ஏர்வேஸ் கிட்' பாணியில், ஒரு பயண பை தயாராக இருக்க வேண்டும்.
பயணம் வந்தால் பார்த்துக்கலாம் என்று இதிலிருந்து ரேசரை உருவுவது; சோப்பை எடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆக, பயணப் பை தயார். இறுதியாக வருவது நம் மனநிலை.
'இவர்கள் கடைசி நாளில் அழைப்பு அனுப்புவாராம்; நாம நாய்க்குட்டி மாதிரி ஓடணுமாம்... போங்கடா சரிதான்...' என்று எண்ணுவதை விடுத்து, 'பாவம்... நிகழ்ச்சி நடத்துவோருக்கு என்ன நெருக்கடியோ...' என்று இரக்கப்படுவதோடு, 'கடைசி நிமிட அழைப்பிற்கு கூட வந்துட்டீங்களே! நீங்க கிரேட்...' என்று உரியவர்களிடம் பாராட்டு பெற, முயற்சிக்க வேண்டும்.
யார் மூலமோ தெரிய வருகிற மரணத்திற்கு, நான் ஏன் போக வேண்டும் என்று வாதிடாமல், சோகத்தின் தாக்கத்தில் உள்ளவர்களின் மன பாதிப்பை புரிந்து, 'நாமாக செல்லாத போதும், கேள்விப்பட்டதை வைத்தே வந்து கலந்துகிட்டார்; இவர் பெருந்தன்மை யாருக்கு வரும்...' என்று, பேசும்படி இருக்க வேண்டும்.
எப்போதும், யாரோ ஒருவர் நமக்கு பின் இருந்து, 'ஒன்... டூ... த்ரீ... கோ...' என்று சொல்ல காத்திருக்கும் ஓட்டப்பந்தய வீரராக நம்மை எண்ணி கொண்டால், நாமும் பயண வீரர் தான்!

லேனா தமிழ்வாணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivalingam -  ( Posted via: Dinamalar Android App )
05-மார்ச்-201713:20:27 IST Report Abuse
Sivalingam Its true, lost some good job interview due to time constraints
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X