நம்ம ஊர் ஸ்பெஷல் - சென்னை அத்தோ.. பேஜோ... மொய்ஞா...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

சமீபகாலமாக, சென்னை பாரிமுனையில், பர்மா உணவுகள் பிரபலம். இங்குள்ள செகண்ட் பீச் லைன் என அழைக்கப்படும் தெரு, அத்தோ கடைகளால் பிசியாக இருக்கிறது. மாலை, 4:00 மணிக்கு துவங்கும் வியாபாரம், இரவு, 10:00 மணி வரை, களை கட்டுகிறது.
அத்தோ, மொய்ஞா, தவுசா மற்றும் பேஜோ என, நான்கு வகைகள் மட்டுமே பர்மா உணவு பட்டியலில் உள்ளன. அப்பளம் போல இருக்கும் பேஜோவை நொறுக்கி, வாழைத்தண்டு சூப் மற்றும் முட்டை சேர்த்து, கலக்கி தருகின்றனர்; மற்றவற்றில் சூப் சேர்த்து சாப்பிடலாம்.
நமக்கு, இட்லி, தோசை மாதிரி, பர்மாவில் பிரதான காலை உணவு, அத்தோ. இது, சென்னைக்கு அறிமுகமாகி, 50 ஆண்டுகள் ஆகின்றன. மியான்மரில் வசித்த, பாத்திமா பீவி என்ற தமிழ் பெண் அகதியாக சென்னை வந்தார்.வட சென்னையின், சர்மா நகரில், சாலையோரத்தில், சிறிய கடை ஆரம்பித்தார். அதன்பின், தற்போது, பல கடைகள் பெருகியுள்ளன.
அரிசி மற்றும் பொட்டுக் கடலை மாவு சேர்த்து, சப்பாத்தி போல் பிசைந்து, அதை அச்சில் இட்டு நூடுல்ஸ் போன்று பிழிகின்றனர். அதனுடன், பூண்டு, வெங்காயம், கொத்துமல்லி, புளி, எலுமிச்சை, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறினால், மொய்ஞா தயார். இதனுடன், முட்டைக்கோஸ் சேர்த்தால் அத்தோ. இதில் சேர்க்கும் அனைத்தும், வேக வைக்காத பச்சைக் காய்கறிகள் என்பதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது; எளிதில் ஜீரணம் ஆகும்.
கடந்த, 35 ஆண்டுகளாக அத்தோ கடை நடத்தி வரும் கஜேந்திரன், 'இதை சாப்பிட்டவர்கள் கூறக் கேட்டு, பலரும் வந்து சாப்பிட, இப்படியே, இந்த உணவு பிரபலமாகியது. அசைவ விரும்பிகளுக்காக முட்டை மசாலா மற்றும் சிக்கன் வகைகளை சேர்த்து விற்கிறோம். 25 பைசாவில் துவங்கி, இன்று, 50 ரூபாய்க்கு விற்கிறோம். திரை பிரபலங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் என பலரும், அத்தோ உணவை தேடி வந்து சாப்பிடுகின்றனர்...' என்கிறார்.
சென்னை, செங்குன்றம், வியாசர்பாடி, பாரதியார் நகர், எண்ணுார் மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளிலிருந்து, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் என, தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பிரபலமாகி வருகிறது, அத்தோ!
மு. ஆதவன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Babu - Chennai,இந்தியா
08-மார்ச்-201713:23:38 IST Report Abuse
Hari Babu உண்மையான பர்மாவில் தான் அரிசி மற்றும் பொட்டுக் கடலை மாவு சேர்த்து, சப்பாத்தி போல் பிசைந்து, அதை அச்சில் இட்டு நூடுல்ஸ் போன்று பிழிகின்றனர்'சென்னையில் ' எல்லாமே மைதா மாவு பிண்டங்கள் ....
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
05-மார்ச்-201701:45:59 IST Report Abuse
கதிரழகன், SSLC சோத்து மூட்டை சார் எளுதி இருந்தாரு. கையால பிசைஞ்சு கொடுப்பாகநைட்டு அவுங்க நைனா அவருக்கு வாங்கி கொடுக்க மாட்டாராம். பச்சைக் காய். கையால பிசைஞ்சு. சுத்தம் ரொம்ப முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X