கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜன
2011
00:00

கேள்வி: கூகுள் தளங்களில் தேடுகையில், சில வேளைகளில் நாம் ஏற்கனவே பார்த்த தளத்தைத் தேடுகிறோம். ஆனால் அதே தகவல் இருக்கும் பல தளங்கள் கொண்ட பட்டியல் தருவதால், நாம் தேடும் இணைய தளத்தைப் பெற நேரம் ஆகிறது. ஏற்கனவே பார்த்ததனால், அதனை கூகுள் மெமரியில் வைத்துத் தரும் வசதி உள்ளதா? -ஜி. கோயில் பிச்சை, தேவாரம்
பதில்: கூகுள் நிறுவனத்திற்கு நல்ல பயனுள்ள வேலை தந்திருக்கிறீர்கள். உங்கள் விருப்பத்தை நேரடியாக நிறைவேற்றும் வசதியை கூகுள் இன்னும் தரவில்லை. ஆனால் கூகுள் தளம் மூலம் சென்ற வாரம் சில தகவல்களுக்காக தேடலை மேற்கொண்ட போது, கூகுள் சைட் பிரிவியூ என்ற ஒரு வசதி இருப்பது தென்பட்டது. தேடல் முடிவுகளை அடுத்து, ஒரு சிறிய லென்ஸ் போல ஐகான் ஒன்று இருந்தது. இதன் பெயர் சர்ச் பிரிவியூ அல்லது சைட் பிரிவியூ. இதன் மூலம் நமக்குக் காட்டப்படும் தளத்தின் முன்னோட்டக் காட்சியினை நாம் பார்க்க முடிகிறது. இதனால், நாம் அந்த தள விளக்கப் பகுதியில் கிளிக் செய்து, தளம் டவுண்லோட் ஆகி, பின்னர் அதனைப் பார்த்து, நாம் தேடுவது அதுதானா என்று அறிய நேரம், இன்டர்நெட் பேண்ட்வித் போன்றவற்றை வீணாக்காமல், தளம் என்னவென்று அறிய முடிகிறது. ஏற்கனவே தளத்தைப் பார்த்து ரசித்துப் பின்னர் அது எங்கே என்று தெரியாமல் தேடுபவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும். முன்னோட்டக் காட்சியைப் பார்த்தவுடன், இது தான் தேடப்படும் தளமா என்று முடிவு செய்து திறந்து பார்க்கலாம். அருகில் உள்ள படத்தில் தினமலர் குறித்து தேடிப் பார்த்த பிரிவியூ காட்சியைக் காணலாம்.

கேள்வி: நோட்பேடில் உள்ள டெக்ஸ்ட் பைலை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில், அச்செடுக்க வசதியாக, அதன் மார்ஜின் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியுமா? ஹெடர் மற்றும் புட்டர் செட் செய்திட வழி உண்டா? -கே. அய்யப்பராஜ், சிவகாசி.
பதில்: இந்த வசதி உள்ளது. மார்ஜின் செட் செய்து, உங்கள் ஹெடர் மற்றும் புட்டர்களை மாற்றலாம். நோட்பேடில் பைல் திறந்து, பின்னர் ஊடிடூஞு/கச்ஞ்ஞு குஞுtதணீ செல்லவும். இங்கு மார்ஜின் போன்றவற்றை நீங்கள் விரும்பும் வகையில் செட் செய்து கொள்ளலாம். இதில் ஹெடர் மற்றும் புட்டர் பாக்ஸ்களில் உள்ள “&f” “Page &p” பார்த்து குழப்பம் அடைய வேண்டாம். – இது பைல் பெயரை அச்சிடுமாறு கூறுகிறது. பைலுக்குப் பெயர் இல்லை என்றால் அப்படியே விட்டுவிடும். d என்று கொடுத்தால் தேதி அச்சிடப்படும். t என்பது நேரத்தை, நம் கம்ப்யூட்டர் கடிகாரத்திலிருந்து பெற்று அச்சிடும். p பக்க எண்ணை அச்சிடும். ஹெடர் மற்றும் புட்டரில் உள்ளவற்றை இடது, வலது மற்றும் நடு என அமைக்க வேண்டுமா? டூ, ணூ, ஞி எனத் தரவும். ஹெடர் மற்றும் புட்டரில் உங்கள் டெக்ஸ்ட்டையும் தரலாம். என்ன! இந்த சின்ன நோட்பேடில் இவ்வளவா என்று பார்க்கிறீர்களா!

கேள்வி: இன்டர்நெட் சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் பலூன் டிப் என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பின் அதனையே பாப் அப் டெஸ்கிரிப்ஷன் என்று போட்டிருந்தது. ஏன் இரண்டு பெயர்? என்ன வித்தியாசம்? -கே. மாலதி, கோயம்புத்தூர்.
பதில்: நீங்கள் குழப்பம் அடைந்த மாதிரி எனக்கும் அனுபவம் ஏற்பட்டது? பலூன் டிப், பாப் அப் டிப், டெஸ்கிரிப்ஷன் டிப், டூல் டிப் எனப் பல சொற்றொடர்களை ஒரே மாதிரியான கம்ப்யூட்டர் வசதிக்கு இடப்படுகிறது. இவை அனைத்தையும் ஸ்கிரீன் டிப் என அழைக்கலாம். ஐகான் ஒன்றில், மவுஸ் கர்சரைக் கொண்டு செல்கையில் இந்த ஸ்கிரீன் டிப் கிடைக்கிறது. அது அந்த ஐகான் குறித்தோ அல்லது ஐகான் காட்டும் புரோகிராம் குறித்தோ இருக்கலாம். மிக விளக்கமாகவோ அல்லது சிறிய அளவில் தனி குறிப்பாகவோ இருக்கலாம்.
நோட்டிபிகேஷன் ஏரியா வில் உள்ள ஐகான்களில் கர்சர் செல்கையில் தரப் படும் டிப்ஸ்களுக்கு பலூன் அல்லது பப்பிள் டிப்ஸ் என்று சொல்கின்றனர். இதில் இரண்டு வகை உள்ளன. ஒரு வகை, அந்த ஐகான் காட்டும் புரோகிராமில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று காட்டும். நெட்வொர்க் செயல்பாடு, வால்யூம் நிலை போன்றவை இதில் அடங்கும். இன்னொரு வகை என்ன புரோகிராமினை அந்த ஐகான் காட்டுகிறது என்று அறிவிக்கும். டெஸ்கிரிப்ஷன் டிப்ஸ் என்பது இந்த ஸ்கிரீன் டிப்கள் அதிகமான தகவலைத் தரும்போது பெறும் பெயர்களாகும். வேர்ட் டாகுமெண்ட் மற்றும் பாடல் பைல்களைக் காட்டுகையில் இந்த டிப் கிடைக்கும். ஸ்டார்ட் மெனுவில் வலது மூலையில் கிடைக்கும் டிப்களை, டூல் டிப் என அழைக்கின்றனர். அவை உங்கள் மவுஸ் கர்சர் எந்த போல்டர் அருகே செல்கின்றன என்று காட்டும்.

கேள்வி: இன்டர்நெட் தளங்களைப் பார்க்கையில் பலவிதமான பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. பொதுவாக இல்லாமல் எர்ரர் கோட் என்றெல்லாம் வருகிறது. இதற்கான தீர்வுகள் எங்கே கிடைக்கும்? -சா. இளவழகன், பாண்டிச்சேரி.
பதில்: இது போன்ற புதுவிதமான எர்ரர் கோட் வருகையில், தளத்தினை மூடி, இன்டர்நெட் இணைப்பினை மீண்டும் உயிர்ப்பித்து, அதே தளத்தைப் பெற்று, மீண்டும் எர்ரர் வருகிறதா எனப் பார்க்கவும். பொதுவாக, இந்த தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற தளங்கள் அல்லது புரோகிராம்களுடன் ஏற்படும் குறியீடு மோதல்களால் ஏற்படுபவை. தீர்வுகள் இப்போது இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. இந்த பிழைச் செய்திகளை அப்படியே காப்பி செய்து, பின்னர் தேடல் இஞ்சின் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட் செய்து என்டர் தட்டவும். உடனே இதே போன்ற பிழைச் செய்தி குறித்து ஏற்கனவே தகவல் மற்றும் விளக்கங்கள் குறித்து எழுதப்பட்ட தளங்கள் கிடைக்கும். அதில் கூறப்பட்டவை பார்த்து மேற்கொண்டு செயல்படலாம்.

கேள்வி: எனக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து என் நண்பர் எழுதுகையில் ‘gpedit.msc’ என்ற பைலைத் திறந்து பார்த்தால், தீர்வு இருக்கலாம் என்று எழுதி உள்ளார். இந்த பைலைத் திறந்து பார்க்கலாமா? -தி. கண்ணப்பன், காரைக்கால்.
பதில்: உங்கள் சிக்கல் என்ன என்று எழுதவில்லையே! உங்கள் சந்தேகம் ‘gpedit.msc’ ’ பைலத் திறந்து பார்க்கலாமா? என்பது தான், இல்லையா? தாராளமாக. ஸ்டார்ட் அழுத்தி வரும் மெனுவில் ரன் கட்டத்தில் இதனை டைப் செய்து என்டர் அழுத்த இந்த பைல் கிடைக்கும். இதில் விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் பல பிரிவுகள் கிடைக்கும். இதில் சிஸ்டம் இயங்கும் விதத்தினை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் பைல்களை அழிக்கையில், அழிக்கப்படும் பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என விரும்பினால், இந்த பைலைத் திறந்து, செட்டிங் மாற்றலாம். ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதாவது எக்குத் தப்பாக எதனையாவது மாற்றிவிட்டால், கம்ப்யூட்டர் இயங்குவது சிரமப்படலாம். எனவே உங்கள் உள் எச்சரிக்கை சரியானதுதான். கவனத்துடன் பைலைத் திறந்து பாருங்கள்.

கேள்வி: முன்பு ஒருமுறை சிஸ்டம் பற்றி இன்பர்மேஷன் பெற சிஸ்டம் இன்போ (Systeminfo என டைப் செய்து பெறலாம் என்று எழுதியிருந்தீர்கள். நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இவற்றை எப்படி ஸ்டோர் செய்வது? -நி. முத்துகிருஷ்ணன், விழுப்புரம்.
பதில்: நல்ல கேள்வி. அப்போதே இதனை எப்படி சேவ் செய்து வைப்பது எனவும் சொல்லி இருக்கலாம். எழுதினேன் என்று நினைவு. பரவாயில்லை. இதோ அதற்கான வழி. கமாண்ட் ப்ராம்ப்டில்‘systeminfo> info.txt’ என டைப் செய்திடுங்கள். info.txt என்ற பெயரில் அனைத்து தகவல்களும் சேவ் செய்யப்படும். பொறுமையாக அனைத்து தகவல்களையும் படித்துத் தெரிந்து செயல்படலாம்.

கேள்வி: பலர் பிரவுசரை மாற்ற அறிவுரை கூறியும், இன்னும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ஐத்தான் பயன்படுத்துகிறேன். பழகிவிட்டதால், இந்த பிரச்னை. இதில் ஏற்படும் தற்காலிக பைல்களை, பிரவுசரே அழிக்கும் வகையில் செட் செய்திட முடியுமா?
-டி. சிவக்குமார், மதுரை.
பதில்: ஏன் குற்ற உணர்ச்சியுடன் கடிதம் எழுதி உள்ளீர்கள். பிரவுசரை மாற்றி, புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்தலாம். இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன். தற்காலிகப் பைல்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 அழிக்கும். அதற்கான செட்டிங்ஸ் இதோ. பிரவுசரைத் திறக்கவும். பின்னர், Tools / Internet Options... and Advanced எனச் செல்லவும். இதில் கீழாக செக்யூரிட்டி ஏரியா (Security area) என்ற பகுதிக்குச் செல்லவும். Empty Temporary Internet Files folder when browser is closed என்ற இடத்தில் டிக் அடையாளதைதை ஏற்படுத்தவும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் மட்டும், இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்துகையில், இணைப்பு உள்ளது என்பதைக் காட்டும் ஐகான் காட்டப்படவில்லை. நெட்வொர்க் கார்டில் எல்.இ.டி. விளக்கும் தெரியவில்லை. இது எதனால்? வைரஸ் புகுந்ததன் விளைவா?
-மா. நிர்மலா ராஜன், தாம்பரம்.
பதில்: டெஸ்க்டாப்பில் My Network Places மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்கள் லேன் அல்லது டயல் அப் அல்லது பிராட்பேண்ட் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு Show icon in notification area when connected என்ற பெட்டியில் கர்சர் கொண்டு கிளிக் செய்திடவும். இப்போது டாஸ்க் பாரின் வலது பக்கம், இன்டர்நெட் இணைப்பிற்கான ஐகான் சிறிய விளக்குடன் காட்டப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek - chennai,இந்தியா
21-ஜன-201114:49:32 IST Report Abuse
vivek you got a good job
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X