நீங்களும் சேமிக்கலாம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2017
00:00

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் படிப்புச் செலவு என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. எல்.கே.ஜி., அட்மிஷனாகட்டும், ஒரு மிகப்பெரிய தொகையை வைத்தால்தான் முடியும் என்ற நிலையில் உள்ளோம்.
குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்கள் என்னென்ன உள்ளது. அதன் அவசியம் என்ன என்பது பற்றி சொல்கிறார் பண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீகாந்த் மீனாட்சி. இவர், வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர், இச்சங்கத்தின் வெளியீடான தென்றல் முல்லை இதழின் ஆசிரியரும் ஆவார்.
அரசு சிறு சேமிப்பு நிலையங்கள், அரசு வங்கிகள், அஞ்சலகங்கள், சேமிப்புஆவணங்கள் ஆகியவற்றில் பணத்தை சேமிக்கலாம். இதுமட்டுமில்லாமல், சேமிப்பு பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு, வைப்பு நிதியாக டிபாசிட் செய்யலாம்.
மியூச்சுவல் பண்ட், எனப்படும் பரஸ்பர நிதி திட்டத்தின் வழியாகவும் சேமிக்கலாம். இவ்வாறு செய்தால், நாம் சேமிக்கும் பணம் நமக்கு வட்டியுடன் கிடைக்கிறது. நோய், விபத்து, திருமணம், உயர் கல்வி போன்ற தேவைக்கும் பயன்படுகிறது.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என்று ஏதாவது சேமிப்புத்திட்டங்கள் இருக்கிறதா?
நிறைய நல்ல திட்டங்கள் இருக்கின்றன. எந்த திட்டத்தில் சேருவது என்று தேர்வு செய்வதற்கு முன், கால அளவுகளை முதலில் முடிவு செய்ய வேண்டும். 5 - 10 ஆண்டுகளுக்கு பின், எவ்வளவு தேவைப்படும் என்பதை முதலில் கணிக்க வேண்டும்.
உதாரணம், தற்போது ஒரு குழந்தைக்கு, ஐந்து வயதாகிறது என்றால், உயர்கல்வி செல்ல, 10 - 15 லட்சம் தேவையென்றால், தற்போது, மாதத்திற்கு, 12 ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும். எனவே, இப்போது சேமிக்க வழியில்லை. அடுத்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கலாம்னு தள்ளிப் போடுறாங்க.
அதே போல், 12 - 15 வயது குழந்தை என்றால், 5 ஆண்டுகளில், கல்லூரிக்கு போய்டுவாங்க அப்போ, 25 லட்சம் உயர் கல்விக்கு தேவைப்படும். இது ஒரு கணிப்பில் சொல்லக்கூடிய தொகை தான். இதுவே, 20 ஆண்டுகளில் பல மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும், கல்விக்கான செலவு, 10 சதவீதம் அதிகமாகிறதே தவிர, குறைவதில்லை என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி சிறப்பான திட்டங்களை தேர்வு செய்வது?
சிறப்பான திட்டங்களை எப்படி தேர்வு செய்வது என்பதை தான் எங்கள் நிறுவனம் அறிவுறுத்துகிறது. எதிர்காலத்துக்காக எவ்வளவு சேமிக்கணும், எப்படி சேமிக்கணும், எங்கு சேமிக்கணும் என்பதை எங்கள் நிறுவனத்திற்கு வரும் கஸ்டமர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். அதன் பின், முடிவு எடுப்பது அவர்கள் கையில் உள்ளது.

குழந்தைகளின் பெயரில் பரஸ்பர நிதியில் பணத்தை முதலீடு செய்யலாமா?
நிச்சயமாக செய்யலாம். பங்குச் சந்தை, கடன் சார்ந்த நிதிகளிலும் முதலீடு செய்யலாம். இதில் சிக்கல் என்னவென்றால், பங்கு சந்தையில் தொகை குறையவும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால், தற்போது உடனே நாம் பணத்தை எடுக்கப்போவதில்லை என்றால் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. ஐந்து வருடங்களுக்கு குறையாமல் முதலீடு செய்கிறோம் என்றால், கண்டிப்பாக பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளே சிறந்தவை.

ஆண் குழந்தை, பெண் குழந்தை என தனித்தனி பிரிவுகளில் பரஸ்பரநிதி திட்டங்கள் இருக்கிறதா?
இதில் பாலின பாகுபாடே கிடையாது. ஆண் - பெண் குழந்தை இருவருக்குமே கல்வி என்பது அவசியம். ஆனால், பெண் குழந்தைக்கு திருமணத்துக்கும் சேர்த்து சேமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
வங்கிகளிலேயே கூட பல திட்டங்கள் உள்ளன. எச்.டி.எப்.சி., வங்கியில், 'சில்ரன் இன்வெஸ்மென்ட் திட்டம்' உள்ளது. ஆக்ஸிஸ் வங்கியில், 'சில்ரன் கிப்ட் ப்ளான்' என்ற திட்டம் உள்ளது. இவை அனைத்துமே சிறப்பான திட்டங்கள்; பலமான திட்டங்களும்.

பரஸ்பர நிதி திட்டத்தில் சேர, ஆரம்ப தொகை எவ்வளவு?
உயர்தர மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்ல, அடித்தட்டு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் உள்ளன. 500 ரூபாயிலிருந்து கூட ஆரம்பிக்கலாம்.
உதாரணமாக, ஒருவர் சிலிண்டர் போடும் கூலித் தொழிலாளி என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு மாத வருமானம் ஒரு தொகை வரும். இடையில் மக்கள் அவருக்கு, 'டிப்ஸ்'ஆக, 10 அல்லது 20 ரூபாய் கொடுப்பர்; இது வாடிக்கை. இப்பணத்தில், மாதம், 500 ரூபாயை சேமித்து, தன் குழந்தைகளின் பேரில் செலுத்தலாம்.

இதுபோன்ற திட்டங்களில் சேர, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு வயது வரம்பு உள்ளதா?
நிச்சயம் கிடையாது. குழந்தையின் பெயரில் சேமிப்பது என்றால், பெற்றோர் பராமரிப்பாளராக இருக்கலாம்.

பரஸ்பர நிதியில், சேமிப்பு செய்தால் வருமான வரி விலக்கு உண்டா?
நிச்சயமாக வருமான வரி விலக்கு கிடைக்கும் திட்டங்களும் உள்ளன. அவற்றை நிதி ஆலோசகர் பரிந்துரைப்பார்.

பரஸ்பர நிதி மற்றும் குறிப்பிட்ட கால வைப்பு தொகை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் சிறப்புகள் என்னென்ன?
பரஸ்பரநிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வது. இதில் வரும் வட்டி விகிதம் அதிகம். ஆனால், குறிப்பிட்ட, கால வைப்பு தொகை அதாவது, 'பிக்ஸட் டிபாசிட்' என்பது நீங்கள் சேமிக்கும் தொகைக்கு வட்டி விகிதம் குறைவாக கிடைக்கும்; மேலும், தொகை உயர வாய்ப்பு இல்லை.

பிரதமர் உருவாக்கிய, 'சுகன்யா சம்ரீதி' திட்டம் பற்றி விளக்குங்களேன்?
பிரதமர் நரேந்திர மோடியால், ஜனவரி 22, 2015ல் துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில், அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக, 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கை துவங்கலாம்.
ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக, 1000 ரூபாய் இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம், 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம், 1,000 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை வைப்புத் தொகையாக செலுத்தலாம். ஆண்டுக்கு, 9.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.
இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை, 21ம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும், பெண்ணுக்கு, 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில், 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பரஸ்பர நிதிகளில் தொகையை கட்டும் போது ஆபத்துகள் இருக்கிறதா?
நிச்சயமாக உண்டு. ஆனால், வெவ்வெறு திட்டங்களில் வெவ்வேறு அளவில் இந்த ரிஸ்க் இருப்பதால், நமக்கு ஏற்ற வகையில் இதை வடிவமைத்துக் கொள்ள முடியும். மேலும், நாம் நீண்ட காலத்திற்கு குறைந்தது ஐந்து வருடத்திற்கும் மேல் முதலீடு செய்கிறோமென்றால் இத்தகைய ஆபத்துகள் குறித்து கவலை அடைய தேவையில்லை.

குறிப்பாக உங்கள் நிறுவனத்தில் தொகையை டிபாசிட் செய்வதால் பயன்கள் என்ன?
எங்கள் நிறுவனம் முதலில் சேமிப்பவர்களுக்கான ஆலோசனை தருகிறது. அதாவது தங்களின் குழந்தைக்கு, ஐந்து வயதாகிறது என்றால், 18 வயதாகும் போது எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை கணித்து அறிவுரை சொல்வோம். அவர்களின் வருமானம் என்ன... சேமிப்புத் திறன் என்ன என்பது முதல் ஆராய்ந்து, முதலீடுகளை தகுந்த பங்குச்சந்தையில் முதலீடு செய்வோம்.
நீங்கள் செலுத்தும் பணம் எந்த பங்குச் சந்தையில் உள்ளது, அதன் நிலவரம் என்ன என்பது முதல், நீங்களே ஆன் லைனில் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு வெளிப்படையானது எங்கள் நிறுவனம்.

பண்ட்ஸ் இந்தியாவில் பணத்தை முதலீடு செய்வது எந்த அளவுக்கு பாதுகாப்பானது?
வீட்டு பெட்டகத்தில் வைப்பது போன்று பாதுகாப்பானது. காரணம், மேற்சொன்னபடி வெளிப்படை தன்மை உள்ளதால் ஏமாற்றுவதற்கோ, ஏமாறுவதற்கோ வாய்ப்பேயில்லை.

பண்ட்ஸ் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கட்டணத் தொகை வசூலிப்பீர்களா?
நிச்சயமாக கிடையாது. காரணம், மக்கள் முதலீடு செய்யும் பணத்தை நாங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறோம். எனவே, அவர்கள் எங்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தை சேவை கட்டணமாக அளித்துவிடுகின்றனர். எனவே, மக்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை.
இதை வீடியோவில் பார்க்க, https://www.youtube.com/watch?v=6CW0pIwe2-w என டைப் செய்து வீடியோவை பாருங்கள். அப்படியே உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்!
- தேவ்ஆனந்த்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X