ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (52)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2017
00:00

ஹலோ மாணவாஸ்... ஹவ் ஆர் யு?
'வர்ஷி மிஸ்... Grammer படிச்சி படிச்சி, 'டயர்ட்' ஆகிட்டோம். குட்டி குட்டி வார்த்தைகளில் சுலபமான ஆங்கிலம் பேச கற்றுத்தாங்க ப்ளீஸ்... என்று கேட்டிருந் தீர்கள். என் 'ஸ்டூடன்ட்ஸ்'சின் விருப்பம் தானே, என் விருப்பம். உங்கள் விருப்பப்படியே சொல்லித் தர நான் ரெடி. அதை கற்றுகொண்டு பேச நீங்க ரெடியா?
1. What is the matter? - என்ன விஷயம்?
2. Shall we begin? - ஆரம்பிக்கலாமா?
3. Do you know one thing? - உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?
4. What is the quarrel about? - என்ன சண்டை?
5. What brings you hear? - எதற்காக வந்தீர்கள்?
6. Have you any business with me? - உங்களுக்கு என்னிடம் ஏதேனும் வேலை இருக்கிறதா?
7. What is your opinion? - உங்கள் கருத்து என்ன?
8. How are the children? - குழந்தைகள் நலமா?
9. Why do you trouble yourself? - உங்களுக்கு எதற்கு சிரமம்?
10. Mom! where have you kept my clothes? - அம்மா என் துணிகளை எங்கே வைத்திருக்கிறீர்கள்?
11. Which is the best shop here? - இங்கே நல்ல கடை எது?
12. Its not cold today. - இன்று குளிர் இல்லை.
13. We are not late today. - இன்று நாங்கள் தாமதமாக வரவில்லை.
14. I don't ask anything. - நான் ஒன்றும் கேட்பதில்லை.
15. This dress is mine. - இந்த உடை என்னுடையது.
16. She has not come yet. - அவள் இன்னும் வரவில்லை.
17. I may reach there at about 5 '0' clock. - நான் அங்கே சுமார், 5.00 மணிக்கு சென்றடைவேன்.
18. Please wait here till I come. - நான் வரும் வரை தயவு செய்து இங்கே காத்திருங்கள்.
19. I shall meet my mother next month. - நான் என் தாயாரை அடுத்த மாதம் சந்திப்பேன்.
20. Please don't be alarmed by the news. - இச்செய்தியை கேட்டு பயப்படாதீர்கள்.
21. She is well versed in dance. - அவள் நடனத்தில் சிறந்தவள்.
22. Will you give me whatever I want? - நான் கேட்பதையெல்லாம் நீ கொடுப்பாயா?
23. It is not my turn - இது என் முறையல்ல.
24. It doesn't matter to me. - இது எனக்கொரு விஷயமே இல்லை.
25. Its raining heavily. - பெருத்த மழை பெய்கிறது.
26. What can be done now? - இப்போது என்ன செய்ய முடியும்?
27. You are mistaken. - நீ தப்பாக நினைத்துள்ளாய்.
28. My work is not yet over. - இன்னும் என் வேலை முடியவில்லை.
29. We have come too earlier. - நாங்கள் ரொம்ப சீக்கிரமாக வந்துவிட்டோம்.
30. Its soiled. - இது அழுக்காக இருக்கிறது.

போதுமா... படித்துவிட்டு, உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிப் பேசி பாருங்கள் மாணவாஸ்!
Until then Bye! bye
Varshitha.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X