அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2017
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

என்ன கொடுக்கலாம்!
குழந்தைப் பருவத்தில், வளர்ச்சி வேகமாக இருக்கும். அதே நேரம், குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் நன்றாக இருக்க சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்.
* குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பால் குறைவான மில்க் ஷேக், சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல், பருப்பு சாதம், கலவை சாதம், பழங்கள் சாப்பிட கொடுத்து பழக்க வேண்டும்
* நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாக காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள்
* புரதம் செறிந்த இறைச்சி, பருப்பு வகைகள், முட்டை போன்றவற்றை சரியான அளவில் கொடுக்கலாம்
* குழந்தைகளுக்கு, நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழு தானிய பிரெட், போன்றவற்றை சாப்பிட கொடுங்கள்
* எண்ணெயில் பொரித்த உணவுகளை விட சுட்ட, வறுத்த, ஆவியில் வேக வைத்த உணவுகள் நல்லது
* கடைகளில் வாங்கும் உணவுகள், துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது
* இனிப்புச் சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களை கொடுக்காதீர்கள்; அதற்கு பதிலாக பாலையும், தண்ணீரையும் கொடுங்கள்
* இரும்பு சத்து நிறைந்த, முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம் போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்
* நிறைய வண்ணமயமான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையை தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர் திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்
* குழந்தைகளுக்கு இரும்புச்சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே, கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து, முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால், இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம்.
இதை தவிர, சிக்கன் சூப், வேக வைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக் கீரை, பருப்பு சாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களும், இரும்புச் சத்து, கால்சியம் இவற்றின் அளவுகளும் மாறும். அதற்கேற்ப கவனித்து உணவளியுங்கள்.

தான ரத்தம், உறையாதது எப்படி?
மனித உடலில் இருந்து வெளிவரும் ரத்தம் உடனடியாக உறைந்துவிடும். அதே நேரத்தில், ரத்த தானத்தின் போது பெறப்படும் ரத்தம், உறையாமல் இருப்பது எப்படி...
உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியாகும் போது, ரத்தத்தில் உள்ள என்சைம்கள் வேகமாக செயல்பட்டு ரத்தத்தை உறைய வைக்கின்றன. இதனால், காயம் ஏற்பட்ட இடத்தில், ரத்தம் உறைந்து, மேலும், ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
அதே நேரம், ரத்த தானத்தின் போது சேகரிக்கப்படும் ரத்தம், நன்கு சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கப்படுகிறது. மேலும், இந்த பைகளில் சிறிதளவு, 'சிட்ரேட்' உப்பு கரைசல் நிரப்பப்பட்டு இருக்கும். இந்த கரைசல், ரத்தம் உறைவதை தடுக்கும் திறனுடையது. இதனால் தான் ரத்தம் உறையாமல் இருக்கிறது.
சேகரிக்கப்படும் ரத்தம், உடனே குளிர்சாதன பெட்டியில், மைனஸ் 4 முதல் 6 டிகிரி சென்டிகிரேடு குளிர் நிலையில் பதப்படுத்தப்படுகிறது. இந்த குளிர் தட்பவெப்ப நிலையில், என்சைம்களின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், ரத்தம் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

டான்ஸ் பீ... டான்ஸ்!
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர்களை, தேனீயுடன் ஒப்பிடுவர். ஆனால், தேனீயோ சோம்பேறியான உயிரினம். இரவு, பகல் எந்நேரமும் உழைக்கும் ஒரே உயிரினம் எறும்பு தான். தேனீயைப் பற்றிய சில ஆய்வு தகவல்கள் இதோ...
தேனீக்கள், வெகு தொலைவு சென்று, மலர்களில் தேனை சேகரித்து திரும்பும். அவை தேன் கூட்டை அடைந்தவுடன், கூட்டை சுற்றி பறந்தபடி, தம் அடிவயிற்றை அசைத்து, எட்டு முறை நடனமாடும்.
இந்த நடனத்தின் மூலம், கூட்டில் உள்ள தேனீக்களுக்கு தேன் இருக்கும் திசை தெரிவிக்கப் படுவதாக, நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர், கார்ல்வோன் பிரிஸ்ச் கூறியிருக்கிறார்.
கடந்த, 1960ல், வெளியிடப்பட்ட இந்த தகவல், சரியானது என, இங்கிலாந்து ஆய்வு குழு நிரூபித்துள்ளது. டாக்டர் ஜோரிலே, தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் முடிவுகள், 'நேச்சர்' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
தேனீயின் நடனத்தை பார்த்து, இதன் சிக்கலான குறியீடுகளை மற்ற தேனீக்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதை, பலர் நம்ப மறுத்தனர். ஆனால், இது குறித்து நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வில், தேனீக்களின் நடன குறிப்புகளின் படி, மற்ற தேனீக்கள், தேன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேனீக்களின் நடனம் குறித்து நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் கார்ல்வோன் பிரிஸ்ச் கூறுகையில், 'தேனைச் சேகரித்து திரும்பும் தேனீக்கள், கூட்டை நெருங்கியதும் தேன் கூட்டை சுற்றி பறந்தபடி தம் அடிவயிற்றை அசைத்து நடனமாடுகின்றன.
உடனே தேன்கூட்டில் உள்ள மற்ற தேனீக்கள், 'ஙொய்' என்ற இரைச்சலுடன் நடனமாடும் தேனீக்களை சுற்றி பறக்கின்றன. அப்போது, தேன் இருக்கும் திசையை, சூரியனை வைத்தே மற்ற தேனீக்களுக்கு குறிப்பிடுகின்றன. அதுமட்டுமின்றி, தேனீக்களின் அடி வயிறு அசைபடும் வேகத்தை வைத்து தான், தேன் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பது உணர்த்தப்படுகிறது' என கூறியிருக்கிறார்.
தேன் மையங்களை செயற்கையாக உருவாக்கி, தேனீக்களில் நுண்கருவி பொருத்தி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, தேன் உறிஞ்சிய தேனீ, கூட்டை அடைந்து நடனமாடியது. அதை தொடர்ந்து கூட்டில் உள்ள தேனீக்களும், செயற்கையாக உருவாக்கப்பட்ட தேன் மையத்துக்கு சரியாக வந்து சேர்ந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதை, ஒருமுறைக்கு இருமுறை அவர்கள் உறுதி செய்தனர். தேனீக்களின் நடனம் வெறும் பொழுதுபோக்கு நடனமல்ல, அர்த்தமுள்ள நடனம்!
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X