இளஸ்... மனஸ்... (52)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2017
00:00

அன்பு சகோதரி ஜெனிக்கு, சகோதரி----------- எழுதி கொண்டது. ஒவ்வொரு வாரமும் நீங்கள் கூறும் பதில்கள், சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மனசுக்கு நிம்மதி கிடைக்கிறது சகோதரி...
எனக்கு ஒரே மகன். ரொம்ப ரொம்ப சுமாராக தான் படிப்பான்; பொறுப்பில்லாமல் இருக்கிறான். இவனை குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். எங்களுக்கு நிறைய சொத்து உள்ளது. அவற்றை பராமரித்து, பாதுகாப்பதற்கு தேவையான அறிவு வேண்டாமா...
இவனை நினைத்து நான் கவலைப்படாத நாளே இல்லை. நீங்களும் எத்தனையோ அம்மாக்களுக்கு, இதே போன்ற பிரச்னைக்கு ஆறுதலான பதில் கூறிவிட்டீர்கள். இருந்தாலும் என் மனம் ஆறவில்லை.
எங்களுக்கு பின் எங்கள் மகனின் நிலை என்ன... அவன் எப்படி இந்த திரண்ட சொத்துக்களை காப்பாற்ற போகிறான்... தற்போது, என் மகன் +1 படிக்கிறான். அடுத்த வருடத்தை நினைத்து பார்த்தால், இப்பவே என் மனம் கலங்குது. எனக்கு தகுந்த ஆலோசனை கூறுங்களேன் சகோதரி...

ஹ...ஹா... வெரி சிம்பிள். படிப்பு மட்டுமே ஒரு மனிதனை உயர்த்தப் போவது இல்லை என்று, நானும் இது மாதிரி கவலைப்படும் பெற்றோருக்கு எத்தனையோ ஆறுதல் சொல்லிவிட்டேன். .
சரி... உங்களுக்காக இந்த உண்மை சம்பவத்தை சொல்கிறேன்.
தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி நம் எல்லாருக்கும் நன்றாக தெரியும். அறிவியல் மாமேதை; நுாற்றுக்கு மேற்பட்ட பொருட் களை கண்டுபிடித்து வழங்கிய மாபெரும் விஞ்ஞானி.
சிறு வயதில் ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த எடிசனின் கையில் ஒரு கவர் இருந்தது. அந்த கவரை அவர் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தார்.
அந்த தாய், கடிதத்தை, கண்ணீரோடு சத்தமாக வாசித்தார்.
'உங்கள் மகனின் அறிவு திறமைக்கு முன், எங்கள் பள்ளி மிகவும் சிறியது. அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை. அதனால், தயவு செய்து, நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது' என்று படித்தார்.
பல ஆண்டுகளுக்கு பின், எடிசனின் தாயார் காலமாகிவிட்டார்.
எடிசனும் அந்த நுாற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஒருநாள்-
தன் வீட்டில் பழைய சாமான்களை ஒழித்தபோது, அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டு வந்து கொடுத்த கடிதம், எதேச்சையாக கண்ணில் பட, அதை எடுத்து வாசித்தார்.
அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா?
'மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை, இனிமேல் எங்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்...' என்று இருந்தது.
இதை படித்த எடிசன், கதறி அழுதார். பின், அவரது டைரியில், 'மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன், தன் தாயால் மாபெரும் விஞ்ஞானி ஆனார்!' என்று எழுதினார்.
மூளை வளர்ச்சி குன்றிய பையன், எதற்கும் லாயக்கில்லாதவன் என்று, ஆசிரியர்களால் கைவிடப்பட்ட மகனை, அவரது தாயாரின் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள், உற்சாகப் படுத்திய விதம், உலகத்திற்கு ஒரு மாபெரும் விஞ்ஞானியை கொண்டு வர முடியுமானால், உங்கள் மகனை ஏன் உங்களால் கொண்டு வர முடியாது. ஒரு தாய் நினைத்தால், எதையும் செய்ய முடியும்.
உங்கள் மகனிடம் அவனது பொறுப்பை உணர்த்துங்கள். இதை தினமும், 'அட்வைஸ்' போல் சொன்னால் அதை கேட்க மாட்டான். ஒரு கதைபோல் சொல்லுங்கள்.
முன்னொரு காலத்தில் வீரம் நிறைந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள் இருந்தனர். இளவரசர்கள் மூவரும் படிப்பை வெறுத்தனர். ஆசிரியர்களை கிண்டல் பண்ணி துரத்தி விட்டனர். இதனால், கவலையடைந்த அரசன் இந்தப் பொறுப்பை, அறிவு மிகுந்த விஷ்ணு சர்மா என்பவரிடம் ஒப்படைத்தார்.
அவர் இளவரசர்களுக்கு, ஒரு அரசனுக்கு இருக்க வேண்டிய ஐந்து நற்குணங்களையும் மிருகங்களை வைத்து ஒரு கதைபோல சொல்லி கொடுத்தார். அக்கதைகளை கேட்ட இளவரசர்கள் புத்திசாலிகளாக மாறி, பிற்காலத்தில் சிறந்த இளவரசர்களாக திகழ்ந்தனர். இப்படி உருவாகியதுதான் பஞ்சதந்திர கதைகள்.
இந்த பாணியை பயன்படுத்தி மகனை ஊக்கப்படுத்துங்கள். அவன் புத்திசாலியாக மாறுவான். உங்களால் முடியும் சகோதரி!
தன்னம்பிக்கையுடன்,
ஜெனிபர் பிரேம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X