அப்பா சொன்னா கேட்கணும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2017
00:00

அடர்ந்த காடு ஒன்றில், உடும்புகளின் கூட்டம் ஒன்று, வசித்து வந்தது. அந்த உடும்புகளுக்கு, ராஜகம்பீரன் என்ற அரசன் இருந்தது. அது தன்னுடைய கூட்டத்தாருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.
ராஜகம்பீரனுக்கு மகன் ஒன்று இருந்தது. ஒருநாள், இரை தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக ஓணான் ஒன்றைக் கண்டது.
அந்த ஓணான் உடும்புடன் இனிமையாகப் பேசியதால், அன்றிலிருந்து உடும்பும், ஓணானும் மனம் ஒத்த நண்பர்கள் ஆயினர். எப்போதும் ஒன்றாகவே சுற்றி திரிந்தனர்.
இதைக் கண்ட சில உடும்புகள், அரசனிடம் சென்று இளவரசனின் போக்கை எடுத்துக் கூறின.
“நீ இவ்வாறு செய்வது தவறு. ஓணான் நம்முடைய இனம் அல்ல. மேலும், அதனுடன் நாம் பழகக் கூடாது. அவை கொடியவை; கீழ்த்தரமானவை; சமயம் கிடைக்கும்போது, நம்மை நயவஞ்சமாக ஏமாற்றி விடும். அதனால், நம் குலத்துக்கு நன்மை எதுவும் விளையாது. தீமையே விளையும். எனவே, இப்பழக்க வழக்கத்தை விடு,” என்று புத்திமதி கூறியது.
தகப்பனாரின் பேச்சை மகன் கேட்கவில்லை. தொடர்ந்து ஓணானுடன் பழகி வந்தது.
இளவரசன் வளர்ந்து பெரியவன் ஆனான். எனவே, அதன் உடலும், பருத்து வளர்ந்தது. பெரிதாகி விட்ட உடும்புடன், சிறிய உடலைப் பெற்ற ஓணானால் பழக முடியவில்லை.
அது அடிக்கடி ஓணானை வந்து தழுவிக் கொள்ளும் போது, அதன் பருத்த உடலின் அழுத்தத்தினால் ஓணானுக்கு மூச்சுத் திணறியது.
எனவே, உடும்புக் கூட்டத்தையே ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று தீர்மானித்தது ஓணான்.
இதற்கிடையில் அரச உடும்பு, “என் மகன், ஓணான் என்ற நயவஞ்சக நண்பனுடன் பழகி வருகிறான். என்ன தடுத்தாலும் கேட்கவில்லை. ஆகவே, நீங்கள் உங்கள் வளையருகே ஆழமாக மற்றொரு வளையைத் தோண்டுங்கள். அதன் முடிவு, காட்டின் நடுப்பகுதியைச் சென்று அடைய வேண்டும். நமக்கு ஓணானால் எப்போதாவது ஆபத்து நேரிட்டால், நாம் அனைவரும் அந்த வளையின் வழியே ஓடிச் சென்று, நம் உயிரை காப்பாற்றிக் கொள்வோம். வேலைகள் துவங்கட்டும்,” என்று தன் பரிவாரங்களிடம் ஆணையிட்டது.
உடும்பின் சொற்படியே, நடுக்காட்டில் உள்ள பாழைடைந்த மண்டபம் வரை வளைகள் வெகு ஆழத்தில் தோண்டப் பட்டன. இந்த ஏற்பாடுகளை அது தன் மகனுக்கு தெரியாமல் செய்தது.
நாட்கள் ஓடின -
வேடன் ஒருவன், உடும்பு வேட்டையாட காட்டிற்குள் பிரவேசித்தான். அவன் நீண்ட நேரம் அலைந்து ஒரு உடும்பைக் கூட அவனால் வேட்டையாட முடியவில்லை.
இச்சமயத்தில் அவ்வழியே தற்செயலாக வந்தது ஓணான். அது வேடனை கண்டதும் அவனை நெருங்கிச் சென்று, உடும்புகளின் இருப்பிடத்தை காட்டியது.
இதைக் கவனித்த ஒரு உடும்பு, ஓடிச் சென்று மன்னனிடம், ஓணானின் துரோகச் செயலை கூறியது.
உடும்பு மன்னன், எல்லாரையும் எச்சரித்தது.
“ஓடுங்கள். வளைகளுக்குள் சென்று பாழடைந்த கோவிலுக்குச் சென்று விடுங்கள்!” என்று ஆணையிட்டது.
எல்லா உடும்புகளும் வளையின் வழியே தப்பிச் சென்றன. மன்னன், தன் மகனையும் அழைத்து சென்றது.
வேட்டைக்காரன், உடும்புகள் வாழும் இடத்தை சுற்றி, காய்ந்த சுள்ளிகளை போட்டான்.
தன்னுடைய வேட்டை நாய்களை, உடும்புகள் தப்பி வெளியே சென்று விடாதபடி காவல் வைத்தான். பின், சுள்ளிகளுக்கு நெருப்பு மூட்டினான். தீ எரிய ஆரம்பித்தது.
அதற்குள் எல்லா உடும்புகளும், பூமிக்கடியில் இருந்த வளையின் வழியே தப்பிச் சென்றன. ஒரு உடும்புக்கூட வெளியே வராதது கண்டு, அருகில் இருந்த மரத்தின் மேலிருந்த ஓணான் ஆச்சர்யப்பட்டது.
நேரம் ஆக ஆக வெறுப்படைந்த வேடன், 'எல்லாவற்றுக்கும் காரணம் ஓணான் தான். இது பொய் சொல்லியிருக்கிறது; அநாவசியமாக என்னிடம் விளையாடி இருக்கிறது; இதற்கு ஒரு பாடம் புகட்டுவேன்' என்று கோபத்துடன் எண்ணினான்.
மறுகணம், தன் கையிலிருந்த கம்பால் மரத்தின் மீதிருந்த ஓணானின் தலையில் சொத்தென்று போட்டான். குற்றுயிராக கீழே விழுந்தது ஓணான். உடனே வேட்டை நாய் ஒன்று அதைக் கவ்விப் பிடித்து எரியும் தீயில் வீசியது.
ஒரு பாவமும் செய்யாத உடும்புகளைக் காட்டிக் கொடுக்க எண்ணிய ஓணான், தீயில் விழுந்து கருகி துடிதுடித்து இறந்தது.
நடந்ததை அறிந்த மகன் உடும்பு, அப்பாவிடம் மன்னிப்பு கேட்டது.
“அப்பா என்னோட கீழ்படியாமையால் எவ்ளோ பெரிய ஆபத்து நேரிட இருந்தது. என்ன மன்னச்சிடுங்கப்பா... உங்களோட பேச்சை மீறி இனி நடக்க மாட்டேன்,” என்று கூறியது.
திருந்திய மகனை, கட்டித் தழுவி முத்தமிட்டது அப்பா உடும்பு.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X