நவீன தொழில்நுட்பம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
நவீன தொழில்நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2011
00:00

தோட்டக்கலைப் பயிர்களில் மெல்லுடலிகள் மேலாண்மை: பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகள் வகையில் பூச்சியினமல்லாத, ஆனால் பயிர்களுக்கு குறிப்பாக தோட்டக்கலைப் பயிர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ஒரு வகை இனம் உண்டு. அவை மெல்லுடலிகள் பிரிவில் "காஸ்ட்ரபோடா' வகுப்பைச் சார்ந்த நத்தையும், கூண்டில்லாத நத்தையும் ஆகும். இவற்றுள் பால் வேறுபாடுகள் கிடையாது. இவைகள் தட்டையான நீண்ட கால்கள் மூலம் இடம்பெயர்கின்றன. பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் காணப்படும். இவற்றின் கூடு வெள்ளை மரப்பட்டை நிறம் முதல் கருப்பு நிறம் வரை உண்டு.
நத்தைகள் ஈரப்பாங்கான நிலப்பரப்பில் 3 செ.மீ. ஆழத்திற்கு 124 செ.மீ. என்ற அளவில் துளையிட்டு அதனுள் ஒரே சமயத்தில் 60 முட்டைகள் வரை இடும். 2 வாரங்களில் முட்டைகள் பொரிந்து அவற்றிலிருந்து இளம் நத்தைகள் வெளிவரும். இவை பயிர்களின் தளிர்பாகங்களை உண்டு வளரத் துவங்கும். 2 ஆண்டுகளில் முழு வளர்ச்சியை அடைகின்றன. நத்தைகள் குளிர்காலங்களில் கூட்டமாகக் காணப்படும். பாறை இடுக்குகள், புதர்கள், குப்பைக் குவியல்கள் ஆகிய பகுதிகளில் இவற்றின் செயல்பாடுகள் அதிகமாகும். பகற்பொழுது தவிர்த்து இரவு நேரங்களில் மறைவிடத்தை விட்டு வெளியேறி பயிர்களுக்கு நாசம் விளைவிக்கின்றன. பப்பாளி, பாக்கு, ஏலம், மிளகு முதலானவற்றில் மெதுவாக ஊர்ந்து ஏறிச்சென்று இலைகளின் அடிப்பாகத்தில் பாதுகாப்பான பகுதிகளில் ஒட்டிக்கொண்டு ஊறு விளைவிக்கத் துவங்கும்.


இலக்காகும் பயிர்கள்: பாக்கு, மிளகு, ஏலம், வாழை, பப்பாளி, லெட்டூஸ், முட்டைக்கோஸ், கடலை, சோயா பீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் இதர தோட்டக்கலைப்பயிர்கள். இறுகிய மண் கண்டங்களில் வளர்க்கப்படும் பயிர்கள் நத்தையின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகின்றன. அத்தகைய பகுதிகள் நத்தைகளின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உகந்ததாகும். நத்தைகள் பழம், பூ, மொக்குகள், மல்பெரித் தழைகள், பருத்திச் செடிகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன.


ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு:


* மண்ணின் வகைகளுக்கேற்றவாறு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். வழுவழுப்பான விதை பாத்திகள்
நத்தையின் நடமாட்டத்தை வெகுவாகக் குறைக்கின்றன.
* குறைந்த வெப்பநிலையில் பயிர் செய்தால் நத்தைகள் அல்லது அதன் முட்டைகளை உறைய செய்துவிடுகின்றன.
* நத்தைகளின் தாக்குதலுக்கு எளிதில் உட்படும் தாவரங்களை 3-5 மீட்டர் இடைவெளி தள்ளி பயிர் செய்வதன் மூலம் நத்தைகளின் இடப்பெயர்ச்சியைத் தவிர்க்கலாம்.
* அளவான பரிந்துரைக்கப்பட்ட உர அளவே பின்பற்றப்பட வேண்டும். வீரியமிக்க நாற்றுகளை உபயோகிக்க வேண்டும். விதைக்கும் நாளை மாற்றி அமைப்பதன் மூலம் நத்தைகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம். உதாரணமாக நத்தைகளின் செயல்பாடுகள் குறைந்திருக்கும் வறண்ட நாட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
* நத்தைகளை நம் கைகளால் பொறுக்கி அழிக்கலாம்.உயிரியல் முறை: நத்தைகளை அழித்து உண்ணும் ஒரு வகை நண்டுகள் உள்ளன. பூரான் வகையைச் சார்ந்த ஆர்தோமார்பா, பூரான் நத்தைகளைச் செயலிழக்கச் செய்து உண்கின்றன.
ரசாயன முறை: 5 சதம் மேட்டால்டிஹைடு தெளிப்பதன் மூலம் நத்தைகளைக் கட்டுப் படுத்தலாம். சாதாரண உப்பை பயிர்களின் வரிசைக்கிடையில் (200 கிலோ/எக்டர் - 2 முறை) இடுவதன் மூலம் நத்தைகளின் செயல்பாட்டைக் குறைக்கலாம்.


(தகவல்: சி.செந்தில்குமரன், கள அதிகாரி, ஸ்பைசஸ் போர்டு)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X