ரசாயனம் கலக்காமல் 'மலையாள வெல்லம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2017
00:00

அச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரிப்பில் பொள்ளாச்சி விவசாயிகள் கைதேர்ந்தவர்கள். கொங்கு மண்டலத்தில் ஆண்டு முழுவதும் கரும்பு உற்பத்தி இருக்கும். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு விவசாயம் ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே.
வெல்லம் தயாரிப்பில் உடலுக்கு கேடு விளைவிக்காத ரசாயனம் கலப்பது வழக்கம். ரசாயன கலவையில் தயாராகும் வெல்லம் மஞ்சள் நிறமாகவும், பார்த்தவுடன் சுவைக்க துாண்டும் வகையில் பளபளப்பாக மின்னும்.
பனையில் தயாராகும் கருப்பட்டி போல் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயன கலவையை முற்றிலும் தவிர்த்து வருகிறார் மதுரை மாவட்டம் குமாரம் அருகே கோட்டைமேடு கரும்பு விவசாயி ஜோதிவேல்.
அவர் கூறியதாவது: அச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரித்த பின் மஞ்சள் அல்லது பொன்னிறமாக மின்னும்.
அப்படி இருந்தால், அதில் அதிகளவு ரசாயனம் கலக்கப்பட்டதாக அர்த்தம். கருப்பட்டி போல் வெல்லம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனம் சேர்க்காமல் சிவப்பு ரக கரும்பில் இருந்து மலையாள வெல்லம் தயாரிக்கிறேன்.
கார்த்திகை முதல் சித்திரை வரை கரும்பு அறுவடை இருக்கும். எனவே தோட்டத்திலேயே வெல்ல ஆலை நிறுவியுள்ளேன். முன்பு பொள்ளாச்சியில் இருந்து, கரும்பு பாகு ஆட்ட ஆட்களை வரவழைப்பதுண்டு.
தற்போது இங்குள்ளவர்களே, தொழில்நுட்பம் தெரிந்து கொண்டுள்ளனர். எனவே வேலையாட்களுக்கும் பஞ்சமில்லை.
கருப்பு உருண்டை: ரசாயனம் கலக்காமல் மலையாள வெல்லம் தயாரிப்பதால் பார்ப்பதற்கு நிறம் இன்றி கருப்பாக இருக்கும். கரும்பு பாகு தயாரிக்கும்போது கழிவுகள் நுரையாக பொங்கும். அவற்றை அகற்றுவதற்காக சுண்ணாம்பு, இட்லி மாவு சோடா உப்பு சிறிதளவு கலக்கப்படுகிறது. சுண்ணாம்பு சத்து உடலுக்கு தேவை.
குறைந்தளவு சோடா உப்பு சேர்ப்பதால் உடலுக்கு தீங்கில்லை. கருப்பு நிற மலையாள வெல்லம் விலை குறைவு.
எனினும் உடல் நலம் பேணுவோர் இவற்றை தேடி பிடித்து வாங்குகின்றனர். கேரளாவிற்கு பெருமளவு அனுப்பப்படுகிறது. கிலோ 40 ரூபாய். மஞ்சள் நிற மலையாள வெல்லம் விலை அதிகம். ரசாயனம் கலந்து தயாரித்தால் லாபம் ஈட்டலாம். உடல் நலம் கருதி ரசாயனம் கலக்காமல் தயாரிப்பதால்
மன நிறைவு ஏற்படுகிறது என்றார்.
தொடர்புக்கு 99653 33216.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
06-ஏப்-201703:19:05 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே செய்தி என்னவோ இனிக்குது, ஆனா குறைந்தளவு சோடா உப்பு சேர்ப்பதால் உடலுக்கு தீங்கில்லை என்று இவர் கூறியது தான் உதைக்குது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X