'கோ 5' 'மசால் வேலி': ஆடு, மாடுகளின் 'அல்வா'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2017
00:00

தமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 'கறப்பது கால் படி; உதைப்பது பல்லுப்போக...' எனக்கூறுவதற்கு ஏற்ப கறவை மாடுகளுக்கு வைக்கோல், பருத்திக்கொட்டை வாங்கும் செலவு மும்மடங்காகி விட்டது. போதுமான சத்தான தீவனம் கிடைக்காததால் பசு மாடுகளின் பால் கறவை குறைந்து விட்டது. கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் பலர் விலைக்கு விற்கும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.கால்நடைகளுக்கான தீவன பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் நரியம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி பி.பூமிநாதன். இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கால்நடை தீவன ரகத்தை சேர்ந்த 'கோ 5' மற்றும் 'மசால் வேலி' ஆகிய பசுந்தீவனம் வளர்க்கிறார்.
தினமும் தேவைக்கு ஏற்ப பசுந்தீவனத்தை வயலில் இருந்து அறுவடை செய்து பசுக்கள், ஆடுகளுக்கு கொடுப்பதால், அவற்றை விரும்பி உண்ணும் பசுக்கள் பால் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. கோடையில் தீவன பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.பூமிநாதன் கூறியதாவது: மதுரையில் முதல் முறையாக ஒரு ஏக்கரில் 'கோ 5' பசுந்தீவனம் விளைவிக்கிறேன். கரும்பு போல் தோற்றம் கொண்ட 'கோ 5' தீவனம் கால்நடைகளின் 'அல்வா' என அழைக்கப்படுகிறது. இனிப்பு சுவை அதிகம் இருப்பால் கால்நடைகள் விரும்பி உண்ணும். அனைத்து சத்துக்களும் பொதிந்து கிடப்பதால் கறவை மாடுகளுக்கு பால் சுரப்பு அதிகரிக்கிறது. பத்து பசுக்கள், ஐந்து கன்றுகளுக்கு தீவனம் வாங்கினால் கட்டுபடியாகாது. 'கோ 5' தீவனம் ஆண்டு முழுவதும் பயனளிக்கிறது. விதை கரனை ஒன்று ஒரு ரூபாய். விரும்பி கேட்போருக்கு தருகிறேன். ஆடுகள் விரும்பி உண்ணும் 'மசால் வேலி' எனும் பசுந் தீவனம் ஒரு ஏக்கரில் வளர்க்கிறேன். மசால் வேலி செடிகள் நாட்டு கருவேல செடிகள் போல் தோற்றம் கொண்டிருக்கும். விதைகள் கடினமாக இருக்கும். எனவே விதைகளை கொதிக்கும் வெண்ணீரில் சிறிது நேரம் ஊற விட வேண்டும். பின் உலர்த்தி நிலத்தில் பாவி விளைவிக்கலாம். 40வது நாளில் இருந்து பல ஆண்டுகள் வரை பலன் தரும். புரதச்சத்து மிகுந்திருப்பதால் ஆடுகள் உடல் பருமனில் பெருத்தும் ஆரோக்கியமாகவும் வளரும் என்றார். செலவு குறைவு; வரவு அதிகம். கொட்டில் முறை ஆடு வளர்ப்போருக்கு மசால் வேலி ஒரு வரப்பிரசாதம் என்றார். தொடர்புக்கு 98421 79980.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X