பிளஸ் 2 மாணவர்களுக்கு, இனி கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என, மத்திய இடைநிலைகல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. பொதுவாக கடினமான கேள்விக்கு 15% மதிப்பெண், கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இனி, மாணவர்களின் பதிலுக்கு ஏற்ற துல்லியமான மதிப்பெண்கள் மட்டுமே வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதனால், கல்லூரிகளில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது. அதேசமயம், மாணவ, மாணவியர் தேர்ச்சிபெற, சில மதிப்பெண்கள் தேவைப்பட்டால், கருணை மதிப்பெண் அளிப்பது தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.