எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த, தானிய ரகமான டெஃப்பில் (Teff), முட்டை மற்றும் காய்கறிகளுக்கு இணையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. சர்வதேச சந்தையில், 1 கிலோ டெஃப் தானியத்தின் விலை 700 ரூபாய். அதிக மகசூலைத் தரும் இந்த சூப்பர்ஃபுட் (Superfood) பயிர் ரகம், விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) தெரிவித்துள்ளது.
'தமிழகம், மைசூரு மற்றும் பகல்கோட் பகுதிகளில், டெஃப் ரகத்தை பயிரிட்டு சோதனை செய்தோம். ஏக்கருக்கு 250 கிலோ வரை கிடைக்கும். வறட்சிப் பகுதிகளுக்கு ஏற்ற ரகம். உ.பி., விவசாயிகளிடம், இதேபோன்ற சூப்பர்ஃபுட் தானிய ரகங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன'.