கண்களைத் தழுவும் தூக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2017
00:00

உடல் ஆரோக்கியத்திற்கு, நல்ல தூக்கம் அவசியம். தூக்கம் என்பது உடல் ஓய்வுக்காக மட்டும் அல்ல; தூக்கத்தின்போது நமது உடல் பல்வேறு செயல்களைச் செய்கிறது. நாம் தூங்கும் நேரத்தில் உடல் இயங்குகிறது; செரிமானம் நடக்கிறது. உடல் நலத்திற்கு மட்டுமன்றி, மன நலத்திற்கும் முறையான தூக்கம் அவசியம். உங்களுக்குச் சரியாகத் தூங்கத் தெரியுமா? என்பதை பின்வரும் எளிய கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
* தலைப்பிலுள்ள கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள, கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள்.

* ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).
* உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள், கடைசியில் உள்ளன. மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.

1) பெரும்பாலும் எந்த நிலையில் தூங்குவீர்கள்?
அ. ஒருக்களித்தபடி (அதாவது ஒருபக்கமாகப் படுத்தபடி)
ஆ. மல்லாக்கப் படுத்தபடி
இ. குப்புறப் படுத்தபடி

2) தினமும் எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்?
அ. அதிகபட்சம் ஐந்து மணி நேரம்
ஆ. ஆறிலிருந்து ஏழு மணி நேரம் வரை
இ. அப்படி எதையும் கூறிவிட முடியாது. சில நாட்கள் வெறும் இரண்டு மணி நேரம், சில நாட்கள் 12 மணி நேரம்கூட.

3) எதுபோன்ற படுக்கையில் படுக்கிறீர்கள்?
அ. மென்மையான பாய் அல்லது மென்மையான விரிப்பு.
ஆ. மென்மையான மெத்தை
இ. கரடுமுரடான மெத்தை அல்லது விரிப்பு

4) இரவு சாப்பாட்டுக்கும், தூக்கத்துக்கும் நடுவே எவ்வளவு இடைவெளி இருக்கிறது?
அ. அரைமணி நேரம் அல்லது அதைவிடக் குறைவு.
ஆ. அரைமணி நேரத்தைவிட அதிகம், ஒன்றரை மணி நேரத்தைவிடக் குறைவு.
இ. குறைந்தது ஒன்றரை மணி நேரம்.

5) தூங்குவதற்கு முன் மனநிலை பெரும்பாலும் எப்படியிருக்கும்?
அ. மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும்
ஆ. கோபமாகவும், கவலையாகவும்
இ. இப்படித்தான் என்று சொல்லவே முடியாத அளவுக்கு மாறி மாறி இருக்கும்.

6) நீங்கள் தூங்கும்போது, அந்த அறையில் வேறு ஏதாவது மின் சாதனம் இயங்கிக் கொண்டிருக்குமா?
அ. அதிகபட்சம் இரவு விளக்கு மட்டும்தான் எரிந்து கொண்டிருக்கும்.
ஆ. ட்யூப் லைட் எரியும். காரணம், வீட்டில் பிறர் ஏதோ வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
இ. வெகு நேரத்துக்கு தொலைக்காட்சி இயங்கிக் கொண்டே இருக்கும்.

விடைகள்
அ ஆ இ
1) 8 4 0
2) 4 8 0
3) 8 4 0
4) 0 4 8
5) 8 0 4
6) 8 4 0

* உங்கள் மொத்த மதிப்பெண் 40லிருந்து 48 வரை என்றால், நல்ல உறக்கத்துக்கு என்னவெல்லாம் தேவை என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இதனால் உடல் களைப்பும், மனக் களைப்பும் உங்களுக்குப் பெரும்பாலும் ஏற்படாது.
* உங்கள் மொத்த மதிப்பெண் 20லிருந்து 39 வரை என்றால், நம் வாழ்வில் சுமார் மூன்று அல்லது நான்கில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது. எனவே, ஆழ்ந்த உறக்கத்துக்கு என்னென்ன தேவை என்பதை, நீங்கள் மேலும் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் மொத்த மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால், உங்களுக்கு உறக்கம் பற்றி கொஞ்சம்கூட விழிப்புணர்வு இல்லை! உங்கள் உடல் நலம் கெடுவதற்குள் சரியான வழிமுறைகளை பின்பற்றத் தொடங்குங்கள்.
- ஆருத்ரன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X