'டிஜிட்டல்' பரிவர்த்தனை குரு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2017
00:00

“என் கையில பணம் இல்ல, உங்ககிட்ட பேடிஎம் இருக்கா?” என இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களைக் கேட்கவைத்து, இந்தியப் பொருளாதாரத்தை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறார் விஜய்சேகர் ஷர்மா. 2016ல் உலகின் 100 செல்வாக்கு மிகுந்த நபர்களுள் விஜய்சேகர் ஷர்மாவும் ஒருவர் என்று, 'டைம்ஸ்' பத்திரிகை இவரைத் தேர்வு செய்தது. அந்தப் புகழை அடைய அவர் கடந்துவந்த பாதை மிக நீளமானது.
உத்தரப் பிரதேசத்தில், சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் விஜய்சேகர் ஷர்மா. படிப்பில் மிகவும் சுட்டி. 15 வயதிலேயே 12ம் வகுப்பு முடித்துவிட்டார். எல்லார் வீடுகளைப் போலவே அவர் வீட்டிலும், பொறியியல் படிப்புதான் கனவு. இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு எழுதத் தயாரானார்.

அங்குதான் முதல் சவாலைச் சந்தித்தார். பள்ளியில் ஹிந்தி (தாய்மொழி) வழிக் கல்வியில் படித்ததால், ஆங்கிலம் சுத்தமாகத் தெரியவில்லை.
யாராவது ஆங்கிலத்தில் பேசினால், பதில் தெரியவில்லை. ஆனால், மனஉறுதியை விடவில்லை. இயற்பியல் பாடத்தைப் படிக்க வேண்டுமென்றால், முதலில் பாடங்களை ஹிந்தியில் படித்து விடுவார். பின்னர், ஆங்கிலத்தில் வரிக்கு வரி அர்த்தம் புரிந்து படிப்பார்.
கடின உழைப்பால், டில்லியில் கல்லூரி ஒன்றில் பொறியியல் பிரிவில் இடம் கிடைத்தது. அதோடு சவால்களும் முடிந்து விட்டதா? இல்லை, மொழிப் பிரச்னை அப்படியே தொடர்ந்தது. சிலசமயம் மற்ற மாணவர்களால் கேலி செய்யப்பட்டார். கல்லூரி ஆசிரியர்கள் ஏதாவது கேள்வி கேட்டால், எதுவுமே புரியாது. ஆனாலும் மனஉறுதி தளரவில்லை. தம் கல்வியைச் சிறப்பாக முடித்தார்.

தொழில் முயற்சிகள்:
தொண்ணூறுகளில், உலக இளைஞர்களின் கனவு, சிலிக்கான் வேலி. இதைக் கவனித்துக்கொண்டிருந்த விஜய், அமெரிக்காவிற்கு பாஸ்போர்ட் எடுத்துக் கிளம்பவில்லை.
மாறாக, கணினி, இணையதளம் போன்ற தொழில்நுட்பத்துறையில் என்ன செய்யலாம் என்பதை யோசித்து, கல்லூரியில் படிக்கும்போதே, 20,000 ரூபாய் முதலீட்டில் நண்பருடன் சேர்ந்து சிறிய நிறுவனத்தை உருவாக்கினார்.
அந்த நிறுவனம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கவே, அந்த நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்று விட்டார். ஆனால், அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், இவரது கனவைச் சிதைத்தது. ஐ.டி. நிறுவனங்கள் முடங்கின. அந்தச் சமயத்தில் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.
அவருடைய பெற்றோர், வேலைக்குச் சென்று சம்பாதிக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், விடாமுயற்சியோடு தொழில் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். தொழில் தொடங்க குடும்பத்தினரிடம் பணஉதவி கேட்டார். ரூ. 8 லட்சம் கடனாகப் பெற்று, இணையம் மூலம் சேவை வழங்கும் இன்னொரு தொழிலைத் தொடங்கினார்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வந்த சமயத்தில், பெரும்பாலான கிராமங்களிலும், நகரங்களிலும் 197 என்ற எண், உதவி எண்ணாக அறியப்பட்டது. பி.எஸ்.என்.எல். தொலைபேசி மூலம் 197 என்ற எண்ணை அழைத்தால், நமக்குத் தேவையான தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்துவிடலாம். இதை முன்னுதாரணமாகக் கொண்டு, இணையம் மூலம் 197 என்ற சேவையை அறிமுகப்படுத்தினார். ஆனால், அது பெரியளவில் வருமானத்தைப் பெற்றுத் தரவில்லை.
இதைத் தொடர்ந்து, ஜோதிடர்களை வேலைக்கு நியமித்து, 'ஆன்லைன் ஜோதிட' சேவை வழங்கினார். அந்தச் சமயத்தில், ஏர்டெல் நிறுவனம் நேரலையில் ஜோதிடர்களுடன் பேசலாம் என்ற ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்தது. இந்த வாய்ப்பை விஜய் பயன்படுத்திக் கொண்டார்.
தன் கடன்களை அடைக்க, இரவு பகல் பார்க்காமல் வேலைசெய்தார். இதற்கிடையில், திருமணம் நடந்தது. 2010ல் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டது. பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது.

திருப்பு முனை:
ஸ்மார்ட்ஃபோன் பயனாளிகள் அதிகரித்தார்கள். இதை மூலதனமாக வைத்து தோற்றுவிக்கப்பட்ட நிறுவனம் தான், 'பேடிஎம்' என்ற இணைய சேவை. அதாவது மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கான சேவை நிறுவனமாக முதலில் தொடங்கப்பட்டதுதான் பேடிஎம். தெருமுனைக் கடைகளில் சென்று, மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களை இணையம் மூலம் செய்ய வைத்தது, நிறுவனத்தின் முதல் வெற்றி. நல்ல வருவாயும்கூட.
விளைவு, சீனாவின் முக்கிய நிறுவனமான அலிபாபா, பேடிஎம் நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்தது. அதைத் தொடர்ந்து, டாடா நிறுவனம் பேடிஎம்-மில் முதலீடு செய்தது. வங்கிக் கடன் மூலம் நிறுவனத்தை பன்மடங்கு விரிவு செய்தார் விஜய்.
மொபைலைத் தொடர்ந்து, டி2ஹெச் உட்பட பிற சேவைகளுக்கான வலைதளமாகவும் பேடிஎம் விரிவுபடுத்தப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகரித்தவுடன், 'இ-வாலட்' என்ற முறையை பேடிஎம் அறிமுகம் செய்தது. முதன்முதலில் ரொக்கமற்ற பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விஜய், பேடிஎம் மூலம் உருவாக்கினார்.
பேடிஎம்மில், கணக்கில் பணம் வைத்துக் கொண்டால், அதைச் சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை எங்கும் பயன்படுத்தலாம். ஒரு சின்ன செயலி மூலம், உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்ஃபோனே, வங்கி மாதிரி செயல்படும் என்பதே, பேடிஎம் பிரபலமாக முக்கிய காரணம். நம்முடைய பணம் எங்கும் காணாமல் போகாது என்ற நம்பிக்கையை உருவாக்கியது இன்னொரு காரணம்.
இந்த நேரத்தில், 'டிமானிடைசேஷன்' என்னும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. ரொக்கமற்ற பரிமாற்றத்தையும் அரசு ஊக்குவித்தது. பேடிஎம் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. தெருமுனை பெட்டிக்கடை முதற்கொண்டு, பெரிய வணிக நிறுவனங்கள் வரை, இதனைப் பயன்படுத்தத் தொடங்கின.
தமது தொடர் முயற்சியால் இன்று உலகமே வியக்கும் வண்ணம் வளர்ந்திருக்கிறார் விஜய்.

சிறுவயதில் பள்ளியிலும், குடும்பத்திலும் சொல்லிக் கொடுத்த மதிப்பீடுகள் தான் வாழ்க்கையை நல்ல விதத்தில் அணுக வேண்டும் என்ற கண்ணோட்டத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தது”.
விஜய்சேகர் ஷர்மா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X