தேதி சொல்லும் சேதி | பட்டம் | PATTAM | tamil weekly supplements
தேதி சொல்லும் சேதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 மே
2017
00:00

மே 1, 1890: மே நாள் - உலகத் தொழிலாளர் நாள்
நியாயமான வேலைநேரம் கேட்டுத் தொழிலாளர்கள் போராடியதால், பிறந்தது மே தினம். தொழிலாளர்களின் இந்தப் போராட்டம், அரசியல் முக்கியத்துவம் கொண்டிருந்தது. சர்வதேச பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க மாநாடு 8 மணி நேர வேலையை, உலகம் முழுவதும் கொண்டு வர இந்த நாளை அறிவித்தது.

மே 3, 1935: சுஜாதா பிறந்த நாள்
தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இயற்பெயர் ரங்கராஜன். தனிப்பட்ட கற்பனை மற்றும் மொழி நடையால், பல வாசகர்களைக் கவர்ந்தார். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கட்டுரைகள், திரைப்படக் கதை, வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என, பல துறைகளில் சாதித்தவர்.

மே 4, 1999: உலக தீயணைக்கும் படையினர் நாள்
ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்தது. 1999ல், ஆஸ்திரேலிய காடுகளில் ஏற்பட்ட தீயைக் அணைக்கும் பணியில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூர, இந்த நாள் உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிறது.

மே 5, 1818: கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்
அரசியல் பொருளாதார வல்லுனராக, ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக அறியப்படுகிறார். இவரது பொதுவுடைமைக் கொள்கைகளும், கருத்துகளும் மக்களிடம் எழுச்சியைத் தூண்டின. இவர் எழுதிய முக்கியமான நூல் 'மூலதனம்'.

மே 6, 1861: மோதிலால் நேரு பிறந்த நாள்
இந்திய சுதந்திர போராட்ட வீரர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தை. இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு,- காந்தி குடும்பத்தின் முன்னோடி.

மே 7, 1861: ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்
புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர். 'கீதாஞ்சலி' என்ற கவிதை தொகுப்பிற்காக 1913ல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இந்தியாவின் தேசியகீதத்தை இயற்றியவரும் இவரே. உயிரியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X