கோடையில் வாடும் கோமாதா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2017
00:00

கறவை மாடுகள், எருமைகளை பொறுத்தவரை கோடை வெயிலின் தாக்கம் நேரடியாக பால் உற்பத்தியில் எதிரொலிக்கும். கோடையில் கறவை மாடுகள் முழுமையாக பால் தராது. கறுப்பு வெள்ளை பிரிசியன் இனம், செந்நிற ஜெர்சி இனம் ஆகியவற்றிற்கு கோடையில் போதிய பராமரிப்புகள் இல்லையென்றால் பால் உற்பத்தியை தராது. காரணம் மேல்நாட்டு இனங்களின் கலப்பாக வாழும் இவை, நம் நாட்டு கூடுதல் வெப்பத்தை அதிகம் தாங்காது. சுற்றுப்புற வெப்ப நிலை, பால் உற்பத்தியில் பெரும் பங்காற்றுகிறது. உயர் இன கால்நடைகளுக்கு 80 டிகிரி பாரன்ஹீட், இந்திய இனங்களுக்கு 95 டிகிரி பாரன்ஹீட் கலப்பின கறவை மாடுகளுக்கு 85 டிகிரியில் இருந்து 90 டிகிரி பாரன்ஹீட், எருமைகளுக்கு 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை, அவற்றை பாதிக்கக்கூடிய வெப்ப நிலையாகும். இந்த வெப்ப நிலை இனங்களுக்கு அதை தாங்கக்கூடிய சக்தி மாறுபடும். சில இன கறவை மாடுகள் சிறிதளவு வெப்பநிலை உயர்வை தாங்கிக் கொள்ளும். 'மே பிளைஸ்' தொல்லைகோடையில் ஈக்களின் தொல்லை அதிகமிருக்கும். குறிப்பாக மே மாதத்தில் ஈக்களின் பெருக்கம் கூடுதலாகும். இதனாலேயே ஆங்கிலத்தில் 'மே பிளைஸ்' என்ற சொல் வழக்கு உண்டு. ஈக்கள் கறவை மாடுகளை அடிக்கடி வட்டமிடுவதாலும், அவற்றின் மேல் அமர்ந்து எரிச்சலை கொடுப்பதாலும் கறவை மாடுகள் அமைதியற்ற சூழ்நிலையில் இருக்கும்.

ஈக்களை விரட்டுவதிலேயே அவற்றின் கவனம் இருப்பதால் போதிய தீவனத்தை சாப்பிடுவதிலும், தகுந்தளவு தண்ணீர் குடிப்பதிலும் கறவை மாடுகள் நாட்டம் கொள்ளாது. விளைவு பால் உற்பத்தி குறைவு ஏற்படும். விவசாயிகளில் சிலர் கறவை மாடுகள் சாப்பிட்டாலும், தீவனம் சாப்பிடாவிட்டாலும் மாடுகள் பாலை கொடுப்பதில்லை என வீண் கவலை கொள்வர். அவை சாப்பிடும் தீவனமே பாலாக மாறி நமக்கு பலனை தருகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். பசுந்தீவனத்திற்கு மானியம் ஈக்கள் வட்டமிடுவதை குறைக்க மாட்டுத்தொழுவங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இதற்காக ஈக்களை கட்டுப்படுத்த தக்க மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையில் பேரில் மாட்டுத்தொழுவங்களில் தெளிக்க வேண்டும். தொழுவங்களில் சேரும் சாணம், சிறுநீர் போன்றவைகளை அவ்வப்பொழுது அப்புறப்படுத்த வேண்டும். இதனால் ஈக்களின் தொல்லையை கட்டுப்படுத்த முடியும். கோடையில் பசுந்தீவனமளிப்பது பால் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. பால் அளவு குறைவதற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக பசுந்தீவனம் தவறாமல் அளித்து வந்தால் வெயில் காலமாக இருந்தாலும், கறவை மாடுகள் பால் உற்பத்தியை குறைப்பதில்லை. விவசாயிகள் தங்களின் நிலத்தில் பசுந்தீவனம் பயிர் செய்வது நல்லது. பசுந்தீவன சாகுபடிக்கு அரசு மானியம் வழங்குகிறது. கோடையில் கறவை மாடுகளை உச்சி வெயிலில் குளிப்பாட்ட வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் கறவை மாடுகள் உடம்பில் அடிக்கடி தண்ணீர் தெளித்து விடலாம். கறவை மாடுகள் தங்களின் தண்ணீர் தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை பகல் நேரங்களிலும் மீதிப்பங்கினை மற்ற நேரங்களிலும் பூர்த்தி செய்து கொள்கின்றன. ஒவ்வொரு கறவை மாட்டுக்கும், ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் மூன்றரை லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
'ஹீட் ஸ்ட்ரோக்' அபாயம் கோடை பகலில் உச்ச வெப்ப நிலை காலை 11:00 -- மதியம் 2:00 மணி. இந்த இடைப்பட்ட காலத்தில் கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.
அவ்வாறு அனுப்பும் பட்சத்தில் 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் வெப்ப அதிர்ச்சி கறவை மாடுகளை தாக்க வாய்ப்புண்டு. கூடுதலான வெப்ப அதிர்ச்சியில் மாடுகள் சோர்ந்து விழவும், முடிவில் இறந்து விடவும் வாய்ப்புள்ளன. எனவே வெயில் குறைவான நேரங்களான காலை, மாலையில் வெளியில் மேய்ச்சலுக்கு விடலாம். எருமைகளை பொறுத்தவரை அவற்றின் தோல் பசுவை விட ஐந்து மடங்கு கெட்டியானது. ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலங்களில் எருமைகள் இனப்பருவத்துக்கு வரும் அறிகுறிகள் விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரியாது. இதனை 'ஊமைப்பருவம்' என்பார்கள். கோடையில் எருமைகளின் இன விருத்தி திறனை அதிகரிக்க நிழலான இடத்தில் அவைகளை கட்டி வைத்து பராமரிக்கலாம். குளங்கள் இருந்தால் அவற்றில் நீந்த விடலாம். குளங்கள் மற்றும் தண்ணீரில் வசதி இல்லாதபோது உடல் மீது அடிக்கடி நீரை தெளிக்கலாம். பண்ணை அளவில் எருமைகளை பராமரிப்போர்,
எப்போதும் அவற்றை கட்டியே வைத்திராமல் விசாலமான அடைப்புகளால் சுதந்திரமாக திரிய விட வேண்டும். கோடையில்

கோழி வளர்ப்பு
இறைச்சிக் கோழிகளில் கோடை காலத்தில் இறப்பு அதிகம் இருக்கும். சுற்றுப்புற வெப்பநிலை அளவில் கூடுதலாகும் போது அதிக வெப்பத்தை கோழிகளால் வெளியேற்ற இயலாது. வெயில் காலத்தில் முட்டை கோழிகளுக்கு இரண்டரை சதுர அடியும், இறைச்சி கோழிகளில் ஒரு கோழிக்கு ஒன்னரை சதுர அடியும் இட வசதி தேவை. இதன் மூலம் கோழி வீட்டின் வெப்பநிலை உயர்வை தடுக்கலாம். இந்த அளவிற்கு ஏற்ப கோழிகள் எண்ணிக்கை இருக்க வேண்டும். அளவு மீறினால் கோழி எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையின் உட்புற வெப்ப நிலையை குறைக்க பக்கவாட்டில் சாக்குப்பைகளை தொங்க விட வேண்டும். தண்ணீர் தொட்டிகளையும் கூடுதல் எண்ணிக்கையில் வைப்பது நல்லது.
கோழிகளுக்கு உலர்ந்த தீவனங்களை தண்ணீரில் பிசைந்து வைக்க வேண்டும். இதனால் தீவனம் உண்பது அதிகரிக்கும். முட்டையிடும் கோழிகளுக்கு தீவனத்தில் கால்சியம் சத்து மற்றும் கிளிஞ்சல்களை சேர்த்து கொடுத்தால் கோழிகள் தோல் முட்டைகள் இடாது.
வெப்பம் அதிகமாகி கோழிகள் தளர்ச்சியடையும் சூழ்நிலை ஏற்பட்டால், 'வைட்டமின் சி' மருந்தினை 100 கோழிகளுக்கு 500 மில்லி என்ற அளவில் கொடுக்கலாம். அல்லது ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தரலாம். அதே போல் 'பி காம்ப்ளக்ஸ்' மருந்தினை 40 மில்லி அளவில் நீரில் கலந்து தரலாம். கோடையில் கால்நடைகளை முறையாக பராமரிப்பதால் நஷ்டத்தில் இருந்து தப்பலாம். லாபத்தை நோக்கி விவசாயிகள் செல்லலாம். தொடர்புக்கு: 94864 69044.
-டாக்டர் வி.ரஜேந்திரன்
கால்நடை இணை
இயக்குனர்(ஓய்வு), நத்தம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X