வெங்கியைக் கேளுங்க!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
00:00

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

தும்மல் எதனால், ஏன் வருகிறது?
கே.கீர்த்தனா, 6ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், கோவை.

சுவாசிக்கும் காற்று தவிர, வேறு பொருட்கள் மூக்கினுள் நுழையும்போது, அதனை உடனே வெளித்தள்ள உடல் செய்யும் அனிச்சைச் செயல் தும்மல். மூக்கின் உட்பகுதி சிறு சிறு முடியிழைகளால் நிரம்பியிருக்கிறது. சுவாசிக்கும் காற்றில் தூசு, துரும்பு இருந்தால், அதை வடிகட்டி உள்ளே அனுப்பும் வேலையை முடியிழைகள் செய்கின்றன. இந்த முடிகளின் கீழே உள்ள மென்மையான சவ்வுப் படலம், நிறமற்ற திரவத்தைச் சுரந்து தூசுகளை மூக்கின் வழியே செல்லாமல் தடுக்கிறது. அளவுக்கு அதிகமாக இந்தத் திரவம் சுரந்தால், நுரையீரல், தொண்டை, வாய், வயிற்றுத் தசைகள் ஆகியவை தூண்டப்படுகின்றன. அதன்பிறகு சுவாசப் பாதையில் உள்ள காற்றை வெகு அழுத்தத்துடனும், சுமார் மணிக்கு 160 கி.மீ. வேகத்துடனும் வெளியே தள்ளி, கசியும் நீருடன் அந்த தூசு, துரும்புகளை தும்மல் மூலமாக வெளியேற்ற வைக்கிறது. மாசு தவிர, பல்வேறு விதமான ஒவ்வாமைகளும் தும்மல் வரக் காரணமாக இருக்கின்றன.

முருங்கை, பூவரசு போன்ற மரங்களில் திடீரென்று கம்பளிப் பூச்சி வருவது எப்படி?
எஸ். கோகுலலட்சுமி, 9ம் வகுப்பு, திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி
.
யூப்டெரடே மொல்லிஃபெரா (Eupterote mollifera) என்பது ஒருவகை அந்துப்பூச்சி. இது மழைக்காலத்துக்குப் பிறகு, முருங்கை, பூவரசு போன்ற மரங்களில் முட்டையிடும். அந்த முட்டைகளில் இருந்து பூச்சிகள் வெளிவரும். இந்த உயிர் சுழற்சியின் பகுதியே, மரங்களில் பல்கிப் பெருகக் காரணமாக இருக்கின்றன. கம்பளிப் பூச்சிகள் மரத்தின் இலைகளைத் தின்று கொழுத்து வளரும். இவை தன் உடல் எடையை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு இலைகளை உண்பதால், 'உண்ணும் இயந்திரங்கள்' (eating machines) என்றும் அழைக்கப்படுகின்றன. கம்பளிப் பூச்சிகளின் புரதச்சத்து காரணமாக, பல உயிரினங்கள் இவற்றை உணவாக உண்டு வாழ்கின்றன. அத்தகைய எதிரிகளிடமிருந்து தங்களைக் காக்கவே, நச்சுத்தன்மையுடனும், அருவருப்பான தோற்றத்துடனும் விதவித வண்ணங்களில் காணப்படுகின்றன.

எரிமலையின் வயதை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?
சி.சிவக்கண்ணன், 7ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கலைஞர் நகர், கடலூர்
.
லாவாவை வைத்து வயதைத் தெரிந்து கொள்ளலாம். லாவா (Lava) என்பது எரிமலை குமுறும்போது, வெளிவரும் உருகிய பாறைக் குழம்பு. இதன் வெப்பநிலை 700°C முதல் 1200°C வரை இருக்கும். எரிமலை வெடிப்பால், லாவா உமிழப்படுவதற்கு முன்பு, பூமிக்கு அடியில் இருக்கும். எரிமலைக் குழம்பாக வெளியே வந்தபின், அவற்றின் மீது காஸ்மிக் கதிர்கள் படும். காஸ்மிக் கதிர்கள் படும்போது, ஹீலியம் -3 போன்ற வினோத ஐசோடோப்புகள் உருவாகும். ஒரு குறிப்பிட்ட லாவா பாறையில் எவ்வளவு செறிவான ஹீலியம்- 3 இருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம், எவ்வளவு காலம் அது காஸ்மிக் கதிர்களால் தாக்கப்பட்டு வந்துள்ளது என்பதைக் குறிக்கும். அதாவது எப்போது அந்த லாவா பொருள் வெளியே வந்தது என்பதை அறிய முடியும். இதிலிருந்து, அந்த எரிமலையின் வயதை அனுமானிக்கலாம். இதுபோன்ற சில உத்திகளை அறிவியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். சீறும் விதம், வெளிவரும் வாயுக்கள், எரிமலைக் குழம்பு, வெடித்துச் சிதறும் பாறைகள் ஆகியவற்றைக் கொண்டு, எரிமலைகளை வகைப்படுத்தி இருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

மூக்குக் கண்ணாடி அணிந்து சிவப்பு மின் விளக்கைப் பார்த்துவிட்டு, கண்ணாடியின் ஓரம் வழியே அதே விளக்கைப் பார்த்தால் நீல நிறத்தில் தெரிகிறதே ஏன்?
ஆர். அழகுமேகலா, இளங்கலை விலங்கியல் 2ம் ஆண்டு, இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.

நிறப்பிறழ்ச்சி (chromatic aberration) எனும் நிகழ்வின் விளையாட்டுதான் இது. மூக்குக் கண்ணாடி ஒருவகை லென்ஸ். லென்ஸ் என்பது, பற்பல முப்பட்டகங்களின் தொகுப்பு. அதன் வழியே ஒளி பாயும்போது, நிறப்பிரிகை ஏற்படும். அவ்வாறு ஒரு முப்பட்டகத்தின் வழி ஏற்படும் நிறப்பிரிகையை, மற்றொரு முப்பட்டகம் சரிசெய்துவிடும்.
ஆனாலும், இங்கும் அங்குமாக மிஞ்சும் நிறப்பிரிகை நிறப்பிறழ்ச்சியை தோற்றுவிக்கும். லென்ஸ் ஆனது சிவப்பு நிறத்தைவிட, நீல நிறத்தை கூடுதலாகக் குவிக்கும். எனவே, நிறப்பிறழ்ச்சியில் நீல நிறத்தின் சாயல் தென்படும். குறிப்பாக, லென்ஸ் விளிம்பில் இந்த நிகழ்வு அதிகமாக இருப்பதால், எளிதில் வெளிப்படுகிறது. உங்கள் ஸ்பெக்ஸ் கண்ணாடியில் இதுபோல நீல நிறம் அடிக்கடி தென்பட்டால், கண் மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்ளலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X