கொக்கு பறக்கும்; ஆட்டோ பறக்குமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
00:00

விளையாடத் தேவையான நபர்களின் எண்ணிக்கை: குறைந்தது நான்கிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளையாட்டின் சுவாரஸ்யம் கூடும்.
விளையாடத் தேவையான இடம், பொருள்: வீட்டுக்குள் உட்கார்ந்தும் விளையாடலாம். பொருள் எதுவும் தேவையில்லை.
விளையாடும் முறை: விளையாட்டுக் குழுவில் யாரேனும் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தலைவர் உட்பட எல்லோரும் வட்டமாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். அனைவரும்
உள்ளங்கைகளை தரையோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
தலைவர் முதலில், காக்கா பற பற என்பார். உடனே மற்றவர்கள், பறவை பறப்பது போல் கைவிரல்களை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.
இப்படியாக, கொக்கு பறபற, கோழி பறபற, மைனா பறபற என்று ஒவ்வொன்றாகச் சொல்லும்போது, குழுவில் உள்ள மற்றவர்களும் கைகளை பறப்பது போல் அசைக்க வேண்டும். திடீரென, தட்டு பறபற, ஆட்டோ பறபற, நாய் பறபற என்று ஏதேனும் பறக்காத பொருளைக் குறிப்பிட்டு, பறபற என்று தலைவர் சொல்வார். அப்படி பறக்காத பொருளைக் குறிப்பிட்டால், குழுவினர் யாரும் எந்த அசைவையும் மேற்கொள்ளக் கூடாது. கைகளை தரையோடு தரையாகத்தான் வைத்திருக்க வேண்டும். மாறாக, யார் தவறாக கைகளை பறப்பது போல் சைகை மேற்கொள்கிறாரோ, அவர் ஆட்டமிழந்து விட்டார். குழுவிலிருந்து வெளியேற வேண்டும்.
தலைவரின், கட்டளை இடும் வேகம் ஆரம்பத்தில் மெதுவாக இருக்கும். ஆனால், போகப் போக வேகமெடுக்கும். இதனால், மிகவும் உன்னிப்பாக கவனித்து, நமது கை அசைவுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாம் அவுட் ஆக வேண்டியதுதான். குழுவில் யார் கடைசிவரை எஞ்சியுள்ளாரோ, அவர்தான் வெற்றிபெற்றவர். அடுத்த சுற்று ஆட்டத்தை தலைமையேற்று, அவர் வழிநடத்துவார். எவ்வளவு வேகத்திலும், உன்னிப்புடன் கவனித்துச் செயல்படுதல் என்பதே விளையாட்டின் நோக்கம்.
- மு.கோபி

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X