தேதி சொல்லும் சேதி | பட்டம் | PATTAM | tamil weekly supplements
தேதி சொல்லும் சேதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மே
2017
00:00

மே 8, 1828 - ஹென்றி டூனான்ட் பிறந்த நாள்
போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ, செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901ல், அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்றார். இவர் பிறந்த நாள், உலக செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

மே 11, 1897 - சுத்தானந்த பாரதியார் பிறந்த நாள்
ஆன்மிகத்திலும், இலக்கியத்திலும் சிறந்து விளங்கினார். கவிதைகள், உரைநடை, மேடை நாடகங்கள், தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பாடல்களை இயற்றினார். திலகர், காந்திஜி, நேதாஜி போன்றோருக்கு, நெருங்கிய நண்பராக இருந்தார். கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்டார்.

மே 11, 1998 - இந்திய தேசிய தொழில்நுட்ப நாள்
இதே நாளில் புத்த பூர்ணிமா அன்று பொக்ரானில் இரண்டாவது அணுகுண்டு சோதனையை இந்தியா நடத்தியது. இதை நினைவுகூர தொழில்நுட்ப நாள் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தொழிலகங்களுக்கும், தனிநபர்களுக்கும் இந்த நாளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

மே 12, 1820 - ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள்
மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் மருத்துவ சேவை புரிந்தார். செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதலில் தொடங்கினார். 'கைவிளக்கேந்திய காரிகை' என்று அழைக்கப்பட்டார். இவரின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் சர்வதேச செவிலியர் நாள் கொண்டாடப்படுகிறது.

மே 13, 1918 - பாலசரஸ்வதி பிறந்த நாள்
பரதம் என்றதும் நினைவுக்கு வருபவர். பிரபல வீணைக் கலைஞரான தனம்மாளின் பேத்தி. உலகம் முழுக்க பரதக் கலையைப் பரப்பினார். இந்திய அரசின் உயரிய விருதுகளான, பத்மபூஷன், பத்மவிபூஷன் பெற்றிருக்கிறார்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X