நடைப்பயிற்சி அவசியமா,இல்லையா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
00:00

எல்லா இடங்களுக்கும் வாகனங்களில் போகும் சொகுசு வாழ்க்கைக்கு, இன்றைய சமூகம் பழகி உள்ளது. உடற்பருமன் அதிகரித்துவரும் சூழலில், மாணவர்களுக்கு நடைப்பயிற்சி அவசியமா? அவசியமில்லையா? என்பது பற்றி அடையாறு, வித்யா ரத்னா பி.டி.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விவாதிக்கிறார்கள்.

ஹர்சினி: மாணவர்களுக்கு நடைப்பயிற்சி வேணும். இன்னிக்கு ஸ்கூலுக்கு அம்மா அப்பா யாராச்சும் ஸ்கூட்டியில் கொண்டுவந்து விடுறாங்க. யாருமே நடக்கிறது கிடையாது. அதனாலதான் நடை அவசியம்னு சொல்றோம்.

ஹரிணி ஸ்ரீ: அவங்க சொல்ற மாதிரி, மாணவர்களுக்கு நடைப்பயிற்சி கட்டாயமில்லை. காலையில எழுந்து, கொஞ்சம் படிப்பு, ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டு, அப்புறம் ஸ்கூலுக்கு நடந்தே வா, நடந்தே போ. ஜங்க் ஃபுட்ஸ் ஏன் சாப்பிடுற? அதனாலதான் வெயிட் போடுது. ஸ்கூல்லேயும் யோகா இருக்கு. ஸ்போர்ட் ஆக்டிவிட்டி இருக்கு. அதையெல்லாம் செய். அப்புறம் எதுக்குத் தனியா வாக்கிங்?

துர்காதேவி: இப்ப நீங்க, சொல்ற மாதிரி தனியா எல்லாம் வரமுடியாது. சின்னச்சின்ன பசங்களை எல்லாம் கடத்திக்கிட்டு போறதா, எத்தனை நியூஸ் பார்க்கிறோம். அப்புறம் எப்படி வீட்டுல தைரியமா அனுப்புவாங்க. இன்னிக்கு நிறைய வீட்டுல பேரண்ட்ஸ் ரெண்டுபேரும், வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்காங்க. இதுல ஹெல்தியா எங்கே சாப்பிடுறது. ஏதோ சமைச்சுக்கொடுக்குறாங்க. பசங்களும் சிப்ஸ், பிஸ்கட்னு வாங்கிச் சாப்பிடுறாங்க. இப்படி ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுறதால, கண்டிப்பா பசங்களுக்கு வாக்கிங் தேவை.

திரிஷா:
மாணவர்கள்தான் கேக்கறாங்கன்னா... அம்மா அப்பா எதுக்கு இருக்காங்க? நல்வழிப்படுத்தறது பெற்றோர் வேலைதானே? ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்கன்னு சொல்றதுக்காக நூடுல்ஸ், பிஸ்கட் எல்லாம் கொடுத்து அனுப்பலாமா? தப்பில்லையா? சாயங்காலம் வரும்போது, கடையில போய்ப் பழங்கள் வாங்கிட்டு வாங்க. அதைப் பசங்களுக்குக் கொடுங்க. சின்னப்பசங்களைப் பேரண்ட்ஸ் ஸ்கூலில் விடுறது நியாயம். பெரிய பசங்களுக்கும் அப்படியே இருந்தா எப்படி? நாம மெச்சூரிட்டியை எப்படிக்காட்றது.? தனியா சிந்திக்க வேணாமா? தனியா வரும்போது, வழியில எதுனா பிரச்னையின்னா, ஸ்கூலில் வந்து சொல்லுங்க. அதே மாதிரி, இன்னிக்கு நிறையபேரு மொபைல் வச்சிருக்கீங்க, அது மூலமா பேரண்ட்ஸுக்கு செய்தி சொல்லுங்க. அதைவிட்டுட்டு, காலையில வாக்கிங் போகணும், மாலையில வாக்கிங் போகணுங்கிறதெல்லாம் வேலைக்காகாது.

ஸ்வேதா: எல்லோரையும் நடந்து வாங்கன்னு சொல்ற நீங்க, எத்தனை பேர் பெற்றோர் இல்லாம நடந்து வர்றீங்க? பழங்கள் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றது எல்லாம் சரி, ஆனால், நாம ஜங்க் ஃபுட்ஸ்தானே கேட்கிறோம். விடியக் காலையில எழுந்திருச்சி, வாக்கிங் போறது நல்லதுதானே?

லீனா: எல்லோரும் ஸ்கூலுக்கு வரும்போது, பேரண்ட்ஸ் கொண்டு விடறாங்கன்னு சொல்றாங்க. ஏன் அவங்க கொண்டு போய் விடறாங்க? நாம லேட் பண்ணுறோம். நாம சீக்கிரம் ரெடியாகிட்டா, நாம நடந்துபோறதுக்கு அனுமதிப்பாங்க. காலையில எழுந்து, வாங்கிங் போய் லேட் ஆகிறதைவிட, ஸ்கூலுக்கு நடந்துவரலாம். ஏன் சைக்கிள் ஓட்டிட்டு ஸ்கூலுக்கு வரலாமே! ஸ்கூலில் நல்லா விளையாடுங்க. அதுவே போதும்.

ஹர்சினி: நடைப்பயிற்சி செய்யும்போது, முதல்நாள் நடத்தின பாடங்களை அப்படியே நினைவுபடுத்திக்கலாம். நல்ல ஃப்ரஷ் ஏர் கிடைக்கும். சுத்தமான காற்றைக் காலையிலேயே சுவாசிச்சா.. நாள் முழுக்க நம்ம உடம்பும், மூளையும் ஃப்ரஷ்ஷா இருக்கும்.

ஹரிணி ஸ்ரீ: ஃப்ரஷ் ஏர் எல்லாம் நம்ம சிட்டியில வாய்ப்பே இல்லை. தவிரவும், இவங்க வாக்கிங் போகும்போது, மொபைல் ஆப்ஸ் போட்டுகிட்டு நடக்கறாங்க. அதையும் பார்த்துப் பார்த்து நடந்து இன்னும் ஸ்ட்ரெஸ் அதிகமாகுது. வீட்டுல அம்மா சொல்ற வேலையைச் செஞ்சாலே போதும். மாணவர்களுக்குத் தனியா நடைப்பயிற்சி எல்லாம் தேவையே இல்லை.

துர்காதேவி: பாடங்களை நினைவுபடுத்திப் பார்க்கிறது ஸ்ட்ரெஸ் கிடையாது. மத்தவங்களிடம் சொன்னா தப்பாகிடுமேன்னு பயப்பட வேண்டாம். நமக்குள்ளேயே சொல்லி பார்க்கறது தப்பில்லை. அப்புறம் பழங்கள் சாப்பிடுன்னு சொல்றீங்க. தினமும் பழங்களும் பாலும் குடிச்சுக்கிட்டு இருக்க முடியாது. சமைச்ச உணவு எப்படி விதவிதமான சுவையாக இருக்குதோ, அதே மாதிரி பழமும், பாலும் இருக்குமா? போர் அடிச்சுடும்.

திரிஷா: உங்களை யார் ஒரே மாதிரி சாப்பிடச்சொன்னா.. அதுலயே விதவிதமாச் செஞ்சு சாப்பிடலாமே? நாம படிச்சத இன்னொருத்தங்க கிட்ட சொன்னா, ஏதாவது தப்புன்னா திருத்துவாங்க. நாமளே சொல்லிக்கிட்டு இருந்தா, நாம் செய்யுற தப்பும் தெரியாமல் போயிடும்.

ஸ்வேதா: வாக்கிங் எல்லாம் இப்பவே போய்ப் பழகிகொண்டால், கொழுப்பு எல்லாம் சேராது. வீசிங் பிரச்னை எல்லாம் வராது. அதனாலதான் நடைப்பயிற்சி தேவைன்னு சொல்றோம்.

லீனா: நடைப்பயிற்சிக்கு எதிரானவங்க நாங்க இல்லை. அந்தக் காலத்துல எல்லோருமா நடைப்பயிற்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இல்லையே, மாணவர்களாகிய நாம், வாக்கிங் போறதுக்குப் பதிலாக விதவிதமாக விளையாடலாம், சைக்கிளிங் போகலாம். நம்ம பாரம்பரிய முறைப்படியான நல்ல உணவை எடுத்துக்கொண்டால், சிறப்பாக வாழ முடியும். ஜங்க் ஃபுட்ஸை தவிர்ப்போம். ஆரோக்கியமா இருப்போம்னு சொல்றோம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X