கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2011
00:00

கேள்வி: பல்வேறு அலகுகள் இடையே மாற்றங்களைத் தருகிற வெப்சைட் ஒன்று சொல்லுங்களேன். அடிக்கடி இது தேவைப்படுகிறது. -டி.கமலேஷ் குமார், மதுரை.
பதில்: உங்களிடம் விண்டோஸ் 7 சிஸ்டம் இருந்தால், அதில் உள்ள கால்குலேட்டரைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம். இந்த கால்குலேட்டரின் சிறப்புகள் குறித்த தகவல் சில வாரங்களுக்கு முன் இந்த பகுதியில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். மாறாக, இதற்கென தனியே தளம் எல்லாம் செல்ல வேண்டாம். கூகுள் தேடுதளம் பெற்று, அதன் சர்ச் பாக்ஸில், நீங்கள் மாற்றம் வேண்டும் அலகினை டைப் செய்து என்டர் செய்தால், உடனே விடை கிடைக்கும்.

கேள்வி: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட மொபைல் போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்த விரும்புகிறேன். ஒரு சில போன்களைப் பரிந்துரைக்கவும். விலை தெரிந்தால் குறிப்பிடவும். -சா. கணேஷ் ராஜன், சிதம்பரம்.
பதில்: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை விரும்பும் நீங்கள் அதற்கான காரணத்தைக் கூறி இருந்தால், உங்களின் மனப்போக்கு குறித்து நாங்கள் அறிந்திருப்போம். இந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பெரிய அளவில் மக்களை அடையும் என அனைவரும் எதிர்பார்க் கின்றனர். இனி உங்கள் கேள்விக்கு வருவோம். ரூ.10,000 விலைக்குக் கீழாக எனில், சாம்சங் காலக்ஸி 5 என்ற மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் 600 MHz ப்ராசசர் செயல்படுகிறது. டச்விஸ் யூசர் இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளைத் தருகிறது. Wi-Fi, GPS, தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8,800 என்ற அளவில் இருக்கலாம். அடுத்ததாக எச்.டி.சி. வைல்ட் பயர் என்ற திறன் மிக்க போனைக் குறிப்பிடலாம். விலை ரூ.13,000 என்ற அளவில் உள்ளது. அடுத்து சோனி எரிக்சன் எக்ஸ் 10 மினி ப்ரோ, என்ற ஆண்ட்ராய்ட் போன் கவனிக்கத்தக்கது. இதன் விலை ரூ.15,000 எனக் குறிப்பிடப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி 3 என்ற ஆண்ட்ராய்ட் போன் ரூ. 15,000 என்ற அளவில் கிடைக்கிறது. ஏறத்தாழ அதே விலையில் எல்.ஜி. ஆப்டிமஸ் ஒன் என்ற போன் கிடைக்கிறது. ரூ.20,000க்கு மேலாக எனில், எச்.டி.சி. டிசையர், டிசையர் இஸட், டிசையர் எச்.டி., சாம்சங் காலக்ஸி எஸ் ஆகியவை உள்ளன.

கேள்வி: பல்வேறு சாப்ட்வேர் தொகுப்புகளை என் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட பாண்ட்ஸ் என் கம்ப்யூட்டர் பாண்ட்ஸ் போல்டரில் உள்ளது. திடீரென எந்த எழுத்துவகை யையாவது தேட வேண்டும் என எண்ணினால், சிரமமாக உள்ளது. எப்படி இந்த சிக்கலைத் தீர்ப்பது? -கா. ஜமுனா கைலாஷ், சென்னை.
பதில்: நிறையகிராபிக்ஸ் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஓ.கே. Fonts போல்டருக்குச் சென்று, எழுத்துவகை பைல்களின் பட்டியலைப் பார்க்கவும். அதன் பிரிவியூ காணவும். பின்னர், அதனைப் பயன்படுத்துகிறீர்களா என்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கவும். இப்போது இன்னொரு ட்ரைவில் Fonts2 என்று ஒரு போல்டரைத் தயார் செய்திடவும். இதுவரை ஒரு எழுத்து வகையினைத் தொட்டதே இல்லை என்று எண்ணினால், உடனே அதனைப் புதிய Fonts2 போல்டருக்கு நகர்த்தவும். கட் செய்து கூட பேஸ்ட் செய்திடலாம். Times, Ariel போன்ற சிஸ்டம் எழுத்து வகைகளைத் தொட வேண்டாம். அதே போல புரோகிராம் பெயர் கொண்ட(எ.கா. MS Outlook) எழுத்து வகையினையும் தொட வேண்டாம். இப்படியே வேண்டாத, அதிகம் பயன்படுத்தாத எழுத்து வகையினை, இன்னொரு போல்டருக்குக் கொண்டு சென்று வைத்துவிட்டால், பின்னொரு நாளில் ஏதேனும் ஒரு புரோகிராமில் குறிப்பிட்ட பாண்ட் இல்லாததால், இயக்குவதற்கு சிரமமாயிருந்தால், அந்த எழுத்து வகையினை மட்டும், மீண்டும் Fonts போல்டருக்கு மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: குழந்தை வளர்ப்பு குறித்து வெப்சைட்கள் உள்ளனவா? ஒன்றிரண்டினைக் கூற முடியுமா? -ஆர். மல்லிகா, நரசிங்கம்.
பதில்: இணையத்தில் எதுதான் இல்லை! குழந்தை வளர்ப்பு குறித்து நிறைய தளங்கள் உள்ளன. குழந்தை வளர்ப்பில் தனித் தனியாகத் தகவல் தரும் தளங்கள் உள்ளன. கூகுள் தேடுதளம் மூலம் இவற்றை நீங்கள் காணலாம். இருப்பினும் நீங்கள் கேட்டதற்காக, நான் கண்டவற்றில் சிறந்த ஒன்றைப் பற்றிக் கூறுகிறேன்.
அதன் முகவரி http://kidshealth.org/ இந்த தளம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர், குழந்தை மற்றும் இளம் வயது.முதல் பிரிவில் குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்து பல பிரிவுகள் உள்ளன. பொதுவான உடல்நலம், நோய் பற்றுதல், உணர்ச்சிகளும் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முன்னேற்றமும், சத்தான உணவு மற்றும் நலம், கர்ப்ப காலம் மற்றும் புதிய பிறப்பு, மருத்துவ பிரச்னைகள், நல்ல பெற்றோர்கள், முதல் உதவி மற்றும் பாதுகாப்பு, மற்றும் செய்தி மற்றும் தகவல்கள். இதில் தினந்தோறும் கேள்வி பதில் பிரிவுகளும் உள்ளன. அடுத்ததாக சிறு குழந்தைகள் பிரிவில், அவர்கள் வளரும் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப பல பிரிவுகள் தரப்பட்டுள்ளன. உடல்நலத்தைப் பேணுவது, உணவு வகை, ஒவ்வொரு நாளும் வரக்கூடிய உடல் நலப் பிரச்னைகள், மருத்துவ துறைக்கான சொற்கள், வளரும் நிலையில் வரக் கூடிய நோய்கள் என்ற பிரிவுகளில் நிறைய தகவல்கள் தரப்பட்டுள்ளன. இளம் வயது என்ற பிரிவில் எண்ணங்கள், உடல் போக்கு, நலமான பாலியியல், சரியான உணவு, மருந்து மற்றும் ஆல்கஹால், நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சரியான பள்ளிகள் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன. பல தலைப்புகளில் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. குழந்தை வளர்ப்பு பற்றி அறிய விரும்புவோருக்கான அருமையான தளம் இது.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் எக்ஸ்பி சிஸ்டத்தினை ரீ இன்ஸ்டால் செய்தார்கள். இப்போது கண்ட்ரோல் பேனல் சென்றால் வித்தியாசமாக இருக்கிறது. நான் முன்பு பார்த்தபடி இல்லை. எதனால் இப்படி ஏற்பட்டுள்ளது. மீண்டும் பழையபடி அமைக்க என்ன செய்ய வேண்டும்? -டி. தியாகராஜன், தேனி.
பதில்: எக்ஸ்பி அமைக்கையில், மாறா நிலையில், கண்ட்ரோல் பேனல் கேடகிரி வியூ (Categroy View) என்ற நிலையில் தரப்படும். இந்த நிலையில் பார்க்கையில் கண்ட்ரோல் பேனலில் பத்து வகை தரப்பட்டிருக்கும். நீங்கள் ஏற்கனவே வைத்துப் பார்த்தது கிளாசிக் வியூ. இந்த வியூவிற்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம். வலது பக்கம் பார்த்தால், அங்கே Switch to Classic View என்று ஒரு லிங்க் இருக்கும். இதில் கிளிக் செய்தால், நீங்கள் முன்பு வைத்துப் பார்த்தபடி பட்டியல் கிடைக்கும். இதிலும் பல ஆப்ஷன் உண்டு. மெனுவில் வியூ கிளிக் செய்து, அதிலிருந்து தெரிந்து கொள்ளவும்.

கேள்வி: ஒரு கட்டுரையில் எக்ஸெல் டேட்டா ரேஞ்சில் எட்ஜுக்குச் செல்லவும் என்று குறிப்பிட்டிருந்தது. இதில் ரேஞ்ச், எட்ஜ் என்பது என்ன? எட்ஜுக்கு எப்படி செல்வது? -கா.ராஜலிங்கம். பழனி.
பதில்: டேட்டா தரப்பட்டுள்ள கடைசி செல்லை ஆங்கிலத்தில் “edge” என்று அழைக்கிறோம். ஒரு டேட்டா ரேஞ்சின்ல் (Data Range) இறுதியாக டேட்டாவைக் கொண்டிருக்கின்ற செல்லை இது குறிக்கிறது. டேட்டா ரேஞ்ச் என்பது தொடர்ச்சியாக டேட்டாவைக் கொண்டிருக்கின்ற செல்களாகும். ரேஞ்ச் என்பதன் முடிவில் ஒரு காலியான படுக்கை வரிசை அல்லது நெட்டு வரிசை இருக்கும். அதன் பின்னால் மேலும் ஒரு டேட்டா ரேஞ்ச் தொடங்கலாம்.
இனி எப்படி முனைக்குச் செல்வது என்று பார்க்கலாம். இந்த டேட்டா ரேஞ்சில் ஏதேனும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுத்து அதில் கர்சரை வைத்திடவும். கர்சர் செல்லின் முனையில் வைக்கப்பட வேண்டும். அப்படி வைக்கப்படுகையில் அந்த கர்சர் நான்கு வழி அம்புக் குறியாக மாறுவதைக் காணலாம். இனி இருமுறை மவுஸைக் கிளிக் செய்திடுங்கள். உடனே டேட்டா ரேஞ்சின் முனைக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் செல்லின் வலது முனையில் கர்சரை வைத்து கிளிக் செய்தால் வலது முனைக்கும் இடது முனையில் கிளிக் செய்தால் இடது முனைக்கும் செல்வீர்கள். அதே போல செல்லின் கீழாக கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் கீழ் முனைக்கும் மேலாகக் கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் மேல் முனைக்கும் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதன் மூலம் ஒரு மூலைக்குச் செல்ல பல முறை கீகளை அழுத்தும் வேலை மிச்சமாகிறது.

கேள்வி: என் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் உள்ள ஸ்டார்ட் புரோகிராமில் வேர்ட் ஐகான் வைத்துப் பயன்படுத்தி வந்தேன். இதனை ஒரு நாள் இழுத்து, இருக்கட்டுமே என நினைத்து, டெஸ்க்டாப்பில் வைத்தேன். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ள வேர்ட் லிஸ்ட்டிங் மறைந்துவிட்டது. எப்படி மீண்டும் இந்த ஸ்டார்ட் மெனுவில் அதனைக் கொண்டு வருவது? -கா.சுந்தரேசன், புதுச்சேரி.
பதில்: ஐகானை ரைட்-கிளிக் மூலம் இழுத்து டெஸ்க்டாப்பில் விழும் பொழுது கிடைக்கிற மெனுவில் Copy shortcut(s) Here கட்டளையை நீங்கள் தேர்வு செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக Move Shotcut(s) Here கட்டளையைத் தேர்வு செய்துள்ளீர்கள். அதனால்தான் வேர்டின் ஐகான், புரோகிராம் மெனுவில் இல்லாமல் போய்விட்டது. அதைக் கொண்டு வர நீங்கள் செய்ய வேண்டியவை.
1) Start=>Settings=>Taskbar & Start Menu ஞுணத கட்டளை மெனுவை க் கிளிக் செய்யுங்கள்.
2) Start Menu Program என்ற டேபை கிளிக் செய்து அதிலுள்ள Add பட்டனை அழுத்துங்கள்.
3) Create Shortcut என்ற விஸார்டு கிடைக்கும். அதிலுள்ள Browse பட்டனை அழுத்தி எம்எஸ் வேர்ட் அப்ளிகேஷனிற்கான பைலைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த பைலின் பெயர் Winword.exe ஆகும். இது C:××××××Program files×××××Microsoftoffice×office10 என்ற போல்டரில் காணப்படும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆபீஸ் தொகுப்பை பொறுத்து இந்த போல்டரில் காணப்படும் பெயர்கள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.
4) Winword.exe பைலைத் தேர்வு செய்து, விஸார்டில் அதை கொண்டு வந்து பின்பு Next பட்டனை அழுத்துங்கள்.
5) Programs என்ற போல்டர் தேர்வாகியுள்ளதா எனப் பாருங்கள். இல்லையெனில் அதை கிளிக் செய்யுங்கள். பின்பு Next பட்டனை அழுத்துங்கள்.
6) ஷார்ட்கட்டிற்கான பெயரை (எ.கா.,Ms Word) டைப் செய்து பின்பு Finish மற்றும் ஓகே பட்டன்களை அழுத்துங்கள்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தினேஷ் - Mumbai,இந்தியா
28-ஜன-201120:42:37 IST Report Abuse
தினேஷ் when iam start my pc that time only Msoutlook countinous mail download for repeat the mail .after iam del the webmail it will stop whats the solution,
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பெங்களூர்,இந்தியா
24-ஜன-201116:44:49 IST Report Abuse
ராஜேஷ் Hello Kamalesh, Please use Convert.ex_ tool to unit calculation. Its a free tool. you can search in google. Thanks
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X