கோடையில் தென்னையை காக்கும் வழி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2017
00:00

தமிழகத்தில் மூன்று மாத கோடை: ஆண்டுக்கு ஆறு மாதம் மித உஷ்ணம் காலம். மூன்று மாதம் குளிர் காலம். அடுத்த மூன்று மாதம் கோடை காலம். ஒன்பது மாதம் நன்கு வளர்ந்த தென்னை மரங்கள் மூன்று மாத கோடை வெயில் தாக்கி தென்னை மரங்களின் மட்டைகள் பழுப்பேறி சரிந்து செத்து விடுகிறது.
55 லிட்டர் தண்ணீர்: நாள் ஒன்றுக்கு 3 அங்குலம் வாய் அகலமுள்ள 'டெலிவரி' குழாய் மூலம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் தண்ணீர் சப்ளை கிடைக்குமானால், அந்த தண்ணீரை கொண்டு 1-0 - 25 ஏக்கர் வரை உள்ள தென்னை மரங்களை காப்பாற்றி விடலாம். ஒரு தென்னை மரம் நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் - 65 லிட்டர் வரை கிரகித்தால் தான் ஆண்டுக்கு 250 - 300 இளநீர் மற்றும் தேங்காய்கள் தரும்.
உதிர்ந்த மட்டைகள்: உரித்த மட்டைகள், உதிர்ந்த மட்டைகள், இலை சருகுகள், பாளை, பன்னாடைகளை தென்னை மரத்தை சுற்றி 5 அடி அகலத்தில் பரப்பி விடும்போது தண்ணீர் ஆவியாவதை தடுத்து ஒரு மாதம் வரை ஈரம் பாதுகாக்கப்படுகிறது. கரையான் மருந்தை ஐந்து பங்கு காய்ந்த மண்ணுடன் கலந்து லேசாக பயன்படுத்தவும்.
வாய்க்கால் வழி: தென்னை மரங்களில் இருந்து 5 அடி தள்ளி ஒரு சதுர வரப்பு அமைக்கவும்.
அதாவது 10க்கு4 சதுர அடி சதுர வரப்பு அமைத்து, வரப்பின் விளிம்பு வழியாக ஒரு வாய்க்கால் வழியாக அமைத்து, அதன் வழியாக தண்ணீரை ஒரு தென்னைக்கு பாய்ச்சியதும், அடைத்து வாய்க்கால் வழியாக அடுத்து தென்னைக்கு கொண்டு பாய்ச்ச வேண்டும்.
இவ்வாறு பாய்ச்சும்போது தண்ணீரை நிறையப்பாய்ச்ச வேண்டும். தண்ணீர் குறைவாக கிடைக்குமானால் 15 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சினால் கூட தென்னை மரங்கள் பாதிக்காது.
முதல் நூறு தென்னை மரங்களுக்கு மட்டும் நீர் பாய்ச்ச முடியும் என்றால், அடுத்த நாள் கிடைக்கும் தண்ணீரை வாய்க்கால் வழி கொண்டு சென்று 101வது தென்னைக்கு பாய்ச்ச வேண்டும்.
இவ்வாறு தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கிடைக்கும் நீரை முறை வைத்து ஒழுங்குபடுத்தி பாய்ச்சி தென்னை மரங்களை காப்பாற்ற முடியும். தொடர்புக்கு 82204 59341.
-டாக்டர் வா.செ.செல்வம்
தென்னை ஆராய்ச்சியாளர்
திருவையாறு.

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X