நவீன தொழில்நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜன
2011
00:00

சீனித்துளசி: ஸ்டீவியா என்று அழைச் சர்க்கரை போன்ற இனிப்புப் பொருளை கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இலைகளில் அதிக இனிப்புத்தன்மை காணப்படுவதால் சாக்ரின் பொருளுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். சீனித்துளசியின் இலைகளில் 15-20 சதம் ஸ்டிவியோஸைடு உள்ளது. உலர்ந்த இலைகளில் 3-10 சதம் ஸ்டிவியோஸைடு உள்ளது. இது கரும்புச் சர்க்கரையைவிட 300 மடங்கு அதிக இனிப்புத்தன்மை கொண்டது. மிகக் குறைந்த அளவு கலோரியைக் கொண்டிருப்பதால் இதனை "கலோரி இல்லாத இயற்கை இனிப்பூட்டி' என அழைக்கிறார்கள்.
சர்க்கரை நோயால் பாதிக்கப் படுபவர்களுக்கு சீனித்துளசி இனிப்பூட்டி சிறந்ததாக அமையும். தற்சமயம் குளிர்பானம், இனிப்புகள் தயாரிப்பில் இது பயன்படுகிறது. இது 60-70 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. குறைவான பகல்நேரம் தேவை. இது ஒரு மிதவெப்ப மண்டல செடியாகும். இதன் வளர்ச்சிக்கு 30-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியம். பகல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசிற்கு குறையாமலும் இரவு நேர வெப்பநிலை 10 டிகிரி செல்சியசிற்கு குறையாமலும் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியது. மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 - 7.5க்குள் இருக்க வேண்டும். பொதுவாக தண்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக 15 செ.மீ. நீளம் உள்ள தண்டுக் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும். வேர்கள் உருவாவதை அதிகப்படுத்த ஐ.பி.ஏ. என்னும் வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தலாம். நிலத்தை நன்கு உழுது, ஏக்கருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு, மீண்டும் நன்கு உழுதுவிட வேண்டும். செடிகளை மேட்டுப் பாத்திகளிலும் வரப்புப் பகுதிகளிலும் வளர்க்க வேண்டும்.
மேட்டுப்பாத்திகளில் 30 x 40 செ.மீ. இடைவெளியில் செடிகளை நடவு செய்ய வேண்டும். வரப்புப் பகுதிகளில் நடவு செய்யுபோது 45 x 20 செ.மீ. இடைவெளி விடவேண்டும். நடவு செய்தபின் உடனடியாக நீர்ப்பாசனம் செய்வது மிகவும் அவசியம். நடவுக்கு பிப்ரவரி-மார்ச் மாதங்கள் சிறந்தவை. செயற்கை உரங்கள் பயன்படுத்துவது கிடையாது. ஒரு ஏக்கருக்கு 24:12:18 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் கொடுக்கக்கூடிய உரங்களைக் கணக்கிட்டு இடுவதன் மூலம் விளைச்சல் அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பாதியளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை அடியுரமாகவும், மீதமுள்ள தழைச்சத்தை முதல் அறுவடைக்குப் பின்னும் இடவேண்டும்.
சீனித்துளசி வறட்சியைத் தாங்காது. மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். களை எடுப்பது அவசியம். மிக முக்கியமான பின்செய் நேர்த்தி, பூக்களைக் கிள்ளிவிடுதல் நடவு செய்தபின் 30, 45, 60, 70 மற்றும் 80 நாட்களிலும் மற்றும் அறுவடையின்போதும் பூக்களை அகற்றிவிட வேண்டும். போரான் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க போராக்ஸ் 2 சதம் இலைவழி தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
நடவு செய்த 4-5 மாதங்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். அடுத்தடுத்து அறுவடைகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம். 3 வருடம் வரை வயலில் வைத்திருக்கலாம். அறுவடையின்போது செடியின் அடிப் பாகத்திலிருந்து 10 செ.மீ. உயரம் வரை விட்டு மேல்பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு முறை சராசரியாக 1 முதல் 1.2 டன் வரை உலர்ந்த இலைகளை அறுவடை செய்யலாம். (தகவல்: அ.சங்கர், பா.ஆனந்த், ரா.அருள்மொழியான், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு-636 602. 94432 06004)

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X